புனித பர்ஸன்ஜிய் மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 23}

04.02.13 06:34 PM

கதிரவன் வெளியாதல் 

அத்த   மித்த   கதிரவ
    னான     சுத்த    சோதியை
வித்தை    யாக   விண்ணுயர்
    மீட்டி வைத்தார்   மாநபி.

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.


உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்  புகழ்ந்தோதும் புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக ரபீஉல் அவ்வல்  பிறை 23-இல் 04.02.2013 (திங்கட்கிழமை) மாலை ஜனாப். நஸ்ருத்தீன் ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள்.  ஒவ்வொரு மஜ்லிஸிலும் தப்ரூக்கும் - கந்தூரி உணவும் வழங்கப்பட்டது.

"மட்டற்ற மறைவான எல்லா இரகசியங்களையும் படைப்பினங்களுக்குத் திறந்து வெளிப்படுத்துவதற்காக ரஸூல்மார்களின் (தூதர்களின்) முடிவானவர்களாக நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தேர்ந்தெடுத்தான்".

  [- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari