• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »   2014   »   Jan2014   »   மெய்யொளி பதில்கள்


மெய்யொளி பதில்கள்

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்போல் மற்ற ரஸூல்மார்களுக்கும் நபிமார்களுக்கும் ஏன் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை என ஒருவர் கேட்கிறார் . தங்களின் பதில் ?

கிறிஸ்துமஸ் ஈசா ( அலை ) அவர்களின் பிறந்தநாள் தானே .                


"ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனைத்திற்கும் ஓர் எல்லையாக வைத்துக் கொள்ளுங்கள் என சங்கைமிகு வாப்பா நாயகமவர்கள் கூறுவதன் தத்துவார்த்தம் என்ன ?

எல்லையற்ற நிலைக்கு எல்லையாய் இருப்பவர்கள் அவர்கள் தாமே .


அஹ்மது , முஹம்மது ,ஹாமிது , மஹ்மூது இவற்றில் தங்களைக் கவர்ந்த திருநாமம் எது ? ஏன் ?

அஹதே அஹ்மதாய் முஹம்மதாய் ஹாமிதாய் மஹ்மூதாய் பரந்து விரிந்து நிலைகொண்டுள்ளது .  

            

மீலாது , கந்தூரி பெயரால் ஒருவேளை சாப்பாடு போடுவதால் மக்களின் பசிப்பிணி அகன்று விடுமா ?என்பதாக ஒருவர் கேட்கிறார் ! தங்களின் பதில் ?

ஒரு வித்து வளர்ந்து மரமாகி காலம் காலத்திற்கும் பயன் தருவதை அவர் கண்டதில்லை போலும் .


ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மிகைத்திருந்தது பொறுமையா ? ( அருமை )பெருமையா ?

திறமை .   திறமை - முழுமையின் வெளிப்பாடு .


மனிதன் மனிதனாக வாழ்வது அற்புதம் ;அதுவேதான் ­ ரீஅத் !அப்படியானால் ஹகீகத் என்பது என்ன ?

ஹகீகத்தில் கனிந்த கனிதானே ­ ஷரீஅத் .


ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம்மைப் போன்ற மனிதரே எனச் சொல்ல வஹ்ஹாபிகள் வரிந்து கட்டிச்  செயல்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்ன ?

வாலறுந்த நரிகள் .

ஆமை புகுந்த இதயங்கள் .


தங்களைக் கவர்ந்த நபிமொழி என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள் ! அது ஏன் ?

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி “    அனைத்திற்கும் மூலம் அதுதானே .


இறைநேசம் .. நபிநேசம் ...எது உன்னதம் ?ஏன் ?

இல்லாதது தோன்றாது   இருப்பது அழியாது .


நபிப்பட்டம் பெற்று சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் தான் தொழுகை கடமையானது !அந்தப் பன்னிரண்டு ஆண்டுகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவில்லையே ... என்கிறார் ஒருவர் ! தங்களின் பதில் ?

இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் தோன்றியது. பிறகு இலக்கணமே இலக்கியங்களுக்குக் காரணமாகிறது .


திருக்குர்ஆன் ­ ரீஃபில் ...ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் சிறப்பு அம்சங்களாக ரஹ்மதுன் லில் ஆலமீன் “,“ உஸ்வதுன் ஹஸனா எனக் கூறப்படுகின்றன ! இவ்விரண்டில் எதனைப் பிரதானம் என்பீர்கள் !ஏன் ?

ரஹ்மத்துன் லில் ஆலமீனாக இருந்தமையால் தான் உஸ்வத்துன் ஹஸானா வாக இருந்தார்கள் .

உஸ்வத்துன் ஹஸனா வே   ரஹ்மத்துன் லில் ஆலமீன் என்பதற்கு எடுத்துக்காட்டு.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி எனக் கூறப்படுவது ஏன் ?

கண்ணாடி தன்னைத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது .

காணுபவர்கள் தான் தன்னை அதில் கண்டுகொண்டிருக்கிறார்கள் .

 

 

தோன்றின் புகழொடு தோன்றுக என்னும் குறளின் மூலம் பிறந்தால் உம்மத்தே முஹம்மதிய்யாவாக பிறந்துவிடு ... இல்லையேல் நீ பிறக்காமல் இருப்பதே உத்தமம் என்பதாக ஒரு பத்திரிகையில் விளக்கம் கூறப்பட்டிருக்கின்றது ! தங்களின் கருத்து என்ன ?

பிறந்தவனைப் பார்த்து பிறக்காமல் இருப்பது உத்தமம் என்று கூற முடியாது .

பிறந்து விட்டமையால் பெருமானாரின் உம்மத்தாக இருப்பதே சிறப்பு .


ஒரு கையில் இறைவேதம் ; மறு கையில் நபிபோதம் ... எதனை முதலில் பெறுவீர்கள் ! ஏன் ?

நபிபோதமே இறைவேதத்திற்கு ஆதாரம் .


ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தாங்கள் எதுவாகப் பார்க்கின்றீர்கள் ? மாதாவாகவா ? பிதாவாகவா ?குருவாகவா ? ஏன் ? எனக் கூறுங்களேன் !

என் குருவாக


ஹள்ரத் ஆதம் ( அலை ) அவர்கள் மண்ணுக்கும் தண்ணீருக்குமிடையே இருக்கும் போது நான் நபியாகவிருந்தேன் எனக் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளுவதன் தாற்பரியக் கருத்தென்ன ?

ஐம்பூதங்களுக்கும் ஆதாரமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் என்பதே .

அன மின்னூரில்லாஹ் வகுல்லு ஸய்யின் மின்னூரீ ” - ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .)


ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்குடும்பத்தினருக்கு மரியாதை செய்வதால் மட்டும் ஈடேற்றம் கிடைத்து விடுமா என்ன ?என ஒருவர் கேட்கிறார் ! தங்களின் சாட்டையடி பதிலை எதிர்பார்க்கிறேன் ?

நபி ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) “ வாசம் உள்ள இடத்தில் இருந்தால் நாமும் வாசம் பெறுவோம் .

அரசியல்வாதிகள் குடும்பத்தைப் புகழ்ந்தால் பதவி கிடைக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் குடும்பத்தைப் போற்றினால் நிச்சயம் இறைவனிடம் ஈடேற்றம் கிடைக்கும் என்று சொல்லுங்கள் .


உலகில் ஒருவர் புகழ் பெற வேண்டுமானால் ஒன்று கண்மணி ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களைப் புகழ வேண்டும் அல்லது இகழ வேண்டும் ( நஊதுபில்லாஹ் ) என்பதாக ஆலிம் ஒருவர் மீலாது விழாவில் பேசினார் ! இக்கூற்று சரியா ?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்த அறிஞர்கள் இன்னும் வாழ்கிறார்கள் .

இகழ்ந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள் .


ஒரு சிலர் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் ­ ரீஃப் ஓதிக்கொண்டிருக்கிறார்கள் ... வேறு சிலர் மவ்லிது ­ ரீஃப் ஓதிக் கொண்டிருக்கிறார்கள் ... தாங்கள் எந்த மஜ்லிஸிற் சென்று அமர்வீர்கள் ? ஏன் ?ஏன் ?

அல்லாஹ் விரும்பும் இடத்தில் .