திருமறைப் பக்கம்
அல்லாஹ்வே புகழும் அண்ணலார்
முஹம்மது உமர் கைய்யாம் , ஜாமிஆ யாஸீன் மாணவர் .
- நபியே ! நிச்சயமாக நீங்கள் நற்குணத்தில் இருக்கின்றீர்கள் . (68:04)
- நபியே ! உங்கள் மகிமையை நாம் உயர்த்தியுள்ளோம் . (94:4)
- நபியே ! அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை அனுப்பியுள்ளோம் . (21:07)
- அல்லாஹ் நபியவர்களை அனுப்பியதன் மூலம் மூஃமின்களின் மீது அருள் புரிந்துள்ளான் . (3:164)
- அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியவர்களின் மீது ஸலவாத் சொல்கின்றனர் . ஈமான் கொண்டவர்களே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்து ஓதி ஸலாமும் கூறி வாருங்கள் (33:56)
- நபியவர்கள் முஃமின்களின் உயிரைவிடவும் மேலானவர்கள் . (7:157)
- நபியவர்கள் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரியாக இருக்கிறார்கள் . (33:21)
- அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நம்பிக்கை கொண்டு அவர்களை கண்ணியப்படுத்துங்கள் . இன்னும் காலையிலும் மாலையிலும் அவர்களை துதி செய்து வாருங்கள் . (48:09)
இவ்வாறெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணங்களைப் புகழ்ந்த இறைவன் ,மீண்டும் தனது ஹபீபான அவர்களின் அங்கங்களைப் புகழ்கிறான் .
1. அவர்களின் விழிகளைப் பற்றி = 20:131 - லும்
2. அவர்களின் திருமுகத்தைப் பற்றி = 2:144 - லும்
3. அவர்களின் திருப்பார்வையைப் பற்றி = 53:17 - லும்
4. அவர்களின் உள்ளத்தைப் பற்றி = 25:32 - லும் , 53:11 - லும் , 2:97 - லும் . கூறுகிறான் .
அல்லாஹ்வை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகமாகப் புகழ்வது மனிதர்களால் முடியாத ஒன்றாகும் .
எனினும் பெருமானாரைப் புகழ்வது அல்லாஹ்வின் சுன்னத்தாக இருப்பதால் அல்லாஹ்வின் சுன்னத்தை அடியார்களாகிய நாம் அடி பிசகாமல் பின்பற்றுவோம் !!