• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »     2014    »    Feb 2014    »    சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்


சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ ( ரஹ் )

அறபுத்தமிழில் :மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில்மதாஹிப்
அழகுதமிழில் :கிப்லாஹள்ரத் ,திருச்சி .



ஹள்ரத்ரபீஉ ( ரஹ் )அவர்கள்கூறுகிறார்கள் :


ஒருமுறைஇமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களுடன்அமர்ந்திருந்தேன்.அப்போது ஸயீதுஎன்னும் ஊரிலிருந்து ஒருகடிதம் வந்திருந்தது.அதில் “கல்லாஇன்னஹும் அன்றப்பிஹிம்யவ்மயிதின் லமஹ்ஜூபூன்”என்னும் திருவசனத்திற்குவிளக்கம் கோரப்பட்டிருந்தது. அல்லாஹுதஆலா தனது கோபத்தினால்நிராகரிப்பாளர்களுக்கு தனதுலிகா என்னும் சந்திப்பைத்தர மாட்டான் என்பதுதன் இதற்குவிளக்கம்! வேறென்ன?என்றார்கள்,இமாம் ஷாபிஈ(ரஹ்)அவர்கள்.



உடனேநான், “இன்னும்கொஞ்சம் விளங்கப்படுத்துவீர்களா?”என்று கேட்டேன்!அதற்கு இமாம்ஷாபிஈ (ரஹ்)அவர்கள்,“இந்த முஹம்மதுஇபுனு இத்ரீஸ் நாளை மறுமையில்அல்லாஹ்வைச் சந்திப்பேன்என்னும் உறுதி இருப்பதால்தானே நான் அல்லாஹ்வை வணங்குகிறேன்!எனவே,நம்பிக்கையும்உறுதியான எண்ணமும் தாம்அனைத்திற்கும் அடித்தளம்!”என்றார்கள்.மேலும் இமாம்ஷாபிஈ (ரஹ்)அவர்கள்கூறினார்கள்!அமல் செயல்தீனில் (மார்க்கத்தில்)உள்ளதாகும்.தீன் இஸ்லாமாகும்.இஸ்லாம்,ஈமானாகும்!ஈமானில்(நம்பிக்கையில்)கூடுதல் குறைதல்உள்ளன. ஒவ்வொருவரின்தரத்தின்படி!மேலும்,ஒருவர் இமாம்ஷாபிஈ (ரஹ்)அவர்களிடம்,எந்த அமல் செயல்ஏற்றமானது?என்று கேட்டார்.அதற்கு இமாம்ஷாபிஈ (ரஹ்)அவர்கள்,“எந்தவொருசெயல் ஒன்றில்லாவிட்டால்ஒப்புக் கொள்ளப் படாதோ அச்செயலேஏற்றமிகு செயல்” என்றார்கள்!

“அந்தஒன்று என்ன?”என்று வினவப்பட்டது!அதுதான் ஈமான்நம்பிக்கை என்றார்கள்!. மற்றொருவர்,ஈமான் (நம்பிக்கை)என்பது எண்ணத்தாலா?செயலாலா?என்றார்.


“என்செயல் அனைத்தும் இறைவனுக்காகஎன்னும் எண்ணத்தில் செயல்படுவதேஈமான் (நம்பிக்கை)ஆகும்!”என்பதாக இமாம்ஷாபிஈ (ரஹ்)அருளினார்கள்!


( கலீபாக்கள்குறித்து இமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்களின்கருத்து ...இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் )



இறைதியானம் நான்கு வகைப்படும்

இறைதியானம் நான்கு வகைப்படும்.முதல் வகைநாவால் மட்டும் ஓதிக் கொண்டுமனம் அதில் லயிக்காமல் இருத்தல்.இதற்கு அற்பமானபயன் உண்டு.ஆயினும் இதற்கும்நற்கூலியுண்டு.வீண்பேச்சைவிட இது சிறந்ததல்லவா?


இரண்டாவதுவகை : தியானம்நாவோடு மனதிலும் தியானமிருக்கும்.ஆனால் நிலையாகதரிபடுவதில்லை.இதில் முயற்சிஎடுக்கப்பட்டால் மனதிலேயேதியானம் நிலைத்து நிற்கவழியுண்டாகும்.


மூன்றாவதுவகை : மனதில்இறைதியானமே ஆட்கொண்டுள்ளநிலையாம். இதுஉயர் தரமான பதவிக்குரியதாகும்.


கடைசியாக: தியானமின்றி,தியானத்துக்குஉரியவனான இறைவனையே மனதில்குடி கொள்ளச் செய்வது சிரேஷ்டமானதியானமாகும்.இறைவன் மீதுஅளப்பற்ற காதல் (இஷ்கு)கொண்டால்தான்இந்த நிலை உண்டாகும்.இந் நிலையில்மனிதன் இறைவன் மனிதனோடுஇரண்டறக் கலந்தவனாகி எல்லாம்அவனே (ஹமவோஸ்த்)அவனையன்றிவேறு ஒன்றுமே இல்லை என்றுஉணர்கிறான்.இங்கு வேற்றுமைஅகன்றுவிட்டது.ஏனெனில் இரண்டல்ல.ஒன்றையே அவன்இப்போது காண்கிறான்.தன்னை இல்லாது(பனா)ஆக்கிக்கொண்டுள்ளான்.மீண்டும் அவன்தன் சுயநிலையை அடைவதும்மீண்டும் இல்லாமலாவதும்சாத்தியந்தான்.அதிகமானதியானத்தில் ஈடுபடும் சிலருக்குஇத்தகைய ஆத்மிக நிலைகிட்டாமலிருக்கலாம்.அதுகுறித்துமனம் தளரக் கூடாது.தன் மனதை இறைதியானத்திலேயே பராக்காக்கவேண்டும்.


மரணத்திற்குப்பின்னராவது இவ்வித நிலைஅவர்களுக்கு உண்டாகும்.மறைவான உலகங்களின்திறவுகோல் இப்போதே அவர்களுக்குக்கிட்டுவதாகும். 


-- மஹ்மூதாபீவி -