புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. பிறை : 3

16.01.13 05:40 AM

நபிபி  றந்த   போதினில்
     நலங்கு  றைந்த  நாடிது
தபமொ  ழிந்து  வளமிகத்
     தண்மை  கொண்டொ  ளிர்த்ததே.


ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளை சார்பில் - ரபீஉல் அவ்வல் பிறை 3-இல் (15.01.2013) திங்கட்கிழமை மாலை புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், ஜனாப். S . முஹம்மது அனஸ் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. மஜ்லிஸில் முரீதுப் பிள்ளைகள் - அஹ்பாபுகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள். நிகழ்வின் நிறைவாக, கந்தூரி உணவு வழங்கப்பட்டது.

" இறைவனே எல்லா திடுக்கங்களிலிருந்தும் சோதனைளிலிருந்தும்  எதைக் கொண்டு நாம் பாதுகாப்படைகிறோமோ அத்தகைய ஸலவாத்தெனும் கருணையை எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குடும்பத்தார் மீதும் கூறுவாயாக" (பதுறு மௌலிது)

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்  யா  ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்

emsabai.ansari