• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014     »     Feb2014     »     இறை இல்லம்


தொடர் .....

இறை இல்லம்

மெளலவி . பைஜுல்லா ஆலிம் ,
ஆசிரியர் , ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி , திருச்சி .

பெருமையோ பெருமை

ஹள்ரத் அனஸ் ( ரளி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் . மஸ்ஜிதுகளின் விஷ ­ யத்தில் மனிதர்கள் பெருமையடித்துக் கொள்வது கியாமத் நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் .       
                                                                                                        
நூல் - அபூதாவூது , நஸயீ , தாரமீ , இப்னு மாஜா


அல்லாஹ்வின்
மஸ்ஜிதுகளை கட்டுபவர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்களும் கவனிக்க வேண்டிய ஹதீஸல்லவா இது ? காரணம் இன்று மஸ்ஜிதுகளை உருவாக்குபவர்களும் அது உருவாக உழைப்பவர்களும் நான்தான் கஷ்டப்பட்டேன். நான்தான் வசூல்  செய்தேன்நான் இல்லாவிட்டால் இவ்வளவு சிறப்பாகவும் , சீக்கிரமாகவும் இதைக் கட்டியிருக்க முடியுமா ? என்றெல்லாம் கூறி பெருமை அடைவதன் மூலம் அந்த நல் அமல்களை வீணடித்து விடுகின்றனர்ஊருக்கு ஊர் பள்ளி இருக்கின்றது. அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறிய மூன்று பள்ளிகளைத் தவிர எந்தப் பள்ளிக்கும் ஒரு தனிச்சிறப்பு இல்லையென்று இருக்க , எங்களூர் பள்ளியைப் பார்த்தீரா ? வேறு எங்காவது இதுபோல பள்ளி இருக்கிறதா ? எந்த ஊரிலும் இல்லை . எந்த மாவட்டத்திலும் இல்லை . மிகப் பிரம்மாண்டமாக கட்டியுள்ளோம் என பெருமை கொள்வது பாவம் என்பதை உணர்வோம் .


நேசிப்போம் வாரீர் !

ஹள்ரத் அபூஸயீதுல் குத்ரீ ( ரளி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறினார்கள். எவர் பள்ளியை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான் .  


                                                                                                       (
நூல் - தப்ரானீ )


பள்ளிதோறும் வெள்ளிக்கிழமை வாசனை போடுவோம் :

அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் . மஸ்ஜிதுகளுக்கு வருவதிலிருந்து விபரம் தெரியாத சிறுவர்களையும் பைத்தியக்காரர்களையும் விலக்கி வையுங்கள்வாங்குவது , விற்பது இன்னும் விவாதிப்பதையும் விட்டுவிடுங்கள் . உங்கள் சப்தத்தை உயர்த்துவதை விட்டுவிடுங்கள். இன்னும் தண்டனைகளை நிறைவேற்றுங்கள்உங்கள் வாட்களை உறையிலேயே விட்டுவிடுங்கள்பள்ளிகளின்   வாசல்களில் கால்களை சுத்தப்படுத்திட தண்ணீர் வையுங்கள்ஜுமுஆ தோறும் வாசனைப் புகையை போடுங்கள்.

 .                                                                            ( நூல் - இப்னு மாஜா )


மாண்புமிக்க மஸ்ஜிதுகளின் இமாம்கள் !

பள்ளிகளில் இமாம்கள் யார் ? அவர்களின் அந்தஸ்தும்   உயர்வும் என்ன என்பதை முதன்மையாக நிர்வாகிகளும் ஜமாத்தார்களும் அறிந்து கொண்டு அவர்களை உரிய கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்துவது அவசியமாகும் .


அல்லாஹ் வழங்கிய கண்ணியம் !

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் ( மார்க்க ) ஞானம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல பதவிகளை அல்லாஹ் உயர்த்துகிறான் .   மேலும் , அல்லாஹ் நீங்கள் செய்தவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் .                                                                                    

  ( அல்குர்ஆன் - 58:11)


ஆலிம்களின்
உயர்வு என்பது அல்லாஹ் வழங்கியது என மேற்காணும் வசனம் உணர்த்துகிறது .   எனவே அல்லாஹ் வழங்கிய உயர்வை அடைந்த ஆலிம்களை உதாசீனப்படுத்துவது   எங்ஙனம் நியாயமாகும் ?


ஆலிம்கள் பற்றிய சான்றுரை !

ஹள்ரத் அபூதர் ( ரளி )   அவர்கள் கூறுகிறார்கள் .   அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டேன் . ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர் .   நபிமார்கள் , திர்ஹமோ அல்லது தீனாரோ விட்டுச் செல்லவில்லை . அவர்களை வாரிசுதாரராக்கியது இல்முக்குத்தான் .   அக்கல்வியைக் கற்றவர் பெரும் பேற்றினைப் பெற்றவராவார் .

( அபூதாவூத் , திர்மிதீ


நபிமார்களின் வாரிசுகள்தாம் பள்ளிகளின் இமாம்கள் என்பதை நாம் புரிந்தாக வேண்டும் .   எனவே நபிமார்களுக்கு வழங்க வேண்டிய கண்ணியத்தையும் சிறப்பையும் நிச்சயம் அவர்களின் வாரிசுகளான ஆலிம்களுக்கு வழங்குவதும் மார்க்கத்தை போதிக்கும் அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருக்க வேண்டியதும் நம் தலையாய கடமைகளாகும் .


ஆலிம்களின் கடமை :

அப்துர் ரஹ்மான் கத்ரிய்யீ அவர்கள் அறிவிக்கின்றார்கள் .   அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறுகிறார்கள் .   பின்வரும் ஒவ்வொரு காலத்திலும் நீதியை நிலைநாட்டும் கூட்டமும் , இக்கல்வியைச் சுமப்பவர்களும் வருவார்கள் .   ( மார்க்கத்தில் ) வரம்பு மீறியவர்களின் திரிபு வாதங்களையும் உதவாக்கரைகளின் பெயர்களையும் அழித்துவிடுவார்கள் . மேலே காணும் ஹதீஸ் ஆலிம்களின் பொறுப்பு எது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது .   மார்க்கத்தின் பெயரால் உள்ளே நுழைந்து குர்ஆன் , ஹதீஸை வைத்து சமுதாயத்தைக் கூறுபோடும் உலுத்தர்களை அடையாளம் காட்ட வேண்டும் .   இந்தச் சமயத்தில் இதனை எவர் எதிர்த்தாலும் பின் வாங்கக் கூடாது .   இதனை விபரம் அறியாத நிர்வாகிகள் அல்லது அறிந்தும் அல்லாஹ்வின் பயம் இல்லாமையால் இமாம்களுக்குத் தொல்லைகளை ஏற்படுத்தலாம் .   இடையூறுகளை ஏற்படுத்தலாம் .   இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் தைரியத்துடன் மார்க்கத்தை சொல்லியே ஆக வேண்டும் .


ஹள்ரத் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ( ரஹ் ) அவர்கள் குர்ஆன் படைக்கப்பட்டதா ? இல்லையா ? என்ற பிரச்சனையில் அனைத்து இன்னல்களையும் சகித்தார்களே ஒழிய விட்டுக் கொடுத்தார்கள் இல்லை . குர்ஆன் படைக்கப்பட்டது அல்ல   என்ற நிலையை விட்டும் இறங்கவில்லை . மேலும் , இமாமத் செய்யும் இடங்களான மிம்பரும் , மிஹ்ராபும் சாதாரண இடமா ? அகில உலகத்தின் தலைவராக உள்ள எம்பெருமானார்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் நின்று சமுதாயப் பணியாற்றிய இடம் .   அங்கிருந்துதானே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்    அவர்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் கண்டார்கள் .   மேலும் அங்கிருந்தல்லவா கட்டளைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன .   அப்படிப்பட்ட இடத்தில் நிற்கும் பணியை ஏற்றுக் கொண்ட இமாம்கள் எவருக்கும் அஞ்சிடாத துணிச்சல்மிக்கோராக இருப்பது மிகவும் அவசியமாகும் .   நிர்வாகிகளே குற்றம் இழைத்தாலும் பெரும் பணக்காரர்கள் , அதிகாரம் பிடித்தவர்கள் தவறு செய்தாலும் கண்டிப்பதில் தயக்கமோ பாரபட்சமோ காட்டக்கூடாது .


இமாம்கள் எப்படி இருக்க வேண்டும் ?

ஹலால் , ஹராமை பேணுபவராகவும் , ஈமானில் உறுதி மிக்கவராகவும் அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையில் பிடிப்பு மிக்கவராகவும் , எப்பொழுதும் சுத்தமானவராகவும் , அழகான நல்லாடைகளை அணிபவராகவும் , குறைந்தபட்சம் தொழுகைக்காக வெண்மையான ஆடை உடுத்துபவராகவும் இருத்தல் வேண்டும் .   காரணம் ; முஸல்லிகளின் தொழுகைக்கு அவரே பொறுப்பாளியாவார் .   எனவே இத்துணை ஒழுக்கங்களும் அவரிடம் நிறைந்து காணப்பட வேண்டும் .   உலகாதாயத்திற்காக பள்ளிகளின் இமாம்கள் கொள்கை தவறும்போது அவர்கள் தங்களின் தகுதியை இழந்து விடுவார்கள் . எனவே , அவரை நமது மஸ்ஜிதை விட்டும் கண்ணியத்தோடு அப்புறப்படுத்துவது நிர்வாகப் பெருமக்களின் தார்மீகக் கடமையாகும் .   இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ் சொன்ன ....

அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் அஞ்சுவதெல்லாம் ஆலிம்கள் தாம் .   ( அல்குர்ஆன் 35:28) எனும் வசனத்திற்கு இலக்கணமாக இமாம்கள் இருப்பது அவசியமாகும்

.

பள்ளிகளை நிர்வகிக்கும் பேறுபெற்றோர் :

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை நிர்வகித்துப் பரிபாலனம் செய்திடத்   தகுதியானவர் யாரெனில் அல்லாஹ்வையும் , மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைபிடித்து ஜகாத்தையும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவரையும் பயப்படாமல் இருக்கிறவர்கள் தாம் .   அத்தகையோர் நேர்வழிப் பெற்றவர்களில் உள்ளவர்களாக ஆகிவிடலாம் .           

                              ( அல்குர்ஆன்   9:18)


மாண்புமிக்க மஸ்ஜிதுகளின் நிர்வாகிகளே ! தேர்ந்தெடுக்கும்போதே மேலே காணும் வசனத்தில் கூறப்பட்ட நற்பண்புகள் பெற்றவர்தானா ? எனக் கவனிப்பது அவசியமாகும் .   முதலில் ஈமானில் உறுதிமிக்கவராக இருக்க வேண்டும் .   மேலும் . நிர்வாகப் பெருமக்கள் நற்குணமும் , நற்சிந்தனை உடையவராகவும் , மார்க்க வி ­ யங்களை நடைமுறைப்படுத்திட தடை சொல்லாதவராகவும் இருப்பது மிகவும் அவசியமாகும் .   மேலும் , ஒழுக்கமான நல்ல வார்த்தைகளை பேசுபவராகவும் , சுத்தமான ஆடைகள் அணிபவராகவும் , நல்ல ஆலோசனைகளை அங்கீகரிக்கும் பக்குவம் நிறைந்தவராகவும் இருக்க வேண்டும் ஆனால் ,இன்றைய நிலைமை என்ன ? ஐங்காலத் தொழுகையில் பேணுதல் இல்லாதவர்களும் பொருள் இருந்தும் முறையாக ஜகாத் வழங்காதவர்களும் தானதர்மங்கள் பற்றிய சிந்தனையே இல்லாதவர்களும் எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அச்சம் இல்லாத நிலையில் உள்ள நிர்வாகிகளும் மஸ்ஜிதுகளின் பொறுப்பாளர்களாக இருப்பதால் இமாம்களது கண்ணியம் குலைக்கப்படுவதுடன் மஹல்லாக்கள் தோறும் பிரச்சனைகளும் நிம்மதியின்மையும் ஏற்பட்டு ஜமாஅத்துக்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன .


நிர்வாகிகளாக வருவதற்கு அல்லாஹ் கூறிய தகுதிக்கு மாற்றமாக நபிமார்களின் வாரிசுகளாக வர்ணிக்கப்பட்ட ஆலிம்களையும் , பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்பட்ட கண்ணியமான முஅத்தின்களையும்   ஆட்டிப்படைப்பதும் உருட்டி மிரட்டுவதும்தாம் நிர்வாகிகளாக ஆகுவதற்கான குறைந்தபட்சத் தகுதிகள் என்றாகி விட்டது என்பது மறுக்க முடியாத   உண்மையாகும்மேலே காணும் வசனத்தில் வல்லவனாம் அல்லாஹ் நிர்வாகிகள் மார்க்க வி ­ யத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக்கூடாது என்று சொல்லியிருக்க , தைரியத்துடன் அதே நேரம் மார்க்கத்திற்கு விரோதமான மது , விபச்சாரம் , வட்டி , வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளும் கொள்கைக்கு முரண்பட்ட வி ­ யங்களையும் சொல்லக் கடமைப்பட்டுள்ள இமாம்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு பூட்டி வைப்பது வாடிக்கையாகிப் போன விந்தையாக உள்ளது இதைவிடவும் கொடுமை என்னவென்றால் , வரதட்சணைப் பேய் சமுதாயத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்க அந்த வரதட்சணையே தப்தரில் எழுதிவைத்து அதற்கு லஞ்சத்தை கமி ­ னாகப் பெற்று பள்ளிக்குச் சேர்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை நிர்வாகப் பெருமக்கள் உணர்ந்து இனிமேல் வரதட்சணை கேட்கும் எந்தத் திருமணத்திற்கும் நிர்வாகமும் இமாம்களும் கலந்து கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுங்கள் .   உங்கள் அந்தஸ்து அல்லாஹ்விடத்தில் எப்படி உயர்கிறது என்பதை உணர்வீர்கள் . மேலும் , அல்லாஹ்வின் மார்க்கத்துடன் விளையாடும் குழப்பவாதிகளின் விஷ ­ யத்தில் கருணை காட்டுவதோ உலகாதாயத்திற்காக அவர்களுடன் கைகோர்த்துச் செல்வதோ கூடாது என்றிருக்க இதற்கு நேர்மாறாக நடப்பது அல்லாஹ் நிர்வாகிகளுக்கு வழங்கிய சிறப்பை சீர்குலைப்பதாகவே அமையும்எனவே நிர்வாகப் பெருமக்கள் தங்களின் கண்ணியத்தை உணர்ந்து சிறப்பாக திட்டமிட்டு செயல்பட்டால் சமுதாயத்தில் மிகப்பெரும் மறுமலர்ச்சி ஏற்படுவதுடன் அத்தகைய நிர்வாகிகள் நேர்வழி பெற்றவர்களாகவும் ஆகிவிட முடியும் என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பெருளாகும் .  

                                                               ( தொடரும் )

 

 


வீட்டின்
வாயிலில் தெளஹீதும் ( ஏகத்துக் கொள்கையும் ) வீட்டுக்குள்ளே ஷிர்க்கும் ( இணை வைக்கும் மனப்பான்மையும் ) இருப்பின் என்ன பயன் ? நாவில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் இருந்தென்ன பயன் ? வாய் இறைவனுக்கு ( ஷிக்ரு ) நன்றி செலுத்துவதாயும் ; மனம் இறைவன் மீது குற்றம் காணுவதாயும் இருப்பின் யாது பயன் ?


உணவை எதிர்பார்த்துக் கொண்டு திஜ்லா நதிக்கரையோரம் ஆயிரம் ஆண்டுகள் அமர்ந்து வழிபார்த்து , அது கிடைக்காவிடினும் , தன் உள்ளம் இறைவனின் கருணை மீதே பிணைந்தவாறு இருப்பவனே மேன்மை மிக்க மெய் விசுவாசியாவான் .


                             - ஹள்ரத் கெளதுல் அஉளம் முஹிய்யுத்தீன் ஆண்டகை ( ரலி ) -