• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014       »     Feb 2014    »     ஞானதுளிகள்


ஞானத் துளிகள்
தொகுத்தவர் : -
திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S.,சென்னை

நறுமணம் , துர்நாற்றம் ஆகியவைகள் காற்றில் இருக்கின்றன . ஆனால் காற்று அவைகளுள் கட்டுண்டு போவதில்லை . பாப புண்ணியங்கள் இறைவனுடைய சிருஷ்டியில் உண்டு . இறைவன் அவைகளுள் கட்டுண்டவர் அல்ல .


உலகத்தவர் இயற்கையிலுள்ள அழகைக் கண்டு ரசிக்கின்றனர் .  ஆனால் அதன் சிருஷ்டி கர்த்தாவை அவர்கள் நாடுவதில்லைபச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கிறவனுக்கு எல்லாம் பச்சை நிறம் . பக்தி என்னும் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கிறவனுக்கு எல்லாம் சொரூபம் . இப்பிரபஞ்சத்தை அவன் ஆனந்த மாளிகை என்கிறான் .   ஆனந்தமும் இறையும் ஒன்று .


இறைவனுடைய போக்கை மனிதன் அறிந்து கொள்ள முடியாது நீ பைத்தியம் பிடித்தவனாக இருப்பது அவசியமானால் இறைவனைப் பற்றிய பைத்தியம் பிடித்தவனாக இரு . உலகப் பைத்தியத்தால் உனக்கு ஆவதென்ன ? இறைப்பித்தம் உன் தலைக்கு ஏறிவிடுமானால் நீ நிச்சயமாக இறையை அடைவாய் . பிறகு இறை இருக்கும் நிலை நேரே உனக்கு விளங்கும் .


இறைவன் உன்னை உலகில் வைத்துள்ளான் என்று உணர் .   அவனுடைய அருளால் உனது உலக வாழ்க்கை நிகழ்ந்து வருகிறது என்று உணர் . அப்பொழுது உனக்கு இடுக்கண் ஒன்றும் வராது .



அனைத்தும் இறைவன் செயல் என்பதை நீ சுவானுபவத்தில் அறிவாய் ஜால வித்தைக் காரன் மாஞ்செடியையும் மாம்பழத்தையும் தோற்றுவிக்கிறான் . அதெல்லாம் வெறும் தோற்றம் . உண்மையில் இருப்பதோ ஜால வித்தைக் காரன் . இப் பிரபஞ்சம் ஜால வித்தையில் தோன்றி யிருக்கிறது . பரப்பிரம்மமோ ஜால வித்தைக்காரன் போன்றது .தடாகத்தின் கீழ்ப்பகுதியிலிருக்கும் பெரிய மீன்கள் மேல் பரப்புக்கு வருவதில்லை . ஆனால் நல்ல இரைகளை நீரின் மீது இறைத்தால் அம்மீன்கள் மேலே துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வருகின்றன . பக்தியும் பரமார்த்திகப் பேருணர்வும் உற்ற உபாயங்கள் ஆகின்றன .  

  

ஒரு சிறு மேகம் சூரியனையே நம் காட்சிக்கு எட்டாது மறைத்து வைக்கிறது . அதே விதத்தில் பரம்பொருள் நம் காட்சிக்கு எட்டாதபடி மாயை மறைத்து வைக்கிறது .பாசி படிந்துள்ள தடாகத்தில் நீந்தி விளையாடும் மீன்களை நாம் பார்க்க முடியாது . அதே விதத்தில் மாயை என்னும் பாசி படிந்துள்ள நம் உள்ளத்தில் விளையாடும் இறையை நாம் காண முடியாது .


ஒரு சர்க்கரைக் குன்று போன்றவன் இறைவன் . அக்குன்றினின்று சிறிய எறும்பு சிறிய சர்க்கரைத் துண்டு ஒன்றை எடுத்துச் செல்கிறது . பெரிய எறும்பு துண்டு ஒன்றை எடுத்துச் செல்கிறது . ஆனால் சர்க்கரைக் குன்று ஒன்றுக்குக் குறை ஒன்றும் உண்டாவதில்லை . இறைவனுடைய மகிமைகளில் ஒரு சிறுபகுதி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது . அவருடைய மகிமை முழுதையும் பக்தர்களுள் யாருமே அறிந்து கொள்ள முடியாது .


பாம்பின் பல்லில் விஷ ­ ம் இருக்கிறது . அதனால் பாம்புக்குக் கேடு ஒன்றும் இல்லை . ஆனால் மற்றவர்களைத் தீண்டினால் பாம்பின் பல்லில் உள்ள அவ்விஷ ­ ம் அவர்களுக்குக் கேடு விளைவிக்கும் . அதே விதத்தில் இறைவன் யாருக்கும் கேடு விளைவிப்பதில்லை . பாம்பைத் தொடுபவனைத் தவிரமனிதன் சில வேளைகளில் உடைபோட்டுக் கொண்டிருக்கிறான் ; வேறு சில வேளைகளில் உடையில்லாது இருக்கிறான் . அதே விதத்தில் பிரம்மம் பல மகிமைகளை உடைத்திருக்கிற சகுண பிரம்மமாக இருக்கிறது ; வேறு சில வேளைகளில் அம்மகிமைகளை யெல்லாம் கடந்து நிர்க்குணப் பிரம்மமாகவும் இருக்கிறது .


நாஸ்திகனாகவும் , ஆஸ்திகனாகவும் மிளிர்பவன் இறைவன் .   நல்லவனாகவும் , கெட்டவனாகவும் மிளிர்பவன் இறைவன் . ஜாக்ரதா அவஸ்தையிலும் மிளிர்பவன் இறைவன் . இவை யாவுக்கும் அப்பால் இருப்பவன் இறைவன் . இதை அனுபூதியில் அறிந்து கொள்ளுகிறவனுக்கு மனக்குழப்பம் ஏதுமில்லை .