புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. [பிறை : 7, 8, 9 & 10]

23.01.13 04:57 AM

அழகு   மிக்க   வுடையினர்
      அகிலம்    போற்று   மெழிலினர்
பழகும்  பண்பி     லொப்பிலர்
       பரிவு    காட்டும்    நாயகர்.



பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழப் புகழ ஏற்படும் தெவிட்டாத இன்பம், நம் ஆன்மாவை அருள் நிறைந்ததாகவும் அழகு நிறைந்ததாகவும் மாற்றும் என்பது மறுக்கவும் மறக்கவும் முடியாத சத்தியம்.

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை - சார்பில் திருச்சியில் பிறை 7 -  இல் (19.01.2013 - சனிக்கிழமை) மௌலவி. N . முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய்  அவர்கள் இல்லத்திலும் பிறை 8 - இல் (20.01.2013 - ஞாயிற்றுக்கிழமை) A . முஹம்மது இப்ராஹிம்  ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் பிறை 9 - இல் (21.01.2013 - திங்கட்கிழமை) பக்ருத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் பிறை 10 - இல் (22.01.2013 -  செவ்வாய்க்கிழமை) நஸ்ருத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்திலும் ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு பிறை மஜ்லிஸ் நிறைவிலும் தப்ரூக்கும் - கந்தூரி உணவும் வழங்கப்பட்டது. மஜ்லிஸில் முரீது பிள்ளைகளும் அஹ்பாபுகளும் திரளாக கலந்து கொண்டனர்.

"அஹ்மத் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் நேர்வழியின் நட்சத்திரங்களான அவர்களின் கிளையார் மீதும் புனித யுத்தம் செய்து ஷஹீதான பத்ரையுடைய ஸஹாபாக்கள் மீதும் என் இறைவன் நித்தமும் கருணை கூர்ந்தான்".

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி  அலைஹி வஸல்லம்.

emsabai.ansari