ஹதீஷ் பக்கம்
ஸலவாத்து சொல்வேமே! சொர்க்கம் செல்வோமே!
பள்ளி வாசலுக்குள் நுழையும் போதும் , பள்ளியை விட்டு வெளிவரும் போதும் ஸலவாத் ஓதுவது இறைவனை மகிழ்வூட்டும் என்ற நபிமொழியை அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் .
நூருல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாள்தோறும் நூறு ஸலவாத்துக்கள் நாம் ஓதினால் மறுமையின் எழுபது தேவைகளையும் , இம்மையின் முப்பது தேவைகளையும் அல்லாஹ் நமக்கு நிறைவேற்றித் தருவான் - இந்த ஹதீஸை ஹள்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் .
என்மீது நீங்கள் சொல்லும் ஸலவாத் , துஆக்களைப் பாதுகாக்கும் . பாதுகாப்பாளனின் திருப் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் . வணக்கங்களைத் தூய்மை செய்து அவற்றை அதிகப்படுத்தும் ஜ ( க் ) காத்தாகவும் ஆகிவிடும் .
ஸலவாத் ஏழைகளின் சத ( க் ) காவாகும் என்ற ஹதீஸை ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , ஹள்ரத் அனஸ் ( ரளி )ஆகியோர் அறிவிக்கிறார்கள் .
என்மீது பத்துத்தடவை ஸலவாத்துச் சொல்பவர் மீது அல்லாஹ் நூறு தடவை ஸலவாத்துச் சொல்கிறான் . நூறு தடவை ஸலவாத்துச் சொல்பவர் மீது அல்லாஹ் ஆயிரம் தடவை ஸலவாத்து சொல்கிறான் . அன்பும் ஆர்வமும் மிகைக்க அதிகமதிகம் ஸலவாத்துச் சொல்பவருக்கு ஃபாஅத்தும் , சாட்சியும் கூறும் நிலையில் நான் இருப்பேன் என்று உண்மை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதி தந்ததாக ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் .
வைகறை முதல் அஸ்தமனம்வரை எழுபதாயிரம் வானவர்களும் இரவுமுதல் விடியும் வரை எழுபதாயிரம் வானவர்களும் வள்ளல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ளாவைச்சுற்றிக் குழுமி நின்று ஸலவாத் ஓதிக்கொண்டே இருப்பார்கள் . உலகின் இறுதிநாள்வரை தவறாமல் இது நடந்துகொண்டே இருக்கும் என அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் .