சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்
அமுத மொழிகள்
பிரபஞ்சம் உலகமல்ல . அது ஒரு கோளுமல்ல ; எல்லாமே இருக்கக் கூடிய ஒன்று. அதைத்தான் பிரபஞ்சம் எனச் சொல்வது. அதற்கு ஒரு முடிவும் இல்லை .ஆரம்பமும் இல்லை . இந்த நேரத்தில் தான் ஆரம்பமானது எனக் கூறமுடியாது . அது படைக்கப்பட்டது மல்ல . அல்லாஹ்வை படைக்கப்பட்டது எனச் சொல்ல முடியுமா ? ஆனால் இலகுவாக பிரபஞ்சம் என பேசிக் கொள்கிறோம் .
பிரபஞ்சம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என சொல்லிக் கொள்கிறோம். அறிவியலாளர் கூட அதனை முழுவதுமாக அறிந்து கொள்ளவில்லை. அறியமுடியாது. அவர்கள் தங்கள் அறிவால் எவ்வளவு தூரத்துக்குப்போக முடியும் ? பிரபஞ்சம் போகப் போகப் போய்க் கொண்டே இருக்கும் . ஆக . பிரபஞ்சம் எனச் சொல்லிக் கொள்வதல்லாமல் அதற்கு மரியாதை கொடுப்பதில்லை . யாராவது மரியாதை கொடுக்கிறார்களா ? ஆனால் அந்த வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் .
அல்லாஹ்வைப் பற்றி நாம் குறிப்பிடும் போது . ஜல்ல ஜலாலுஹு - சுப்ஹானஹு வதஆலா எனவெல்லாம் கண்ணியமளிக்கின்றோம். ஆனால் இந்த வார்த்தைக்கு மதிப்பளிப்பதில்லை காரணம் அது ஏதோ உண்டாக்கப்பட்ட ஒரு பொருள் என எண்ணிவிட்டார்கள். பிரபஞ்சம் அது ஒரு பொருளாக படைக்கப்பட்டது அல்ல . அது அதாகவே அமைந்தது. அதைத்தான் நாங்கள் ஹக்கு எனச் சொல்கிறோமே அன்றி வேறொன்றையும் சொல்லவில்லை.
தன்னிலேயே அது அமைந்துவிட்டது . அமைந்து விட்டது எனச் சொன்னால் ஒரு காலத்தில் அமைந்தது அல்ல. அது அப்படியே இருக்கிறது. அதற்குள்ளே தான் இவ்வளவு பெரிய கோளங்கள் , அணுக்கள் , காற்று , பஞ்சபூதங்கள் என மற்றவையயல்லாம் இருக்கின்றன. பஞ்சபூதங்கள் அல்லாது வேறு பூதங்கள் ஏதேனும் இருக்கின்றனவா ? பூதம் பூதம் என அஞ்சுகிறார்களே அப்படி ஒரு பூதம் உண்டா ( சிரிப்பு ) ( இப்போது ஒருவர் , அப்படி ஒரு பூதம் இருந்தாலும் அதுவும் இந்த பஞ்ச பூதத்திற்குள்ளேதான் இருக்கும் எனக் கூற அதனை வாப்பா நாயகம் அவர்கள் ஆமோதிக்கிறார்கள் .)
பஞ்சபூதமல்லாது வேறு இல்லை. அதற்கு வெளியே ஏதும் இருந்தால் சொல்லிக்காட்டுங்கள் பார்க்கலாம். அப்படி ஒன்றுமில்லை. ஆக இந்த ஐம்பூதங்களே பிரபஞ்சமானது. பிரபஞ்சத்திலிருந்துதான் ஐந்து பூதங்களும் வெளியானது. வெளியானதென்றால் அதைவிட்டு வெளியானதென்பதல்ல. அதிலே இருந்து படைக்கப்பட்டது என்றால் ஹக்கிலிருந்து பிரபஞ்சத்திலிருந்து தன்னிலே உண்டானது. எங்கள் கண் பார்வைக்கு வெளியானது. அது நீராகவும் , நெருப்பாகவும் , காற்றாகவும் , மனிதனாகவும் அமைந்திருப்பது . ஆக ஐந்துபூதங்கள் = பிரபஞ்சம் . பிரபஞ்சம் = ஐந்து பூதங்கள் . ஆகவே இவையயல்லாம் படைக்கப்பட்ட பொருள் அல்ல . ஹக்கிலிருந்து - பிரபஞ்சத்திலிருந்து அது தன்னிலே உண்டானது. அப்படி அது இயற்கையாக அமைந்து எல்லாமே அதற்குள்ளேதான் இந்த பிரபஞ்சத்துக்குள்ளேதான் எல்லாமே இருக்கிறது .
கம்பர் சொல்வார் . “ வானின்றிழிந்து வரம்பிகந்த மாபூதம் ” என .வானின்றிழிந்து ..... வானம் என்றால் நாம் மேலே வானத்தைக் காட்டுகின்றோம் . வானம் நாம் காண்பது மட்டுமா ? அது போகப் போக போய்க் கொண்டே இருக்கும். அதற்கு ஒரு முடிவு இல்லை. பிரபஞ்சமும் அப்படித்தான் இருக்கும் வானின்றிழிந்து என்றால் வானிலிருந்து இறங்கியது எனப்பொருள்படும். வானத்திலிருந்து இறங்குவதென்றால் எப்படி ? இழிந்தது என்றால் இறங்கியது எனச் சொல்வார்கள்.
வானம் என்றால் - எங்கும் பரந்து விரிந்து இருப்பதற்குத் தான் வானம் எனச் சொல்லப்படும் . அதாவது பரிபூரணமான அந்த வானத்திலிருந்து இழிந்ததுதான் - பிரிந்ததுதான் மாபூதங்கள் . அந்த மாபூதம் எத்தகையது ? வரம்பு இகந்தது ? இவ்வளவுதான் என மாபூதத்தைச் சொல்ல முடியாது . தண்ணீர் இவ்வளவுதான் இருக்கிறது எனச் சொல்ல முடியாது . வரம்பு - அளவு - அதற்கு இல்லை . அந்தப் பாடலின் தொடர்ச்சி நினைவில்லை ..... அதில் வருகிறது . ஊனும் உயிரும் உணர்வும் போல் ....... ஊனாகவும் - உயிராகவும் - உள்ளும் புறத்தும் - உள்ளாகவும் புறமாகவும் யார் இருக்கிறாராம் ? ( அப்போது ஒருவர் பதிலாக ராமர் இருக்கிறாராம் எனச் சொல்ல ) ராமர் இருக்கிறாராம் .... இவ்வாறு கம்பர் சொல்கிறார் . ரஸூலுல்லாஹ்வும் அப்படித்தான் இருக்கிறார்கள் . உள்ளாகவும் வெளியாகவும் இருக்கிறார்கள் . எவ்வளவு அழகான விஷயத்தை கம்பர் சொல்லியிருக்கிறார் பாருங்கள் ? கம்பர் ஒரு பெரிய ஞானி அல்லவா ? நாம் இவ்வாறு கூற முடியமா ?
நம் எதிரே இருப்பதும் வானம்தான் . வானம்தான் பிரபஞ்சம் . ஆனால் வானத்தை மட்டும் பிரபஞ்சம் எனக் கூறவும் முடியாது . எனவே பிரபஞ்சத்திற்குள் எல்லாம் உண்டு . அதுவே பிரபஞ்சம் . பூதத்திற்கு வரம்பு இல்லை எனக் கூறிவிட்டார் . உண்மைதான் !எங்குபோய்ப் பார்ப்பீர்கள் ? மழை எங்கே முடிகிறது ? தண்ணீர் எங்கே முடிகிறது என ? மண் இங்குதான் இவ்வளவு தான் எனக் கூற முடியுமா ? வேறு கிரகத்திலும் இருக்கும். பறக்கும் தட்டுகள் வருவதாகச் சொல்கிறார்கள் . இங்குள்ள விஞ்ஞானிகளை விட பெரிய அறிவியலாளர்கள் அங்கு இருக்கலாம் . இல்லையயனில் இப்படி வந்துபோக முடியுமா ? நம் விஞ்ஞானிகள் ஒன்றிரண்டை அனுப்பிவிட்டு பெரிதாக சாதித்துவிட்டதாக கொக்கரிக்கிறார்கள் . நாளை ஏதோ அனுப்ப இருக்கிறார்களாம். ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களோ வந்தார்கள் சென்றார்கள் . யாருக்குமே தெரியாது ! நாம் கண்டாலும் காணாவிட்டாலும் அவர்கள் பூமியைப் பார்த்து விட்டு சப்தமின்றி திரும்புகிறார்கள் . நம்மவர்கள் தான் பெரிய ஆரவாரம் செய்கிறார்கள் . ஆக எதற்கும் ஒரு முடிவை நாங்கள் சொல்ல முடியாது !
பிரபஞ்சம் எனக் கூறும்போது சிலபேர் அதனை பூமி என எண்ணிக் கொள்கின்றனர். அவ்வாறு நினைக்காதீர்கள். ஒரு காலத்தில் நாங்களும் அவ்வாறு தான் நினைத்தோம். அதற்குப் பின் , பிரபஞ்சமாகவும் அதுவாகவும் இதுவாகவும் .... பிரபஞ்சம் என்றால் இதுதான் என அல்லாஹ்வுடைய சிஃபத்துகளைக் கூறிக்கொண்டு போகும்போது ஓஹோ இதுதானோ ? இதற்குத்தானே - இதைவிளங்கத்தானே நாங்கள் இத்துணை சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற ஒரு முடிவுக்கு வந்தோம் !
பிரபஞ்சத்தை அல்லாஹ்வென்று சொல்கிறாரே ! எவ்வளவு பெரிய பாவம் . அல்லாஹ்வை பிரபஞ்சம் எனக் கூறுகிறாரே ! என்ன மோசம் இது ? என அங்கே அவர்கள் பேசி கொண்டாட்டம் போடுவார்கள் . ஆனால் அப்படி அல்ல அது ! உண்மையைத்தான் கூறுகிறோம் . இந்த உண்மையை அறிந்திருந்தால்தான் அல்லாஹ்வைத் தெரிய முடியும் ! இல்லையயன்றால் அல்லாஹ்வைத் தெரிய முடியாது .
( சென்னை அட்வகேட் கலீபாஅப்துர்ரவூஃப் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை )
நாய கத்தி நற்பெயர்
நவின் றபோது நலிந்ததா
யாய வென்பு முயிர்பெறும்
நாய கத்தி னற்புதம் .
ஒருவ னேக னிணையிலை
உண்மைத் தூதர் யானென
அருமை யண்ணல் வீரமாய்
அன்று ரைத்த புதுமையே .
இடவ லக்க ரங்களில்
இரவி யோடு திங்க çe க்
கொடிய வர்கள் கொடுப்பினும்
கொண்ட வுண்மை மாற்றிடேன் .
என்று வீர தீரமாய்
இயம்பி நின்ற வீரரே
என்று ( ம் ) மூவு கத்தினை
இசைய வோச்சு மண்ணலார் .
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்