• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai   »     2014      »     Jan2014     »   சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்

சங்கைமிகுஇமாம் ஷாஃபிஈ ( ரஹ் )

அறபுத்தமிழில் :மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில்மதாஹிப்

அழகுதமிழில் :கிப்லாஹள்ரத் ,திருச்சி .



ஒருமுறை இமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்கள்,கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்களைக்குறித்து சிலாகித்துக் கூறினார்கள் .

ஹள்ரத் அலீ ( ரலி )அவர்களிடம் ஒருவர் வந்து ,அமீருல் முஃமினீனே !அல்லாஹ்வைக் கொண்டு ( அல்லாஹ்வைப் பற்றி )எனக்கு அறிவுரை பகருங்கள் என்றார் .அதற்கு கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்கள் ,அஃது ஓர் ஆழிய கடல் ;அதில் முங்காதிரு என்றார்கள் .


மீண்டும் அதே நபர் அதே கேள்வியைக் கேட்டார் .அப்போது கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்கள் ,அஃது ஓர் இருளான வீடு ;அதில் உட்புகாமல் இரு என்றார்கள்மூன்றாவது முறையும் அதே மனிதர் அதே கேள்வியைக் கேட்டார் !அதற்கு கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்கள் ,அஃது ஓர் அற்புத இரகசியம் ;அதனைக் ( கொண்டு )காணாதிரு என்றார்கள் .


நான்காவது முறையும் அதே நபர் அதே கேள்வியைக் கேட்டார் !அதற்கு ஹள்ரத் அலீ ( ரலி )அவர்கள் ,அதனைக் குறித்து ( அல்லாஹ்வைக் குறித்து )நான் உடைத்துக் கூறுவேனேயாகில் அதில் சர்வமும் அடங்கிவிடும் என்றார்கள் .


மனிதர் ஒருவர் இருக்கிறார் !அவர் தனக்கு அனைத்து விஷயங்களிலும் தான் ஆற்றல் பெற்றுக் கொண்டு இருப்பதாகக் கூறுகிறார் என்று கூறப்பட்டது .இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்கள் ,யார் அவர் ?என்றார்கள் .அதே சபையிலிருந்த மனிதரைச் சுட்டிக் காட்டப்பட்டது .அவரை அருகில் அழைத்துத் தங்கள் உறையிலிருந்து வாளை உருவி ,அம்மனிதரின் கழுத்தில் வைத்து உனக்கு எல்லா தராணிகளும் ( சக்திகளும் )இருக்கின்றனவா ?அப்படியிருந்தால் ... எனது வாளிலிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள் ..பார்க்கலாம் என்றார்கள் .அம்மனிதரால் பதில் கூற முடியாமற் போயிற்று .பின்னர் தாம் கூறிவந்த அகம்பாவச்சொற்களுக்கு மன்னிப்புக் கேட்டார் .


அதன் பின்னர் கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்களிடம் ,தனக்கு நஸீஹத்து ( அறவுரை )பகருமாறு வேண்டினார் .


கலீபா ஹள்ரத் அலீ ( ரலி )அவர்கள் கூறினார்கள் :என்னிடமுள்ள சிறிய பெரிய சக்திகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டத்தினால் எனக்குக் கிடைத்துள்ளன என்பதாக எப்போதும் மனதில் நினைத்துக் கொள் ;அதனையே உன் கவனத்தில் வைத்துக் கொள் ;அல்லாஹ்வின் பிரமாண்ட சக்தியில் நான் ஒரு சிறு பிண்டமே என்பதில் பிடிவாதமாக நம்பிக்கைக் கொள் !


( இமாம் ஷாபிஈ ( ரஹ் )அவர்களின் சிறப்பும் ,வலுப்பமும் இன்ஷா அல்லாஹ் இன்னமும் வரும் ;வளரும் )


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்பு நோன்பு வைத்ததுபோன்று யாராலும் நோன்பு வைத்திட இயலாது !ஏன் ?அதிவீரரா V ஹள்ரத் அலீ ( ரலி )அவர்களாலோ அல்லது ஹள்ரத் உமர் ( ரலி )அவர்களாலோ கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போன்று தொடர் நோன்பு வைத்திட இயலாது !


(07.12.2013அன்று திருமுல்லைவாசலில் நடைபெற்ற மஜ்லிஸில் சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் அருளியவற்றிலிருந்து ...)

தகவல் :என் . எஸ் . என் .திருச்சி .



அவள் அப்படித்தான் .... 


பெரியார் ஒருவரின் மனைவி அவருடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தாள் .ஒரு நாள் அவர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார் யா அல்லாஹ் !எனக்கு ஏதேனுமொரு கராமத்தை ( அற்புதத்தை )நிகழ்த்தும் ஆற்றலைத் தருவாயாக .அதைப் பார்த்து என் மனைவி எனக்கு கீழ்படிந்து நடப்பாள் .”அவரின் துஆவை ஏற்றுக் கொண்ட இறைவன் அவர் நினைக்கும்போது காற்றில் பறந்து செல்லும் கராமத்தை வழங்கினான்.உடனே அவர் தனது வீட்டுக்கு மேலே வானத்தில் பறந்து சென்றார் .அவர் வீட்டுக்குள் வந்த பின் அவரின் மனைவி நீரும் தான் பெரிய வலி என்று சொல்லிக் கொண்டு திரிகிறீர்.உண்மையான ஒரு வலியை நான் இன்று பார்த்தேன் .அவர் வானத்தில் பறந்து சென்றார்என்று அவரிடம் கூறினாள் .இதைக் கேட்ட அப்பெரியார் அந்த வலி வேறுயாருமல்ல .நான்தான் அவ்வாறு பறந்து சென்றேன் என்று கூறினார் .உடனே மனைவி ,“ அப்படியா !அதானே பார்த்தேன் .நேராக பறந்து செல்லாமல் கோணலாக பறக்கும் போதே நீராக இருக்குமோ என சந்தேகித்தேன் .சரியாகிவிட்டது என்று கூறினாளாம் .