2014 இலங்கை மீலாதுநினைவலைகள் …
ஆலிம்புலவர்
இந்த ஆண்டு சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தாங்கள் நடத்தும் மீலாது விழாவுக்கான தேதிகளை முடிவு செய்து இன்ன இன்ன தேதியில் இந்த இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் ; முரீதுப் பிள்ளைகள் தங்குவதற்காக தங்குமிடங்களையும் ஆயத்தம் செய்துவிட்டோம் என அறிவித்திருந்தார்கள் .
வாப்பா நாயகம் அவர்களின் அழைப்பு அறிவிப்பு கிடைத்ததும் அந்தந்த ஊர் சபைகளில் அறிவிக்கப்பட்டபோது முரீதுப் பிள்ளைகள் மகிழ்வுடன் மனதளவில் இலங்கை புறப்படுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள் .
சொற்பொழிவாற்ற வரும் மார்க்க அறிஞர்களிடம் முன்கூட்டியே அறிவித்து விடுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது . அடியேன் மஹ்ழரி ஹள்ரத்திடம் தெரிவித்தபோது அவர்கள் வருவதற்கு ஒப்புக் கொண்டர்கள் . ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்திடம் தொடர்பு கொண்டு வழக்கம்போல் இந்த ஆண்டும் மீலாது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த போது !... ஒரு வி யம் உங்களிடம் பேச வேண்டும் ...... என்று தயங்கியபடியே பேச்சைத் தொடங்கி , இந்த ஆண்டு சிங்கப்பூரில் 12 நாட்கள் தொடர் பயானிற்காக அழைத்தார்கள் . நான் அவர்களிடம் ஆண்டுகள் தவறாமல் வாப்பா நாயகம் அவர்களின் புனித விழாவிற்குச் சென்று வருகிறேன் . அதனால் சிங்கப்பூர் வர இயலாது என தெரிவித்தேன் ... அதற்கு அவர்கள் ; சிங்கப்பூரில் குழப்ப வாதிகள் மக்களின் ஈமானைக் குலைக்க முற்படுகிறார்கள் . எனவே அவசியம் தாங்கள் வந்து மறுப்புரைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள் . அதற்கு அடியேன் அப்படியானால் வாப்பா நாயகம் அவர்களிடம் கேட்டு அவர்கள் அனுமதித்தால் சிங்கப்பூர் வருகிறேன் என சொல்லிவிட்டேன் . எனவே நீங்கள் வாப்பா நாயகமவர்களிடம் பக்குவமாக எடுத்துக் கூறி அவர்கள் சம்மதம் தந்தால் சிங்கப்பூர் செல்கிறேன். இல்லையயனில் இலங்கை வந்து விடுகிறேன் எனத் தெரிவித்தார் !
அந்தச் சமயத்தில் சங்கைமிகு செய்கு நாயகமவர்கள் தமிழகம் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஜமாலி அவர்கள் கூறிய விஷயத்தை இலேசாக எடுத்துச் சொன்னபோது சற்று யோசித்து விட்டு , அவர் அங்கு சென்று வருவதால் பயன்பெறுவார் அல்லவா ? எனவே சென்று வரட்டும் எனக் கூறினார்கள் . இந்த விஷயத்தை ஜமாலி ஹழ்ரத்திடம் கூறியதும் அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் .
ஜமாலி அவர்களின் பயான் , கேள்வி - பதில் நிகழ்ச்சியை இலங்கை மக்கள் அதிகம் விரும்பினர் . இந்த ஆண்டு அவர் வரவில்லையயனில் வேறு ஒரு நல்ல சொற்பொழிவாளரை ஏற்பாடு செய்ய வேண்டுமே ! அப்படி வருபவரை வாப்பா நாயகம் அவர்கள் பொருந்த வேண்டுமே என்ற கவலை எனக்கு . அன்புக்குரிய என் . எஸ் . என் , ஆலிம் மற்றும் அதிரை அப்துர் ரஹ்மான் மற்றும் சில முரீதுகளிடம் தொடர்பு கொண்டு காயல்பட்டினம் அப்துர் ரஹ்மான் ஆலிம் , மேலப்பாளையம் காஜா முயீனுத்தீன் ஹள்ரத் இருவரின் சம்மதத்தையும் பெற்றேன் . அல்ஹம்துலில்லாஹ் ..
எப்போதும் நான்கு அறிஞர்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்வது வழக்கம் . இந்த ஆண்டு மூன்று ஆலிம் பெருமக்கள் தானே கிடைத்துள்ளனர் என எண்ணி சங்கைமிகு நாயகமவர்களிடம் தெரிவித்த போது சரி .. மூன்று பேரே போதும் என சம்மதித்தார்கள் .காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் விழாவிற்கு மூன்று பேச்சாளர்கள் எவ்விதம் போதும் ? என கவலைப்பட்ட எனக்கு அதிரை ஷ ர்புத்தீன் ஹ . கா . அவர்களிடமிருந்து வந்த போன் செய்தி சற்று ஆறுதல் அளித்தது . அது என்ன செய்தி ?
( இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ...)