• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »     2014     »   Feb 2014     »   அன்று படித்த பாடம்


அல்குர்ஆனின்அறிவியல்

அன்று படித்த பாடம் !

-ரஹ்மத்ராஜகுமாரன் -


...டிப்ரன்ஷியல்ஈக்வேஷ­ன்,வெக்டர்அனாலியஸ்ஸஸ்,லேப்லாஸ் டிரான்பார்ம், போரியஸ்சீரியஸ்...இவைகள்எல்லாம் கணிதப் பாடங்கள்.கணிதம்,பட்டப்படிப்பில்சொல்லித் தரப்படும் கடினமானகணிதங்கள்.இந்த கணக்குப்பாடங்களை படித்தால் மட்டும்போதாது. இவற்றைஎழுதிப் பார்க்க வேண்டும்.எழுதிப் படிக்கும்போதுதான் இந்தக் கணிதப்பாடத்தின் சூட்சுமம் புரியும்.எழுதிப்பார்க்காமல் படித்தால்,பரீட்சை ஹாலில்நம்மை அக்கப்போராக்கி காலைவாரிவிடும்.


பொதுவாகஎந்த ஒரு பாடமும் படித்திருக்கவேண்டும்.படித்த பாடத்தைஎழுதியும் பார்த்திருந்தால்வெற்றி நிச்சயமாக நம்மை வாகைசூடிக் கொள்ளும். எந்தவொருவிஷ­யமும்தெரிந்திருந்தாலோ,சொல்லித்தரப்பட்டிருந்தாலோ,அது விஷ­யமாகநன்கு எழுதிப் படித்திருந்தாலோஇலகுவாக நம் எழுதுகோலுக்குவரும். அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல்,எந்தப் புத்தகமும்கிதாபும் படிக்காமல் எழுதநினைத்தால் எழுத்துக்கள்எப்படி எழுதுகோலுக்கு வரும்...?ஆக ஒரு வி­ஷயம்நன்கு தெரிய வேண்டும்.அந்த விஷயத்தைப்பற்றி மிகக் குறைந்தபட்சம்இரண்டு புத்தகங்களிலாவதுபடித்திருக்க வேண்டும்.அல்லது நெட்டில்மேய்ந்து தேடியிருக்க வேண்டும்.பிறகு மொழியின்வார்த்தைப் பதங்களை நமக்குஎளிதாக எழுதப் பயிற்சி இருக்கவேண்டும்.இதெல்லாம்சரியாக இருந்தால் எழுதுகோலுக்குஎழுத எழுத்து வரும்.அப்படித்தானே....?


ஆனால்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களைப் பற்றி இறைவன்குர்ஆனில்,

நபியே !நீங்கள்இதற்கு முன்னர் யாதொரு வேதத்தைஓதி அறிந்தவருமல்ல ;உங்களுடையகையால் நீங்கள் அதனை எழுதிப்பழகியவருமல்ல .- குர்ஆன்(29:48) -

அந்தஅல்லாஹ்வையும்,எழுதப் படிக்கஅறியாத அவனுடைய இத்தூதையும்நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக!

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபிப்பட்டம் பெறுவதற்குமுன்னால் ஜபல்நூர் என்னும்மலையிலுள்ள ஹிரா குகையில்தவம் இருந்தார்கள்.ரொம்ப காலத்திற்குப்பிறகு இறைவன் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைஇம்மனிதகுலத்திற்கு இறுதிநபியாக பிரகடனம் செய்துவானவர்களின் தலைவர் ஜிப்ரயீல்(அலை)மூலமாக ரமலான்பிறை 27 இரவில்புனித குர்ஆனின் 96வதுஅத்தியாயமான சூரா “அலக்”கில் முதல் ஐந்து வசனங்களைமட்டும் அருளினான்.


அவன்தான் எழுதுகோலைக் கொண்டுஎழுதக் கற்றுக் கொடுத்தான் ;அன்றி அந்தஎழுதுகோலின் மூலம் மனிதன்அறியாதவைகளெல்லாம் அவனுக்குக்கற்றுக் கொடுத்தான் .குர்ஆன்(96:45)


நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் எழுதப் படிக்கத்தெரியாதவர்கள்.அந்த உம்மிநபிக்கு எழுதுகோலைக் கொண்டுகற்றுக் கொடுத்தான் என்றவசனம் அருளியது உங்களைச்சற்று யோசிக்க வைத்து,வியக்கவைக்கிறதா...?


எழுதுகோலைப்பற்றி கொஞ்சம் விசாரிப்போம்.இங்கு எழுதுகோல்என்பது சிருஷ்டிக்கப்பட்டபொருள்களில் முதலாவதாகிய“கலமுல் அஃலா” வைச் சுட்டிக்காட்டுகிறது.இதுதான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களது உயிர்-என்றுசொல்லப்படுகிறது.

( ஆதாரம் :தப்ஸீருல்ஹமீத் )


அதாவது,எழுதப் படிக்கத்தெரியாத உம்மி நபியின் உயிர்எழுதுகோலால் ஆனது.இது இரண்டாம்வியப்பாக இருக்கிறதல்லவா...?


அடுத்துவாருங்கள்,அன்னை ஆயிஷா(ரலி)அவர்களிடம்,நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின்வாழ்க்கையைப் பற்றி விசாரித்தபோது, நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின்வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததுஎன்றார்கள்.பிறிதொரு சமயம்அன்னையிடம்,குர்ஆனைப்பற்றிக் கேட்டபோது குர்ஆன்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வாழ்க்கையாகஇருந்தது என்றார்கள்.

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையாக இருந்தகுர்ஆனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உயிரானஎழுதுகோலால் எழுதப் பட்டிருக்கிறது!எனவே தான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வார்த்தைகள்வஹியாகவும்,அவர்களின்வாழ்வியல் முறைகள் ஹதீஸ்களாகவும்உலகிலுள்ள கோடான கோடி எழுதுகோல்களால் எழுதப்பட்டுள்ளன.மற்றவர்கள்பின்பற்றக்கூடிய அழகான முன்மாதிரியாகவும் அமையப்பெற்றுள்ளது.இப்போதுகீழ்க்கண்ட வசனத்தைப் பாருங்கள்.பொருள் விரியும்.


அவன்தான்எழுதுகோலைக் கொண்டு எழுதக்கற்றுக் கொடுத்தான் ;அன்றி ,அந்த எழுதுகோலின்மூலம் மனிதன் அறியாதவைகளையயல்லாம்அவனுக்குக் கற்றுக் கொடுத்தான் குர்ஆன்(96:4,5)


அல்லாஹ்படைத்தவற்றில் முதலாவது என்னுடைய பேரொளியாகும். அப்பேரொளியிலிருந்து தான் இறைவன் தன்படைப்புகள் அனைத்தையும்படைத்தான் என்பதாக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹதீஸ் குத்ஸியில்பதியப்பட்டுள்ளது.எனவேதான், “லவ்லாகலமா கலக்துல் அஃப்லாக்” நீர்இல்லையாயின் வானங்களைப்படைத்திருக்க மாட்டேன் என்றதிருவசனமும் வழங்கி வருகிறது!



நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களைப் பற்றிக்கூறும்போது,ஆதம் மண்ணுக்கும்நீருக்கும் நடுவில் இருந்தபொழுதே நான் நபியாக இருந்தேன்- (அனநபிய்யுன் வ ஆதமு பைனல் மாஇவத்தீன்) என்றும்,ஆதம் இறைவனின்நினைவில் இருக்கும் பொழுதே-உருவாகஆக்கப்படுமுன்னே-நான் நபியாகஇருந்தேன் என்றும்,நான் இறைவனுடையஒரு தனிப்பட்ட நேரத்தில்இருந்தேன்.அப்பொழுதுஎந்த ஒருவரும்,வானவரும்உலகிற்கு அனுப்பப்பட்ட எந்தநபியும் படைக்கப்பட்டிருக்கவில்லைஎன்றும் கூறினார்கள்.



இறைவன்லவ்ஹுல் மஹ்பூல் என்னும்பலகையையும் அதில் எழுதுவதற்கானஎழுதுகோலையும் படைத்தான்.அந்தப் பலகையில்தன்னைப் பற்றியும்,நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றியும்,உலகம்,சொர்க்கம்,நரகம் இவைகளைப்பற்றியெல்லாம் எழுதினான்.லவ்ஹுல் மஹ்பூல்பலகையில் எழுதிய எழுதுகோல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்உயிர் என்பதால்தானோ என்னவோ,இன்ன ரஹ்மத்தீஹலபத் அலா ஹளபீ (என்இரக்கம் என் சினத்தை மிகைத்துவிட்டது) என்றும்எழுதினான்.இதனால்தான்என்னவோ குர்ஆனில், உங்களுடையபுகழை நாம் உயர்த்தினோம் -குர்ஆன்(94:04 ) என்றுஇறைவன் அருளினான்.


எழுதுகோலைப்பற்றி இன்னும் தொடர்ந்துஆய்வோம்.

ஆதமைப்படைத்து ஆதமுக்கு எல்லாப்பொருட்களின் பெயர்களையும்அவற்றின் தன்மைகளையும் கற்றுக்கொடுத்து அவைகளை அந்தமலக்குகளுக்கு முன்பாக்கி,மலக்குகளே...!ஆதமுக்குஎன்னுடைய பிரதிநிதி ஆவதற்குரியதகுதி இல்லை என்று கூறினீர்களே...!இதில் நீங்கள்உண்மையானவர்களாக இருந்தால்,இதோ உங்கள்முன்னிருக்கும் இவற்றின்பெயர்களை எனக்கு அறிவியுங்கள்!எனக் கூறினான்.அவ்வாறு அறிவிக்கமுடியாமல் அவர்கள் இறைவனைநோக்கி, நீமிகத் தூய்மையானவன்.நீ எங்களுக்குஅறிவித்தவற்றைத் தவிரவேறொன்றையும் நாங்கள் அறியமாட்டோம்.நிச்சயமாக நீமிக்க அறிந்தவனும் ஞானம்உடையவ னாகவும் இருக்கின்றாய்எனக் கூறினார்கள்.பின்னர் இறைவன்கற்றுக் கொடுத்த அந்தப்பாடத்தின் புரிதல் முறைகள்நபி ஆதம் (அலை)தொட்டு அவரதுசந்ததி சந்ததியாகத் தொடர்கிறதுஎன்பதாக விஞ்ஞானம் சுட்டிக்காட்டுகிறது!


மொழியியல்வல்லுநர் நவம் சாம்ஸ்கிமொழிகளைப் பற்றி ஆய்வு செய்து,உலகிலுள்ளமொழிகள் அனைத்திற்கும் ஒருபொதுவான சூழ்நிலை அமைப்புஇருக்கிறது!என்கிறார். உங்கள்வீட்டில் குழந்தை இருக்கிறதா...அப்படியானால்கவனமாகப் பேசுங்கள்.நீங்கள் கூறும்வார்த்தைகளின் அர்த்தங்களைகுழந்தை புரிந்து கொள்கிறதுஎன்கிறார்கள் ஆய்வாளர்கள்.அமெரிக்காவின்பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்தஆய்வாளர்கள் ஆறு மாதம் ஆகும்குழந்தைகள் கூட உணவுகள்,உடல் பாகங்களுக்கானவார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள்.குறிப்பிட்டவி­யங்களுக்கானவார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்குமுன்பே குழந்தைகளுக்கு இந்தப்புரிதல் வந்துவிடுகிறது.குழந்தைகளுக்குஇந்த வார்த்தை புரியுமா என்றுயோசிக்காமல்,அவர்கள் முன்இயல்பாகப் பேசி வந்தால்,பின்னாளில்அவர்களின் மொழித்திறன்சிறப்பாக அமையும் என்பதுஆய்வாளர்கள் கூறும் தகவல். பொதுவாககுழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக்கிரகித்துக் கொள்ள ஆரம்பிக்கின்றனஎன்று கருதப்பட்டு வருகின்றது.அப்போதும்கூட குழந்தைகள் தங்கள்தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான்புரிந்து கொள்கின்றனவே தவிர,அர்த்தங்களைஅல்ல என்றும் எண்ணப்பட்டுவருகிறது. ஆனால்புதிய ஆய்வுக்குத் தலைமைவகித்த மனோவியல் நிபுணர்கள்எலிகா பெர்கெல்சன் மற்றும்டேனியல் ஸவிங்லி கூறுகையில்,குழந்தையைக்கவனித்துக் கொள்பவர்,ஆப்பிள் எங்கேஇருக்கிறது...?என்ற கேள்வியைத்திரும்பத் திரும்பக் கேட்கும்போது, அதைநோக்கி குழந்தையின் பார்வைதிரும்புகிறது என்றார்கள்.இது தொடர்பானஆய்வுக்கு 6முதல் 9மாத வயதுள்ள33 குழந்தைகள்எடுத்துக் கொள்ளப்பட்டன.அவர்களுக்குமுன்பு அவர்களுக்கு முன்புகணினித் திரையில் பல்வேறுபொருட்கள் காண்பிக்கப்பட்டன.ஆனால் ஒருகுறிப்பிட்ட பொருளைக் கூறியதும்அதை நோக்கி குழந்தைகளின்பார்வை திரும்பின.


ஆறுமுதல் ஒன்பது மாத வயதுக்குழந்தைகள்,மற்ற படங்களைவிட, சத்தமாகக்கூறப்பட்ட பொருட்களின்படங்களின் மீதே தங்கள் பார்வையைநிலைத்திருந்தன.இது,குறிப்பிட்டவார்த்தைகள்,குறிப்பிட்டபொருட்களுடன் தொடர்புடையவைஎன்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக்காட்டுகிறது என்கிறார்கள்ஆய்வாளர்கள்.


இந்தவயதுக் குழந்தைகளும் இதைப்போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. மம்மி,டாடி போன்றவார்த்தைகளைக் குழந்தைகள்வெகு சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவேசில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.ஆனால் பல்வேறுவகையான வார்த்தைகளையும்குழந்தைகள் புரிந்து கொள்கின்றனஎன்று எங்கள் ஆய்வின் மூலம்தான்முதன் முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்கிறார்ஆய்வாளர் டேனியல் ஸ்விங்லி....ஆனால் இறைவன்தான் கற்றுக் கொடுத்த பாடங்களின்புரியும் தன்மை மனிதன் கருவில்இருக்கும் போதே உணர்ந்துகொள்வான் என்பதை சூசகமாககுர்ஆனில் முதன் முதலில்இறங்கிய வசனத்தில்


நபியே !அனைத்தையும்படைத்த உங்களது இறைவனின்திருப்பெயரை நீங்கள் ஓதுவீராக !அவனே மனிதனைகருவிலிருந்து படைக்கின்றான் .நபியே !பின்னும்நீங்கள் ஓதுங்கள் !உங்களதுஇறைவன் மாபெரும் கொடையாளி !அவன்தான்எழுதுகோலைக் கொண்டு எழுதக்கற்றுக் கொடுத்தான் .அன்றி அதன்மூலம் மனிதன் அறியாதவை களைஎல்லாம் அவனுக்குக் கற்றுக்கொடுக்கின்றான் .குர்ஆன்(96: 1-5)


எனவேஅன்று படித்த பாடத்தை இன்றுஎழுதுவதற்கு எழுதுகோலை இறைவன்இப்பூமியில் உள்ள அனைவருக்கும்கொடுத்துள்ளான். எழுதுகோல்என்பது கூட மனதால் புரிந்துகொள்ளல் தானோ?என்பது மட்டும்அல்லாமல்,எழுதுகோல்என்பது கலமுல் அஃலா நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் உயிர் என்பது உங்கள்ஞாபகத்தில் இருக்கட்டும்.அன்று படித்தபாடத்தை ஆயிரத்து நானூறுவருடங்களுக்கு முன்பாக ஓர்எழுதுகோல் முழுமையாக எழுதிவிட்டுச்சென்றுள்ளது...!இங்கேயும்உங்களது சிந்தனை இருக்கட்டும்!!