இந்தியாவின் பக்கம் ஏகத்துவ மணத்தைப் பரப்பி, நம்மைப் போன்று லட்சோப லட்ச மக்களுக்கு மார்க்கத்தையும் - ஞானத்தில் தெளிவையும் உருவாக்கி, சம்பை மௌலானா தோட்டத்தில் மறைந்து வாழும் சம்பை மஹ்மூதராம் சற்குரு நாயகர் ஜமாலிய்யா ஸய்யித் முஹம்மது மௌலானா நாயகம் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 64-ஆவது கந்தூரி விழா, ஹிஜ்ரி 1434 ஜமாதுல் அவ்வல் பிறை 1 - இல் 14.03.2013 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சம்பைப்பட்டினத்தில் அமைந்துள்ள தர்கா வளாகத்தில் சங்கைமிகு ஸய்யித் A . மஸ்ஊத் மௌலானா அல்ஹாதி அவர்கள் முன்னிலையில் வழக்கம்போல் -சீரோடும் சிறப்போடும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வின்போது, காலை 10 மணி அளவில் ஸுப்ஹான மௌலிதும் - 11.30 மணியளவில் புனித ராதிபதுல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா மஜ்லிஸும் சிறப்பாக நடைபெற்றது. புனித ராத்திப் மஜ்லிசின் அலங்காரமாக, சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்கள் துஆ ஓதினார்கள் புனித ராதிபில் சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட துஆ தமிழாக்கத்தை கலீபா ஆலிம் புலவர் S. ஹுசைன் முஹம்மது மன்பயீ அவர்கள் ஓதினார். மதியம் 1 மணியளவில் கந்தூரி உணவு விநியோகிக்கப்ப்பது.
சம்பை கந்தூரி விழாவில் மௌலானா திருக்குடும்பத்தார்கள், கலீபாப்பெருமக்கள், முரீதுப்பிள்ளைகள் பல்வேறு ஊர்களிலிருந்தும் திரளாகக் கலந்துகொண்டார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பேராவூரணி சபை பிள்ளைகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



















தகவல் : A . நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் M.A., திருச்சி.