ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணி நாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை)அவர்களின் திரு குடும்பத்தினருமானசங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் ஆன்மீக சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு ஜூன் மாதம் 10ம் தேதி 2012
ஞாயிற்றுக்கிழமை திருச்சி விமான நிலையத்தில் வருகை புரிந்தார்கள்.
விமான நிலையத்தில் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மெளலானா அவர்களை கலிபாக்களும்,முரீதீன்களும் வரவேற்றனர்.
பின்னர் சங்கைமிகு நாயகம் அவர்கள் மறுநாள் காலை 11ஆம் தேதி 2012 திங்கள்கிழமை திருச்சியில் உள்ள நமது மதரஸாவிற்கு வருகை புரிந்தார்கள். பின்னர் சங்கைமிகு நாயகம் அவர்கள் நமது மதரஸாவில்முரீதீன்கள்,மதரஸா
மாணவர்கள்,மதரஸா ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றி அருளாசி வழங்கினார்கள். இப்புனித நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது .