சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் ஜூலை மாதம் 1ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு P.ஹாஜா முஹையதீன்ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமை தாங்கினார். கிராஅத் Er.N.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஒதினார்.ஏகாந்த பாடல் Adv.முஹம்மது மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.

தலைமை உரையாக P.ஹாஜாமுஹையதீன் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்
குருவில் பனாவாகி விடுவது மிக முக்கியம்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Adv.முஹம்மது மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரிஅவர்கள் பராஅத் என்றால் விடுதலை,பாபத்திலிருந்து விடுதலை,தன்னை அறியாமல் இருப்பதுபாபம்,தன்னை அறிவது முக்கியம் என்ற தலைப்பில்உரையாற்றினார்.

திவான் அப்துல் காதர் ஹக்கிய்யுல் காதிரிவாப்பா நாயகத்தின் மனம் கோணாமல் நடப்பது தான் குருவில் பனா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

காதர் மீரா கனி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்வாப்பா நாயகத்தின் அன்பை நாம் முழுமையாக பெற்று,அவர்களுக்காகவேவாழ்ந்து,அவர்களையே எண்ணிக்கொண்டு,ஒன்றித்து இருப்பதே முக்தியும்,மோட்சமும் ஆகும் என்ற தலைப்பில்உரையாற்றினார்.

Er.N.அப்துல் ஜலீல் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்ரசூல் நாயகம் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களை நேசம் வைக்காமல் இறை நேசத்தை பெறமுடியாது. சம்பூரண மனிதனில் அல்லாஹ் மறைந்திருக்கிறான் என்று முஹையத்தின் ஆண்டகைகூறுகிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Pro.இப்ராஹிம் கலீல் ஹக்கிய்யுல் காதிரிஅவர்கள் தன்னை அறியும் அறிவு மேலான அறிவு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
.bmp)
Your content goes here...
.bmp)
தவ்பா பைத்யுடன்,அஸர் தொழுகையுடன் துஆ ஒதிதப்ருக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவடைந்த்து.