ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, திருச்சி ஞான விளக்கக் கூட்டம் - (பிப்ரவரி 2013)

04.02.13 06:12 PM

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் ஞான விளக்கக் கூட்டம் ஆத்மா சகோதரர் ஜனாப். பக்ருத்தீன் அலி அஹமது ஹக்கிய்யுல் காதிரிய்  அவர்கள் இல்லத்தில் இரவு 8 மணிக்கு திருச்சி அவைத்  தலைவர்  தமிழ்மாமணி. மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய்  B.Com., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதன்மையாக - சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் திருக்கட்டளைற்கிணங்க, சிதறுண்ட சிந்தனைகளை ஓர்முகப்படுத்துவதற்கு மூற்று நிமிட நேரம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.
மௌலவி. சத்தார்கான் ஆலிம் யாசீனிய் ஹக்கிய்யுல் காதிரிய்  கிராஅத் ஓதினார். A. நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய், M. பழ்ளுல் ஹக் ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோர் ஏகானந்தப் பாடலைப்  பாடினர்.

தமிழ்மாமணி. மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய்  B.Com., அவர்கள் தம் தலைமையுரையில், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருஞ்சிறப்புகளையும் - அற்புதங்களையும் எடுத்துக்கூறினார்கள்.

அடுத்ததாக, மத்ரஸதுல் ஹஸனைன் பீ ஜாமிஆ யாசீன் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி. N. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி  ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும் ஜமால் முஹம்மது கல்லூரி அரபுமொழித் துறை பேராசிரியர் முஹியுத்தீன் அப்துல் காதிர் அவர்களும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிச் சிறப்புகள் பற்றியும் அவர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்ட சங்கைக்குரிய சஹாபாக்கள் பற்றியும் உரையாற்றினர்.
கூட்டத்தில் திருச்சியைச் சேர்ந்த முரீதுகளும் அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள்.

தௌபா பைத் மற்றும் துஆ - சலவாத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல் : A . நைனார் முஹம்மது அன்சாரி M.A. ஹக்கிய்யுல் காதிரிய், திருச்சி.

emsabai.ansari