திருச்சியில் கிப்லா இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா - 8 ஆம் ஆண்டாக 25.01.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி முதல் 9 மணி வரை திருச்சி ஜங்ஷன் ராஜா ஹோட்டல் விழா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன்னபீ விழாவை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சியின் பல்வேறு பள்ளி - கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு - அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரி என்னும் தலைப்பிலும் - ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா? என்னும் தலைப்பிலும் சிறப்பாகப் பேசி பரிசும் நற்சான்றிதழும் பெற்றார்கள்.

பேச்சுப்போட்டிக்கு ஓய்வு பெற்ற தாசில்தார் & கிராப்பட்டி முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ்.பஜ்லுத்தீன் அவர்களும் , ஜமால் முஹம்மது கல்லூரி அரபி மொழித் துறைப் பேராசிரியர் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் அவர்களும் ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாதாரத் துறைப் பேராசிரியர் கான் முஹம்மது அவர்களும் நடுவர்களாக இருந்து சிறந்த மாணவப் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.


மக்ரிபு தொழுகைக்குப்பின் மீலாதுன்னபீ விழா இனிதே தொடங்கியது. திருச்சி சிட்டி கார்ப்பரேசன் உரிமையாளர் அல்ஹாஜ். S . ஷேக் தாவூத் B.Sc., அவர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ்.G.M. ஹாஷிம் அவர்களும் ஏசியன் பிளைவுட்ஸ் அதிபர் அல்ஹாஜ். M. அப்துஸ்ஸலாம் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.


திருச்சி பீர் முஹம்மது கிராஅத் (இறைமறை வசனங்களை) ஓதினார். ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாதாரத் துறைப் பேராசிரியர் கான் முஹம்மது அவர்கள் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார்.

விழாவுக்கு அல்ஹாஜ்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்ஹாஜ்.G.M. ஹாஷிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

பெரம்பலூர் மௌலவி. அல்ஹாஜ். காரீ. M. முஹம்மது ஸாதிக் ஆலிம் மன்பயீ பாஜில் ஜமாலி ஹக்கிய்யுல் காதிரி அவர்கள் விழாச் சிறப்புரையாற்றினார்.






திருச்சி மாவட்ட அரசு தலைமை காழி மௌலவி. அல்ஹாஜ். முப்தீ. N. ஜலீல் சுல்தான் ஆலிம் மன்பஈ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் - சான்றிதழ்களையும் வழங்கினார்.

.jpg)
கிப்லா மாத இதழின் ஆசிரியர் தமிழ்மாமணி. மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹௌதிய்யி ஹக்கிய்யுல் காதிரிய் B.Com., விழாவில் கலந்து கொண்டவர்களையும் - விழாவுக்கு ஆதரவும் - ஆலோசனையும் - ஊக்கமும் - உற்சாகமும் வழங்கிய நல்ல உள்ளங்களையும் நினைவு கூர்ந்து நன்றி கூறினார். மீலாதுன்னபீ விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த கிப்லா மாத இதழின் புரவலர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


ஜமால் முஹம்மது கல்லூரி அரபி மொழித் துறைப் பேராசிரியர் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் அவர்கள் துஆ ஓதினார். ஸலவாத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது. நிறைவில், கந்தூரி உணவு வழங்கப்பட்டது.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.