இலங்கை வலிகமாவில்
சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் நடத்திய 8 ஆம் ஆண்டு
மாபெரும் மீலாது கந்தூரிப் பெருவிழா !
நூற்கள் - குறுந்தகடுகள் வெளியீடு
தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா சார்பில் இலங்கை வலிகாமம் 52. புகாரி மஸ்ஜித்மாவத்த , பைத்துல் பரகாஹ் இல்லத்தில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் புனித தலைமையில் கந்தூரி , மீலாதுன்னபி பெருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. முன்னதாக 11, 12, தேதிகளில் புர்தா ரீப் , ரஸூல் மாலை , வித்ரிய்யா , மெளலிது ஆகியன ஓதப்பட்டன . 14.1.2014 அன்று ராதிபு மஜ்லிஸ் நடைபெற்றது .
13.01.2014 திங்கள் அன்று தொடங்கிய மீலாது விழாவில் விழா தொடங்கும் முகமாக மெளலவி , ஹாஃபிழ் , முஹிய்யுத்தீன் ரிள்வான் ஹக்கிய்யுல் காதிரிய் கிராஅத் ஓதிட கலீபா ஏ . பி . ஹாபுத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் தமிழுரை படித்தார் . கிளியனூர் இஸ்மத் அவர்கள் விழா அறிமுக உரை நிகழ்த்தியபின் , ஆலிம்புலவர் , அதிரை ஷர்புத்தீன் , கிளியனூர் இஸ்மத் . பாக்கம் கோட்டூர் அப்துல் ஹமீது பாக்கவி ஹக்கிய்யுல் காதிரிய்கள் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் இயற்றிய “ யாநபிய்யல்லாஹ் ” பைத்தினைப் பாடினர் .
காயல்பட்டினம் ஹாஃபிழ் , மெளலவி , அல்ஹாஜ் ஹெச் . ஏ . அப்துல்காதிர் ஆலிம் மஹ்ழரி ( கதீப் ஜும்ஆ பள்ளி - காயல்பட்டினம் ) பெருமானாரின் சிறப்பான உதயம் பற்றியும்“ தஸவ்வுப் . திக்ரு , தரீக்காக்கள் ” எனும் தலைப்பிலும் , அல்ஹாஜ் , மெளலவி , ஃபழீல் ஆலிம் காஸிமிய்யி “ ஸலவாத்து சொல்வதன் ” அவசியம் எனும் தலைப்பிலும், அல்ஹாஃபிழ் இஹ்ஸான் இக்பால் றஸ்வி “ இஸ்லாமும் வஸீலாவும் ” தலைப்பில் ஆங்கிலத்திலும் , மெளலவி , பி . ஏ . காஜா முஈனுத்தீன் பாக்கவி ( பேராசிரியர் , உஸ்மானிய்யா அறபுக்கல்லூரி - மேலப்பாளையம் ) “ இமாம்களும் மதுஹபுகளும் ” என்ற தலைப்பிலும் , காயல்பட்டினம் மஹ்ழரா அறபுக்கல்லூரி பேராசிரியர் ஹாஃபிழ் , அப்ழளுல் உலமா எஸ் . செய்யித் அப்துற் றஹ்மான் தங்கள் “ இல்முல் கைப் -” மாநபிகளாரின் மறைமுக ஞானம் தலைப்பிலும் , கலீபா , ஆலிம்புலவர் எஸ் . ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ நூரே “ முஹம்மதிய்யா ” பற்றியும் உரை நிகழ்த்தினர் .
விழாவில் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையிது யாஸீன் நாயகம் ( ரலி ) அவர்கள் ஆக்கிய காமூஸ் அறபு - தமிழ் அகராதியை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வெளியிட இலங்கை கெளரவ மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸையித் அலவி மெளலானா அவர்களின் அந்தரங்க செயலாளர் அல்ஹாஜ் அஸ்ஸையித் நகீப் மெளலானா அவர்கள் முதற் பிரதியையும், துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை பதிப்பித்த ரஹ்மத்து ( ன் ) ல் லில் ஆலமீன் - “ பிரபஞ்சத்தின் அருட்கொடை ” நூலினை சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் வெளியிட முதற் பிரதியை ஹெச் . ஏ . அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஆலிம் அவர்களும் , சென்னையில் நடைபெற்ற குறிஞ்சிச் சுவை நூல் வெளியீட்டு விழா குறுந்தகடை அஸ்ஸையித் ஹாரிஸ் மெளலானா அவர்களும் , கர்நாடகா உருதுப் பாடகர் முஹம்மது ஹனீஃப் ரஜா காதிரிய்யுடன் வந்த முஹம்மது நபீல் “ ஸர்கார்ஸப் ஜான்தே ஹே ” உருது கஸீதாக்கள் , கவ்வாலிகள் குறுந்தகடினை அஸ்ஸையித் மஸ்ஊத் மெளலானா அல்ஹாதீ அவர்களும் பெற்றுக் கொண்டனர் .
கர்நாடகா உருதுப் பாடகர் முஹம்மது ஹனீஃப் ரஜா காதிரிய் மற்றும் குழுவினர் , அனைவரும் ரசிக்கும் வகையில் பெருமானார் மீது புகழ்ப் பாடல்கள் பாடினர் . விழாவின் இறுதியில் ஏ . என் . எம் . யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் நன்றியுரை நிகழ்த்தினார் . விழாவிற்கு இந்தியா , துபை , ஷார்ஜா , அபுதாபி , குவைத் , சிங்கப்பூர் . மலேஷியா , கத்தார் , லண்டன் மற்றும் பல நாடுகளிலிருந்தும் முரீதுகள் கலந்து கொண்டதோடு , இலங்கையின் பல ஊர்களிலிருந்தும் , உள்ளூர் ஜமாஅத்தார்களும் கலந்து சிறப்புப் பெற்றனர் .
இவ்விழாவின் பணிகளை இலங்கை முரீதுப் பிள்ளைகள் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் ஏற்பாட்டின்படி மிகச்சிறப்பாக செய்திருந்தார்கள் .
ஒரு மாநாடு போல நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களோடு இருந்து , அடிக்கடி அவர்களின் திருமுகம் கண்டு , தங்கள் நாட்டங்களைக் கூறி , அருள்துஆ பெற்று 2014 ஆம் ஆண்டின் மறக்க முடியாத நாட்களாக நெஞ்சங்களில் பதிவு செய்து ஊர் திரும்பினர் . அல்ஹம்து லில்லாஹ் !