புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 14}

27.01.13 05:39 AM

இறைத்   தூதர்    மனிதரே
       எனினு   மனித    ரல்லரே
நிறைய விண்ணு   மண்ணெலாம்
       நின்று   பணியுந்   தேநரர்.

[தே  : தெய்வம்
நரர் : மனிதன் ]

- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.

திருச்சியில்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை பொருளாளர் ஜனாப். ராஜா முஹம்மது ஹக்கிய்யுல்  காதிரிய் அவர்கள் இல்லத்தில்  உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்  புகழ்ந்தோதும் புனித சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள். விழாவின் நிறைவாக கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

"ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பால் ஏனைய நபிமார்களைவிட உயர்வு பெற்றார்கள்; மேலானார்கள்; அவர்கள் (நபியென்பதை) வெளிப்படுத்துவதற்காக (நமக்கு) நேர்வழி காட்டினார்கள்". (பதுறு மௌலிது)


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari