• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai         »     2014     »     Feb 2014     »     ஜமாலிய்யாதோட்டத்தில்


ஜமாலிய்யாதோட்டத்தில்



அல்லாஹு தஆலா சொன்னான் :


கெளதுல் அஃலமே !நபிமார்கள் முர்ஸல்களல்லாத சில அடியார்கள் எனக்குளர்.துன்யாவை (இகத்தைஉடையவர்களிலிருந்துஆகிராவை (பரத்தை)உடையவர்களிலிருந்துநரகத்தையுடயவர்களிலிருந்துசுவர்க்கத்தை யுடையவர்களிலிருந்து எவரும் ,சுவர்க்கத்தின் மலக்கான ரிள்வானும் ,நரகத்தின் மலக்கான மாலிக்குமே அவர்கள் நிலைமைகளையறிய மாட்டார்கள் .


நான் அவர்களை சுவர்க்கத்திற்காகவோ ,நரகத்திற்காகவோ ,வெகுமதிக்காகவோ ,வேதனைக்காகவோ ,சுவர்க்கத்தின் ரம்பைகளுக்காகவோ ,மாளிகைகளுக்காகவோ ,ஊழியர்களுக்காகவோ படைக்கவில்லைஅவர்களை அறியாதிருந்தாலும் அவர்களைக்கொண்டு விசுவாசங் கொண்டவர்களுக்கே சோபனம் .


கெளதுல் அஃலமே !நீரோ அவர்களினின்று மாவீர் !


உலகில் அவர்களின் அடையாளங்களிற் சிலது :-

குறைந்த ஆகாரம் ,குடிப்பினால் அவர்களின் திரேகங்கள் கரிந்திருக்கும் .இச்சைகளை விட்டும் அவர்களுடைய நஃப்ஸுகள் கரிந்திருக்கும் .ஆலோசனைகளை விட்டும் அவர்களுடைய கல்புகள் கரிந்திருக்கும் .இன்பங்களை விட்டும் அவர்களுடைய உயிர்கள் கரிந்திருக்கும் .அவர்களோ சந்திப்பின் ( ஹக்கை )ஒளிகொண்டு கரிக்கப்பட்ட நித்திய ஜீவனையுடையவர்களாவர் .( அவர்களின் இந்த நிலைமை ஆரம்பப்பாட்டின் பிரயாசையின் போதாகும் .வெற்றி கண்டபின்னல்ல .



மெய்ஞ்ஞான போதனை அல்லது இரட்சண்ணிய பிரபந்தம் ( ரிஸாலத்துல் கெளதிய்யா )நூலில் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானா ( ரலி )அவர்கள் .