மகளே ! ஒரு குர்ஆனை எழுது !
முன்னோர்களின் ஆச்சர்யமான இன்னொரு வழமை என்னவென்றால் தமது பெண் பிள்ளைகள் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்ட பின் திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்னால்‘ மகளே !நீ உனக்காக ஒரு குர்ஆனை எழுதிக் கொள்’ என்று கட்டளையிடுவார்களாம் . அப்பெண் தினமும் உளுவுடன் அமர்ந்து அழகான கையயழுத்தில் குர்ஆனை எழுதி வருவாள் . முழுமையாக எழுதி முடித்ததும் தந்தை அதனை பைண்டிங் செய்து அப்பெண்ணின் சீதனத்தில் கொடுத்து விடுவார். அச்சகங்கள் இல்லாத அக்காலத்தில் பெண்ணின் கையால் எழுதப்பட்ட குர்ஆனே சீதனமாக தரப்பட்டு வந்தது. எனது மகள் எனது வீட்டில் இருக்கும் போது அவளது ஓய்வு நேரங்கள் குர்ஆன் எழுதுவதில்தான் கழிந்தது என்ற செய்தி இந்தச் சீதனத்தின் மூலம் கணவனுக்குச் சொல்லப்படுகிறது .
வலிகாமம்
ஜமாலியா செய்யதுகலீல் அவ்ன் மௌலானா
பெருங்கவிக்கோ வா . மு . சேதுராமன் அவர்கள் .
வியப்பாம் நிகழ்வு விளைவின் உணர்வே !
நயத்தகும் நண்பரொடு யானும் - இயல்பாகச்
சத்தியவான் என்னும் தகைமணி நாட்டூரில்
ஒத்தமகிழ் வாகும் உவப்பு !
உவப்பாம் கதிரவன் ஓங்கொளி போல் தொண்டு
தவம் போல்ச் செய்யும்நற் சால்பன் - அவருடனே
முத்துவிழா ரெங்கையா முன்னெடுக்கப் பேசுங்கால்
சித்த ‘ ரவி ’ வந்திணைந்த சீர் !
சீர்சான்றோன் வந்துமுன் சேர்ந்திருந்தே வேண்டுவான்
ஊர்முல்லை வாயிலிலே உள்ள ஞான - வேர்கொண்ட
யாசீன் மெளலான நற்சீடர் வலிகாமம்
மாசீர் மகான் கலீலை வாழ்த்து !
எதிர்பாரா மல்வந்தோன்
இரவி அகமது தான்கூறும்
மதிசான்ற ஞான வள்ளல்
மகான்களுக்குள் மகானாக
விதி சமைத்து வந்தஞானி
வெல் சமாலியா கலீல் அவுன்
பதி உயர்ந்த மெளலானா
பாடுமெனப் பாடுகின்றேன் !
எத்தனையோ ஞானவழி
ஏற்றபக்தித் துறைமூழ்கி
மெத்த உச்சமாய் வாழ்ந்தே
மேதினிக்கே படிப்பினை செய்
சித்தர்களின் இப்பூமி
தேவாதி தேவனுடை
ஒத்தஞானத் தேர்வழியிலே
ஒப்பில்லார் கலீல் அவுனே !
ஒளிக்கெல்லாம் முன்பாக
ஒளிபெறவே அருள்வள்ளல்
களிமல்கும் சிறப்பெல்லாம்
கருணைபொலி வான்மேகம்
தெளிவுக்கும் தெளிவு நல்கி
சீடர்களை நல்வழியில்
துளி அளவும் மயங்காமல்
துணைபுரியும் மெளலானா !
வித்துக்கள் ஒன்றிருந்தே
விளைவித்துப் பலவாகும் !
கத்து கடல் ஓசைஒலிக்
கலீல் அவுனக் குரலாகும்
முத்துக்கள் ஒளிச்சிரிப்போ
மோன ஞான வான் வெளியோ
உத்தமர்க்கும் படிப்பினை செய்
ஓங்கார கலீல் அவுனே !
நாயகநன் நபி ஸல்லல்
லாகுஅலைகு வசல்லம் தம்
தாயகத்தின் வழித்தோன்றல்
தமிழ்மரபின் ஆழ்ந்த உளம்
தேயத்தின் முசுலீம் வெல்
தேர்ந்த மார்க்கச் செயலாண்மை
ஆய இறை வன்ஆன்ம
நேயவழி கலீல் அவுனே !
பார்க்கின்ற பார்வையிலே
பன்னூறு வலிமை வரும் !
சேர்க்கின்ற தேனுரையோ
செவிக்குநல்ல விருந்தாகும் !
சேர்கின்ற கருத்தெல்லாம்
தெளிவுதரும் மனம் திருத்தும்
ஆர்க்கின்ற இறை ஓசை
அவுன்கலீலின் ஞானஉரை !
எளிமைக்கே இருப்பிடமாய்
இருக்கின்ற ஞானமணி
வளிகாற்று நீர்பூமி
வானமெல்லாம் ஒன்றான
அளப்பரிய மாசக்தி
ஆண்டவனின் அருளாளர்
களப்பணியின் மந்திரத்தின்
காவியமே கலீல் அவுனே !
மாசில்லா மனத்தூய்மை
மாதவத்தின் மனசாட்சி !
பாசிபடர் வாழ்வியலை
பக்குவம்செய் மோனவெளி
ஏசியோர்க்கும் அருள்தருவோன்
இறைஅருளின் மறுபிறப்பு !
பூசிக்கும் ஞானக்கோ
புகழ் மணக்கும் அவுன்கலீலே !
வலிகாமம் இலங்கையில்
கதிர்காமம் போலவே ஓர்
நலிவகற்றும் பக்திநெறி
நன்னெறிதேர் இசுலாத்தின்
ஒலிவானம் தானிருந்தே
உவந்தி ரங்கிப் பூமியிலே
கலிமாவாய் வந்ததொக்கும்
கருணைவள்ளல் மெளலானா !
ஞானத்தின் பேழையவர்
நாநிலத்தின் ஞானியவர்
வானத்தின் மறைபோற்றும்
வாழ்வியலின் முதன்மையவர்
தானத்தின் முதல்வரவர்
தமிழமுதே இசைவாணர் !
மானத்தின் நெருப்பாவார்
மெளலானா எம்குருவே !
செய்யது நம் சமாலியாவாம்
கலீல்அவுன் மெளலானா
தெய்வஇறைத் தூதர்மறு
தேர்தூதர் ராகவேந்தே
உய்வுதரும் ஏகத்துவ
இறையயளியோ நிறைஅமுதோ !
மெய்யருளைத் தொழுதிடுவோம்
மேதினிக்கே விழுதாவோம் !
பருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்அவர்கள் மலேஷியா சென்றிருந்தபோது அங்குஎதிர்பாராத விதமாக சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் முரீதுப்பிள்ளை ரஃபீக் அவர்களைச்சந்தித்த நேரம் அந்த அன்பின் நெகிழ்வில் வாப்பா நாயகம் அவர்களைப்பற்றி எழுதிய கவிதை.