சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம்ஜூன் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்கு கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தலைமைதாங்கினார்.கிராஅத் மெளலவி பக்கிர் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்ஒதினார்.

தலைமை உரையாக கலீபா Adv.A.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் ஹக்கு,கல்கு இரண்டும்வேறல்ல ஒன்றேதான் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஏகாந்தப்பாடலைமுஹம்மது மீர் ஜவ்வாது ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் பாடினார்.

Eng.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள்மிஃராஜ் இரவின் உள்ரங்கமான விளக்கத்தை நமது ஷெய்கு நாயகம் அளித்திருக்கிறார்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

காஞ்சி முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் நமது ஷெய்கு நாயகம்அவர்களிடம் ஞானம் கற்றவர்களின் கல்பு,ஞான ஒளியில் நிறைந்து அறியாமை என்ற இருள்அகன்று விடும் என்று உரையாற்றினார்.

மெளலவி பக்கிர்முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் தரிகத்தில் தான் உள் சுத்தம்,அகசுத்திஉள்ளது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



தவ்பா பைத்யுடன்மிஃராஜ் துஆவுடன் அஸர் தொழுகைக்கு பின் தப்ரூக் வழங்கி கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.