வஹாபிகள் ஸஹாபியவேடங்களில்
சந்தனம் பூசலாமா ?புஷ்பம் போடலாமா ?
கபுருகளின் பேரில் போர்வைகள் போர்த்தப்படுகின்றன. உர்ஸு காலங்களில் சந்தனம் பூசப்படுகின்றது. மற்ற நாட்களில் அத்தர் பன்னீர் தெளிக்கப்படுகின்றன. சாம்பிராணி, ஊதுபத்தி, சந்தனக் கட்டை, அகில் கட்டை முதலிய வாசனைத்திரவியங்கள் புகைக்கப்படுகின்றன. இவையயல்லாம் கூடுமா ? என்ற ஐயம் எழுகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களை நன்கு படித்தறிந்து அத்தகைய சந்தேகங்களைப் போக்கிக் கொள்வீர்களாக !
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத் ஆகி அடக்கமானதும் அந்த முபாரக்கான கபுரு ஷரீப் மீது போர்வை போர்த்தும் வழக்கம் ஸஹாபாக்கள் காலத்திலிருந்து ஆரம்பம் ஆகி இன்று வரை நடைபெற்று வருகின்றது .
நாஸிம் இபுனு முஹம்மதிபுனு அபூபக்கர் ( ரலி ) அவர்கள் ஹள்ரத் ஆயிஷா நாயகி ( ரலி ) அவர்களிடஞ்சென்று , அன்னையே ! ரசூலுல்லாஹ் அவர்களுடையவும் இரு ஸஹாபாக்கள் ( அபூபக்கர் , உமர் ) உடையவும் கபுருகளை எனக்குத் திறந்து காட்டுங்கள் என்று கேட்டேன். அவர்கள் கபுருகளை திறந்து காண்பித்தார்கள் எனும் ஹதீது அபூதாவூதைக் கொண்டு அஷிஃஅத்துல் லம்அத் பாகம் 1, பக்கம் 616 ல் ரிவாயத்துச் செய்யப்படுகிறது .
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முபாரக்கான கபுரைத் திறந்து காண்பிக்கும்படி ஒரு பெண்மணி ஆயிஷா நாயகி ( ரலி ) அவர்களைக் கேட்டுக் கொண்டார். அவர்கள் திறந்து காட்டினார்கள். அப்பெண்மணி தரிசனஞ்செய்து உயிர் போகின்ற மட்டில் அழுதழுது அவ்விடத்திலேயே உயிர் துறந்தார் எனும் ரிவாயத்து கிதாபுஷ் ´ பா பக்கம் 199 ல் சொல்லப்படுகின்றது .
கப்ரு ஷரீப்கள் மீது புஷ்பங்கள், ஈரமுள்ள பசுமையான புஷ்பங்கள் போடுவது முஸ்தஹப்பு.ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவுளமானதாக அப்துல்லாஹிப்னு மஸ்ஊது ( ரலி ) அவர்களைக் கொண்டு இப்னு ஆபிதீன் ( ரஹ் ) அவர்கள் றிவாயத்துச் செய்வதாவது :
ஒரு முஸ்லிமுடைய கப்ரின் மீது பூ போடுவரேல் அந்த மலரின் தஸ்பீஹைக் கொண்டு கப்ராளிக்கு அதாபு இலேசாகின்றது . மேலும் பூ போட்டவருக்கு நன்மை எழுதப்படுகின்றது என்பதாக அல்லாமா இமாம் அபூஸய்து ஸல்மீ ஹனபீ ( ரஹ் ) அவர்கள் ரஹு - பர்ஜஹில் நகல் செய்கின்றார்கள் . கப்ரின் பேரில் பூ போடுவதும் பச்சைக் கொப்புக்களை நட்டுவதும் முஸ்தஹப்பும் அழகான கருமமுமாகும், அந்தப் பூ எதுவரை காயாதிருக்கின்றதோ அதுவரை அல்லாஹுத் தஆலாவைத் தஸ்பீஹ் செய்கின்றது என்று இமாம் ஸதுருஷ் ஹீது ( ரஹ் ) அவர்களைக் கொண்டு ரஹு மஜ்மஉவில் நகல் செய்யப் பெற்றிருக்கின்றது .
பன்னீர் ,புஷ்பம் , றைஹான் முதலானவற்றைக் கப்ருகள் மீது போடுதல் அழகானக ருமமாகும் என்று பதாவா - ஆலம்கீரியில் சொல்லப்படுகின்றது .
கப்ருகளில் பூக்கள் போடுவது முஸ்தஹப்பு. அதனால் அடங்கியுள்ள கப்ராளிகளுக்கு ராஹத் உண்டாகிறது என்று ஹாஷியத்துல் பாஜூரி 1 வது பாகம் 318 வது பக்கத்திலும் , இஆனா 2 ஆவது பக்கம் 140 ஆவது பக்கத்திலும் காணப்படுகின்றது .
வலிமார்களது கபுரு ஷரீபுள்ள இடங்களில் குளோபு, லைட், விளக்கு வகையறாக்கள், மெழுகுவத்திகள் முதலியவைகளை ஏற்றுவது அவர்களை சங்கை செய்து கண்ணியப்படுத்தி வைப்பதுமாகும். இவ்விதம் செய்வது அழகான நாட்டத்தின் உயர்ந்த இலட்சியமாகும் . அவற்றை விலக்கக் கூடாது என்று தப்ஸீர் ரூஹுல் பயான் 3- வது பாகம் 400 வது பக்கத்திலும் , தஹ்ரீருல் முக்த்தார் , 1 வது பாகம் 123 வது பக்கத்திலும் கஷ்புன் நூரிலும் விரிவாக வரையறுக்கப் பெற்றிருக்கின்றது .
ஆகவே ,இத்தகைய காரணங்களால் சாதாரண கப்ருகளுக்குக் கூட செய்வது கூடும் என்றிருக்க , அவுலியாக்களுடைய கப்ரு ஷரீபுகளுக்கு வலுப்பத்தையும் , ஒழுக்கத்தையும், மரியாதையையும் , நன்மையையும் நாடிச் செல்லுதல் ஆகுமானதுதான் என்பது ஹதீது, ஃபிக்ஹுகளைக் கொண்டு வெட்ட வெளிச்சமாகத் தெரிய வருகிறது .
( தொடரும் ).