கதிர் மதி
அண்ண லாரே சூரியர்
விண்ண கத்தின் முழுமதி
கண்கு ளிர்ந்த சோதியே
எண்ணி றந்த ஒளிமயம்.
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக 29.01.2013 (செவ்வாய்க்கிழமை) மாலை கிப்லா ஹள்ரத் மௌலவி. N. அப்துஸ்ஸலாம் ஆலிம் B.Com., ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் - 30.01.2013 (புதன்கிழமை) மாலை Er. தாரிக் முஹம்மத் அவர்கள் இல்லத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்




கருணையும் ஈடேற்றமும் எவர் மீதிருக்கிறதோ அவர்மீது நாட்டத்தின் குறிக்கோளின் முடிவாக எவர் (நாயகம்) அவர்களை மேன்மைப்படுத்துகிறாரோ அவருக்கே சோபனம்! வாழ்க!
(எவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிக மிகக் கண்ணியப்படுத்துகிறாரோ அவருக்கே சோபனம்.)
[- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.