காரிருளாய் அறியாமைக் காட்டில் தவித்துக்கிடந்த மனித இனத்திற்கு - பேரருளாய் வந்துதித்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புண்ணிய மாதம் பிறந்து விட்டது. வசந்த காலம் வந்து விட்டது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டே எல்லாவற்றையும் பெற்றுக்கொண்ட நாம், அவர்கள் புகழ்பாடி நன்றி பாராட்டும் திங்கள் இது. ஆயுள் முழுதும் பாடினாலும் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ் பாடி முடிக்க முடியாது. எவ்வளவு நன்றி செலுத்தினாலும் நம் கடன் தீராது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சங்கைப்படுத்தும் விதமாகவும் - நமது உயிரினும் மேலான சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் கட்டளைக்கு அடி பணிந்தும் - ரபீஉல் அவ்வல் மாதம் 30 பிறைகளிலும் ஸுப்ஹான மௌலிது ஷரீபும் - பர்ஸன்ஜிய் மௌலிது ஷரீபும் ஊர்தோறும் ஓதி சிறப்பு செய்து வருகிறோம். அவ்வாறு ஓதுவதால் நமக்கும் - நம் குடும்பத்திற்கும் - நம் வீட்டிற்கும் - நம் ஊருக்கும் - உலகுக்கும் - அனைத்திற்குமே பாதுகாப்பும் வளமான வசந்தமும் என்றும் நிலைத்திருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
. திருச்சியில் நேற்று முதல் ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் மௌலவி. N . ஸயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் இல்லத்தில் தொடங்கியது. மஜ்லிஸில் திருச்சி சபை முரீதுகள் - அஹ்பாபுகள் திரளாகக் கலந்து கொண்டார்கள். மௌலிதிற்குப்பின் சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களின் "பன்னிரண்டு நாளிதே" பாடல் பாடப்பட்டது. மஜ்லிஸ் நிறைவாக, கந்தூரி உணவு வழங்கப்பட்டது.
ஸலவாத்து ஓதுவோம் ஸலவாத்தை பரப்புவோம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.
தகவல் : A . நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் M.A ., திருச்சி