கருணை யுள்ளம் படைத்தவர்
அருளை வார்ந்த ளிப்பவர்
இருளை நீக்கி யொளியினை
இகத்த வர்க்கு மீந்தவர்.
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் புனித சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக 27.01.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை பொறியாளர் A . முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்






"ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சங்கையின் கருவூலம்; சுபீட்சங்களின் நாயகர்; அவனுடைய வேதத்திற்காக சமூகங்களுக்கு நேர்வழி காட்டுகிறவர்கள்". (பதுறு மௌலிது)
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.
தகவல் : A. நைனார் முஹம்மது அன்சாரி M.A. ஹக்கிய்யுல் காதிரிய்
படங்கள் உதவி : Er. M. பைலுல் ஹக் B.E., ஹக்கிய்யுல் காதிரிய்