புனித பர்ஸன்ஜிய் மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 24 & 25}

07.02.13 03:51 AM

நாடு வளம் பெறல்


நபிபி   றந்த  போதினில்
         நலங்கு   றைந்த   நாடிது
தபமொ    ழிந்து    வளமிகத்
         தண்மை    கொண்டொ    ளிர்த்ததே.


வரண்டி   ருந்த   வாறுகள்
        வாரி   நீர்நி    றைந்தென
இருக   ரைபு    ரண்டு நீர்
        எங்கு  மோட  வாயதே.

[வாரி : கடல்]

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.


உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்  புகழ்ந்தோதும் புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக ரபீஉல் அவ்வல்  பிறை 24-இல் 05.02.2013 (செவ்வாய்க்கிழமை) மாலை அல்ஹாஜ். K. B. காதர் உசேன் ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்திலும் - ரபீஉல் அவ்வல்  பிறை 25-இல் 05.02.2013 (புதன்கிழமை) மாலை புனித பர்ஸன்ஜிய் மௌலித் மஜ்லிஸ் ஜனாப். S. முஹம்மது அனஸ் ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள்.  ஒவ்வொரு மஜ்லிஸிலும் தப்ரூக்கும் - கந்தூரி உணவும் வழங்கப்பட்டது.

"அல்லாஹ்வின் ரஸூலாகிய தெளித்தெடுக்கப்பட்ட  தாஹா நபி ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்களின் உதவியாளர்களின் தரமோ  நாம் அறிந்திருக்கிறோமே  அதைவிட மிக உயர்ந்தும்  மிகப் பெருமைக்குரியதுமாகும்".

  [- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari