தொடர் ....
தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு
கலீபா பெருந்தகைகள்
ஒரு சிறப்புப் பார்வை !
மெளலவி என் . எஸ் . என் . ஆலிம் . பி . காம் . திருச்சி
பாளையம் HKRH . மதுரஸா முதல்வர் அல்ஹாஜ் ஆரிபுல்லாஹ் T.M . மூஸா கான் பாகவி ஹள்ரத் அவர்கள் , தம்மிடம் கூறிய விஷ யம் ஒன்றினை வலிய்யுல் அஹ்ஸன் கூறக் கேட்டேன் . சற்று அதிர்ச்சியான தகவல்தான் . ஆனால் சத்தியமான விஷ யம் ! திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜ . உ . சிறப்புக் கூட்டத்திற்கு பாளையம் S.S . அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் தலைமை தாங்கினார் . அதில்தான் நமது சபைக்கு எதிரான ஃபத்வா என்னும் குப்பைக் காகிதம் தீர்மானமாக ஏற்கப்பட்டது ! இக்கூட்டச் செய்தியை இஸ்லாமிய தமிழ் மாத இதழ்கள் சில வெளியீடு செய்திருந்தன! அப்பத்திரிகைகள் பாளையம் ஹவ்திய்யா மதுரஸாவிற்கு வழமையாக வருபவை தாம் ! அச்சேதிகளைக் கண்டு மூஸா கான் பாகவி ஹள்ரத் மிகவும் மனவேதனை அடைந்தார்கள் . எனினும் அப்பத்திரிகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி மாணவர்களிடம் அறிவுரை பகர்ந்தார்கள் . சில மாதங்கள் கடந்து ஓடிவிட்டன .
பாளையம் S.S. ஹஜ்ரத் அவர்கள் வெளியூர் பிரயாணங்களை முடித்துவிட்டு பாளையம் திரும்பினார். பாளையம் வந்தவுடன் வழமை போல் மூஸாகான் ஹள்ரத் அவர்களைச் சந்திக்க வந்திருந்தார். பாடம் நடத்திக் கொண்டிருந்த மூஸாகான் ஹள்ரத் அவர்கள் S.S.ஹஜ்ரத் அவர்களை வரவேற்று தங்களுக்கு அருகில் அமர வைத்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்கள். இறுதியாக “ திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜ . உ கூட்டத்திற்குச் சென்றீர்களா ?” என்று மூஸாகான் பாகவி ஹள்ரத் கேட்டார்கள் .
“ இல்லை ... போகவில்லை ...!” என்றார் ஹஜ்ரத் .“ நீங்கள் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்ததாகவும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதாகவும் கேள்விப்பட்டேனே ?” என்பதாக மூஸா கான் ஹள்ரத் மீண்டும் கேட்டார்கள் .“ அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள் ... ஆனால் யான் அக்கூட்டத்திற்குச் செல்லவில்லை என்று உறுதியாகக் கூறினார் ஹஜ்ரத் ” S.S . பின்னர் ஜ.உ. கூட்டம் சம்மந்தமான சேதிகள் வெளிவந்திருந்த பத்திரிகைகளை எடுத்து வரும்படிக் கூறினார்கள் . எடுத்து வரப்பட்டன . வாசிக்கப்பட்டன . அவற்றில் S.S ஹஜ்ரத் அவர்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்ததாகக் கூறப்பட்டிருந்தது .“ நீங்கள் கூட்டத்திற்குப் போகவேயில்லை .. என்கிறீர்கள் . ஆனால் பத்திரிகைகளில் நீங்கள் கலந்து கொண்டதாகக் கூறப் பட்டுள்ளதே ? என்றார்கள் மூஸா கான் பாகவி ஹள்ரத் !”
“ ஜ.உ கூட்டம் சம்மந்தமான நோட்டீஸில் எனது பெயர் போட்டிருந்தார்கள் ... அதனைப் பார்த்து பத்திரிகைகளில் எனது பெயரையும் சேர்த்திருப்பார்கள் ..” என்றார் ஹஜ்ரத் .
“ நீங்கள் தான் தலைமை வகித்ததாக அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல ஆலிம்கள் என்னிடமே கூறியிருக்கிறார்கள் ...” என்று மூஸா கான் பாகவி ஹள்ரத் உரத்த தொனியில் கூறினார்கள் .“ அப்படியா ? எனக்கு வரவர மறதி அதிகமாகி விட்டது ... அக்கூட்டத்தில் கலந்து கொண்டேனா ? இல்லையா ? என்பது நினைவில் இல்லை ...!” சரி .. நான் வருகிறேன் என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார் !
( S.S . ஹஜ்ரத் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதை அக்கூட்டத்தில் தாமும் இருந்து அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த அன்பர்கள் இன்றும் இருக்கின்றார்கள் . )
அவர் சென்ற பின்னர் - கோபமடைந்து மூஸாகான் பாகவி ஹள்ரத் , இவ்வளவு பெரிய ஹஜ்ரத் ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும் ? எல்லாம் நினைவில் இருக்கின்றன ! அக்கூட்டத்தில் கலந்து கொண்டது மட்டும் “ மறந்துவிட்டது ” எனக் கூறுகிறாரே ? அல்லாஹு தஆலா எல்லாவற்றையும் மறக்கடித்துவிட்டால் இவர் என்ன செய்வார் ? என்றார்கள் .
அவரின் முடிவு சுமார் 6 மாத காலம் சுயநினைவற்ற நிலையில் அமைந்தது அல்லாஹ்வின் நாட்டமின்றி , வேறென்ன ?( நஊதுபில்லாஹி அன்தாலிக )
இன்ஷா அல்லாஹ் ... அடுத்த இதழில் வலிய்யுல் அஹ்ஸன் அவர்களைச் சந்திப்போம் !
கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் !
எவரிடம் எனது பெயர் கூறப்பட்டும் என்மீது ஸலவாத் ஓதவில்லையோ அவர் நாசமடையட்டும் .
அறிவிப்பு : அபூஹுரைரா ( ரலி ) நூல் : திர்மிதி (3539)
என் பெயரைக் கேட்டும் என்மீது ஸலவாத் ஓதாதவன் கஞ்சனாவான் .
அறிவிப்பு : அலி ( ரலி ) திர்மிதி (3540)