உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின நன்னாளில் திருச்சியில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் அவைத் துணைத் தலைவர் ஜனாப். S.B. ஆரிப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள். விழாவின் நிறைவாக கந்தூரி உணவு வழங்கப்பட்டது.








<<<பிரார்த்தனை>>>
எங்கள் தூய நாதரே
உங்க ளன்பிற் றிளைத்திட
இங்கு மங்குங் காத்துமே
எம்மை மன்னித் தருளுவீர்.
எம்பி ழைபொ றுத்தெமை
இன்ப மாக வாழவே
இம்மை மறுமைப் பேறுறச்
செய்த ருள்வீர் நாதரே.
தூய வாழ்வும் வளமதும்
காய ஆத்ம சுகமதும்
நேய மிறையின் பெற்றுநாம்
நிதமும் வாழ அருளுவீர்.
[காயம் : உடல்]
நம்ம னைவி மக்கட்கும்
நலிந்த தந்தை தாய்க்குமே
எம்மு டன்பி றந்தவர்க்
கென்றுங் காப்பு நல்குவீர்.
[காப்பு : பாதுகாப்பு]
சுற்றத் தார்க்கு மன்பினைச்
சுமந்த தூய வர்களுக்
குற்ற தீட்ச தர்தமக்
குங்கள் கருணை வேண்டுமே.
மக்கள் துயர் நீக்கியே
மறும லர்ச்சி யூட்டியே
தக்க மதீ நாநகர்
தாம்ம றைந்த நாளிதே.
பாடித் தங்கள் பங்கயப்
பதம்ப ணிந்த பேரனாம்
நாடும் கலீ லவுனுக்கு
நாளும் நலம் நல்குவீர்.
[பங்கயம் : தாமரை]
<<<ஸலவாத்தும்ஸலாமும்>>>
தூயோன் விண்ண வர்ஸலாத்
தும்ஸ லாமும் கூறினர்
தூய நம்பிக் கையுளீர்
சொல்க ஸலாத் தும்ஸலாம்.
- அற்புத அகில நாதர் எனும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.