அழகு மிக்க வுடையினர்
அகிலம் போற்று மெழிலினர்
பழகும் பண்பி லொப்பிலர்
பரிவு காட்டும் நாயகர்.
- கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சங்கைப் படுத்தும் புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ரபீஉல் அவ்வல் பிறை 4-இல் திருச்சி K.S .A . ஷாஜஹான் (துபாய்) அவர்கள் இல்லத்திலும் - பிறை 5-இல் மௌலவி H . அப்துல் கறீம் ஆலிம் ஹௌதிய்யீ அவர்கள் இல்லத்திலும் சிறப்பாக ஓதி கண்ணியம் செய்யப்பட்டது. மஜ்லிஸின் நிறைவாக கந்தூரி உணவு வழங்கப்பட்டது. மஜ்லிஸில் முரீது பிள்ளைகளும் முஹிப்பீன்களும் திரளாக கலந்து கொண்டு மஜ்லிஸை சங்கை செய்தனர்.






"கருணையும் ஈடேற்றமும் காணிக்கையில் மிகப் பரிசுத்தமானதும் எங்கள் நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (என்கிற தெளிவுபடுத்தி எடுக்கப்பட்ட) அவர்கள் மீதும் சமூகத்தினனைத்திலுள்ள அவர்கள் கிளைஞர் மீதுமாகும்". (பதுறு மவ்லிது)
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி அலைஹி வஸல்லம்.