• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai       »      2014    »   Feb 2014    »    இறைவனின் ரகசியம்


இறைவனின் ரகசியம்



இறைவனே !உனக்கு இடம் உண்டுமா என்று கேட்டேன் .அல்லாஹு தஆலா சொன்னான் :

கௌதுல் அஉளமே !நான் இடத்திற்கு இடமாகவிருக்கிறேன் .இடத்தையும் உலகங்களையும் நானே உண்டாக்குகிறவனாயிருக்க ,இன்ஸானின் இருதயத்திலிருக்கும் இரகசியத்தைத்தவிர ,எனக்கு வேறு இடமில்லை .

விளக்கம் : தாத்தென்னும் ஹக்காகிய இறையின் பிரணவ உள் e மையின்படி ஹக்குக்கு ஓரிடமில்லை .இடத்துக்கு இடமானது .அதற்கு இடமொன்றில்லையென்னும்படி ஹக்காகிய இறையே எங்குமாய்ப் பூரணமாய் இடையற நிறைந்து பிரபஞ்சமனைத்துமாய் பிரிவற நிறைந்து அனைத்தும் தானேயாகி மறைந்து குறைந்து கொண்டேயிருப்பதுமின்றி ,நிறைந்து கொண்டேயிருப்பதுமின்றி குறைவு நிறைவு இல்லாதவனாய் சர்வ வியாபகியாய் உள்ளவனே அவனாகும் .எனவே பூரண மனிதனாகிய இன்ஸான் காமிலின் உள்ளத்திலே உள்ள ஸிர்ராகிய இரகசியமே அவனுக்கு இடமாவதுதவிர அவனுக்கு வேறிடமே இல்லை .

அல்லாஹுதஆலா சொன்னான் :கௌதுல் அஉளமே !இன்ஸான் ( மனிதன் )எனது இரகசியம் ;நானோ அவனின் இரகசியம் .இன்ஸானின் இரகசியம் எனது இரகசியத்தினின்றுமாகும் .

ரிஸாலா கெளதிய்யா நூலில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் .




மனிதனுடைய நஃப்ஸானது இறை நாட்டத்தை எதிர்க்கும் தன்மையும் முரண்படும் சுபாவமும் உடையது ,ஈடேற்றம்பெற விரும்புபவன் மனதிலுள்ள தீமை உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும்வரை சத்முயற்சியிலும் ஆத்மப் பிரயாசைகளிலும் ஈடுபட வேண்டும் .மனமானது ஆரம்ப நிலையில் தீமையின் உருவாய் அமைந்து கிடக்கிறது. ஆனால்,நற்பிரயாசையும் சத்முயற்சியும் நிறைவுபெற்று அடக்கமும் சாந்தியும் ஏற்பட்டதும் அது முற்றும் நன்மை நிறைந்ததாகி விடுகிறது .


உங்கள் உள்ளங்களுக்கு முதலில் உபதேசியுங்கள் ;பிறகு மற்றவர்களின் மனங்களுக்கு உபதேசிக்கலாம் ;மகனே ,உன் ஆத்மாவுக்கே நப்ஸுக்கே -முதன் முதலில் போதனை செய் !பிறகே மற்றவர்களுக்குப் போதனை புரிய முற்படு !உன்னில் சீர்திருத்தம் பாக்கியாக இருக்கும் நிலையில் பிறரைத் திருத்த நினைக்க வேண்டாம் .நீயே மூழ்கும் நிலையில் பிறரைக் கரை சேர்ப்பதெப்படி ?நீயே கண்ணில்லாதிருக்கையில் பிறரை வழிநடத்துவதெப்படி ?


-ஹள்ரத் கெளதுல் அஉளம் முஹிய்யுத்தீன் ஆண்டகை ( ரலி )-



என் பார்வையில் நீ ......

 

அல்லாஹ் கூறுகிறான் .   ஆதமுடைய மகனே ! உன்னிடமிருந்து ஆறு காரியங்கள் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும் .

1.   ஆதமுடைய மகனே ! உனக்குச் சொர்க்கம் என்னிடமிருந்து கிடைக்கும் . ஆனால் உன்னிடமிருந்து வழிபாடு உண்டாக வேண்டும் .

2.   ஆதமுடைய மகனே ! தெய்வீகத் தன்மை என்னிலிருந்து உண்டாகும் .   ஆனால் அடிமைத் தனம் உன்னிடமிருந்து உண்டாக வேண்டும் .

3.   ஆதமுடைய மகனே ! சோதனை என்னிடமிருந்து உண்டாகும் ! ஆனால் பொறுமை   உன்னிடமிருந்து உண்டாக வேண்டும் .             

4.   ஆதமுடைய மகனே ! ஒப்புக் கொள்வது என்னிலிருந்து உண்டாகும் ! ஆனால் பிரார்த்தனை உன்னிடமிருந்து உண்டாக வேண்டும் .

5.   ஆதமுடைய மகனே ! உணவு அளிப்பது என்னிலிருந்து உண்டாகும் ! ஆனால் நன்றி செலுத்துவது உன்னிடமிருந்து உண்டாக வேண்டும் .

6.   ஆதமுடைய மகனே ! மன்னித்தல் என்னிலிருந்து உண்டாகும் . ஆனால் மன்னிப்புத் தேடுவது உன்னிலிருந்து உண்டாக வேண்டும் .   மேலும் அல்லாஹ் கூறுகிறான் . என் அடியானே ! பல வருடங்களாக மனிதன் பார்வையில் நீ நல்லவனாக இருந்தாய் .   சிறிது நேரமாவது என் பார்வையில் நீ நல்லவனாக இருந்தாயா ?  

    
- ஹதீஸ் குத்ஸி -