புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 16

31.01.13 08:04 AM

புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 16}

கதிர் முகம் 

எங்க  ணாதர்    சூரியன் 
      ஏனை   நபிகண்    மின்களாம்
கங்கு  றன்னின்    மின்னிடும்
      காணு    மக்கட்    கிவையெலாம்.

[கங்குல் : இரவு ]


உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்  புகழ்ந்தோதும் புனித சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் சார்பாக 28.01.2013 (திங்கட்கிழமை) மாலை ஜனாப். பரக்கத் அலி (RPF) அவர்கள் இல்லத்தில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகளும் கலந்து கொண்டார்கள். விழாவின் நிறைவாக தப்ரூக்கும் - கந்தூரி உணவும் வழங்கப்பட்டது.

நற்செய்தியைக் கொண்டும், எச்சரிக்கையைக் கொண்டும் அல்லாஹ்  அழைத்தானே அவர்களுடைய தூதுவத்திலே முதன்மையானதாகவுமாயது.

[- சங்கைக்குரிய வாப்பா நாயகமவர்கள் மொழி பெயர்த்த பர்ஸன்ஜிய் மௌலிது தர்ஜுமாவிலிருந்து]


ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.

emsabai.ansari