மனித றன்னை மனிதனாய்
வாழ வைத்த எம்பிரான்
இனிது வாழ நல்வழி
இயற்றி வைத்தா ரெம்நபி.
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் - திருச்சியில் பேராசிரியர் கான் முஹம்மது அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திரளான முரீதுகளும் அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள். நிறைவாக, தப்ரூக்கும் கந்தூரி உணவும் வழங்கப்பட்டது.





"எங்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் நாயகர்; (இறைவன் நம்மிடம் கேள்வி கேட்கும் நாளிலே நாம்) அவனுக்கு விடை பகர நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குச் சிறந்தவர்கள்". (பதுறு மௌலிது)
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.