• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai »   2014  »  Jan2014   »  அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அற்புத வரலாறு

மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி .


ஹுதைபிய்யா உடன்படிக்கை

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்அவர்களைச் சேர்ந்தவர்களும் ,   ‘ அஸ்பான் என்னுமிடத்திற்கு வந்து சேர்ந்த போது குறைஷிகளும் மற்றக் கூட்டத்தார்களும் ஒன்று சேர்ந்து மக்காவிற்குள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரவேசிக்க இடம் கொடுக்க முடியாதென்று சொன்னதாக அத்தூதர் வந்து தெரிவித்தார் . குறைஷிகள் சுற்றுப் பக்கத்திலுள்ள கூட்டத்தார்களை எல்லாம் ஒன்று சேர்த்துவைத்துப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தடுப்பதற்காக ,காலித் இப்னு வலீத்அபூஜஹிலின் மகனான இக்ரிமா ஆகியவர்களின் தலைமையின் கீழ் ஒரு பெரிய சேனையை மக்காவிற்கு வெளியில் ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்திருந்தார்கள்எனினும் பெருமானார் அவர்கள் புனித யாத்திரையைத் தொடர்ந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வந்து தங்கினார்கள்


ஹுதைபிய்யா என்பது மக்காவிலிருந்து சுமார் 25 மைல் தூரத்திலுள்ள ஒரு கிணற்றின் பெயர்அக்கிணற்றின் மூலமாய் அவ்வூருக்கும் அப்பெயர் வந்தது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு வந்தபோது தண்ணீருக்குக் கஷ்டமாயிருந்தது .   ஒரே ஒரு கிணறு மட்டும் உண்டு .   அதுவும் வரண்டு போய் நீரின்றி இருந்தது . ஆனால் அங்குப்     பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் திருப்பாதம்   பட்டவுடன் எல்லோருக்கும் போதுமான தண்ணீர் அங்கிருந்து பொங்கிற்றுமக்காவிலுள்ள குஸாஆ” என்னும் கூட்டத்தார் இதுவரை முஸ்லிம்களாகவில்லை என்றாலும் , அவர்கள் முஸ்லிம்களுடன் நட்புடனேயே இருந்து வந்தார்கள்குறைஷிகளும் மற்ற காபிர்களும் இஸ்லாத்திற்கு விரோதமாகச் செய்யும் சூழ்ச்சிகளை அப்போதைக்கப்போது அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவித்து வந்தார்கள்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் மக்காவிற்குச் சமீபமாக வந்த செய்தி குஸாஆ கூட்டத்தாரின் தலைவருக்குத் தெரியவந்தது .   அவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ குறைஷிகளின் ஏராளமான சேனை உங்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கிறது .   அது உங்களைக் கஃபாவிற்குப் போக விடாது தடுக்கும் என்று சொன்னார்


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “ நாங்கள் உம்றா ஹஜ்ஜைப் போன்ற ஒரு சிறிய வணக்கத்தைச் செய்வதற்காக வந்திருக்கிறோமேயன்றிப் போர் புரியும் எண்ணத்துடன் வரவில்லைஓய்வின்றிப் போர் செய்ததால் குறைஷிகளின் நிலைமை கேவலமாகி விட்டது .   அதனால் அவர்களுக்குச் சேதமும் அதிகம் .   ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு , அரேபியர்களின் கையில் என்னை விட்டு விடுவது அவர்களுக்கு நல்லது .   ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிக்காமல் போனால் எந்த ஆண்டவன் கையில் என் உயிர் இருக்கிறதோ அந்த ஆண்டவன் பேரில் சத்தியமாக நான் என் கழுத்து துண்டாகும் வரை சண்டை செய்தே தீருவேன்ஆண்டவன் அவன் தீர்மானப்படியே செய்வான் என்று சொன்னார்கள்


அத்தலைவர் இதைக் கேட்டுக் குறைஷிகளிடம் போய் , “ நான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு தூது கொண்டு வந்திருக்கிறேன்அனுமதி கிடைத்தால் தெரிவிக்கிறேன்என்று சொன்னார்குறைஷிகளில் சில விஷமிகள் தங்களுக்கு அத்தூதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று சொன்னார்கள்


ஆனால் நிதான புத்தியுள்ள சிலர் அத்தூதைத் தெரிவிக்கும்படிச் சொல்லஅவர்   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கூறியவற்றை அறிவித்தார் . இதைக் கேட்டதும் குறைஷிகளில் முக்கியமானவரான   ‘ உருவத் இப்னு மஸ்ஊத் என்பவர் எழுந்து நின்று   குறைஷிகளை நோக்கி குறைஷிகளே ! நான் உங்களுக்குத் தகப்பனும் நீங்கள் எனக்குப் பிள்ளைகளுமல்லவா ?” என்று கேட்க , அவர்களில் ஒவ்வொருவரும் ஆம் என்றனர்என்னிடம் உங்களுக்கு யாதொரு சந்தேகமு மில்லையே ?” என்று   கேட்க ,அவர்கள் இல்லை என்றார்கள் .   அப்பேது உருவத் , “ நல்லது நீங்கள் எனக்கு அனுமதி கொடுத்தால் நான் போய் விஷயத்தை முடிவு செய்து வருகிறேன்முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நியாயமான நிபந்தனைகளையே சொல்லியிருக்கிறார் என்று சொன்னார் . குறைஷிகள் அதற்குச் சம்மதித்து அவரை அனுப்பினார்கள்


அவர்   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று குறைஷி´ களின் கட்சியை எடுத்துச் சொல்லிக் கடைசியில் , “ உங்களுடைய சமூகத்தார்களான குறைஷிகளை அழிப்பதற்காகவே நீங்கள் இக்கூட்டத்தை உங்களுடன் கொண்டு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதுகுறைஷிகள் ஆயுதபாணிகளாய் வந்து கொண்டு இருக்கிறார்கள் . உங்களுடனிருக்கும் இக்கூட்டத்தார்களுக்கு அவர்களைத் தடுக்கச் சக்தி கிடையாது . இவர்களெல்லோரும் உங்களை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்நாங்கள் அவர்களைத்   தூசியைப் போலப் பறக்குக்கும்படிச் செய்து விடுவோம் என்று சொல்ல, அபூபக்கர் ( ரலி ) அவர்களுக்கு அதிகக் கோபமுண்டாயிற்று . ‘ உருவத்’ தை உக்கிரமாகக் கண்டித்துப் பேசிவிட்டுக் கடைசியாக அவரை நோக்கி , “ நாங்கள்   பெருமானார் அவர்களைக் கைவிட்டு ஓடி விடுவோமென்றா நீர் நினைத்தீர் ?” என்று சொன்னார்கள்.   உருவத் இதைக் கேட்டதும்   பெருமானார் அவர்களிடம் அபூபக்கர் ( ரலி ) அவர்களைச் சுட்டிக் காட்டி , “ இவர் யார் ?” என்று வினவப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் என்று சொன்னார்கள்அப்போது உருவத் , “ அவருடைய கடுஞ் சொற்களுக்கு நான் தகுந்த பதில் சொல்லி இருப்பேன். ஆனால் அவர் எனக்குச் செய்த உபகாரமானது இன்னும் என் மனதில் பசுமையாய் இருந்து கொண்டிருக்கிறதுஅதற்குப் பிரதி உபகாரம் செய்ய இதுவரை என்னால் கூடவில்லை என்று சொன்னார்


பிறகு இருவரும் மனந்திறந்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் .  ஆனால் அவருடன் பேசியதில் யாதொரு முடிவும் ஏற்படவில்லை .   அவர் குறைஷிகளிடம் திரும்பிப் போனார். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் கொண்டிருந்த அளவு கடந்த பக்தி , அவருடைய மனதில் ஆச்சரியத்தையும்   நூதன உணர்ச்சியையும் உண்டாக்கிற்றுஅவர் குறைஷிகளிடம் சென்று , “ நான் ரோமாபுரிச் சக்கரவர்த்தியாகிய கைஸர் ’, பாரசீக தேசத்தரசனாகிய கிஸ்ரா முதலியோரின் அரசவைகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களைப் போன்ற வணக்கமும் , பக்தியும் அங்கே காணப்படவில்லை.“ முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் பேசுவதாயிருந்தால் அவர்களுடன் இருப்பவர்கள் அனைவரும் பயபக்தியுடன் வாய் பேசாது சிரம் பணிந்து காது தாழ்த்திக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்அவர் தொழுவதற்காக முகம் , கை , கால் முதலியவைகளைக் கழுவி ஒளுச் செய்வதாக இருந்தால் அவர்களின் தோழர்கள்    கீழே சிந்துகிற தண்ணீரில் ஒரு துளி கூடக் கீழே விழச் சம்மதிக்கிறார்களில்லைமுஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களின் உமிழ் நீரையும் அருகில் உள்ள அன்பர் கூட்டத்தினர் தங்கள் கைகளிலேந்தி முகத்திலும் , தேகத்திலும் பூசிக் கொள்ளுகிறார்கள். இவ்வளவு அளவு கடந்த பக்தியுடன் கூடிய நடைமுறையை நான் வேறு எங்கும் கண்டதில்லைஅவர் கூறும் வார்த்தைகளை நன்கு சிந்தியுங்கள்அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.  உங்கள் நன்மையை நான் விரும்புகிறேன் என்று சொல்லி முடித்தார்அப்பால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் குறைஷிகளிடம் பேசும்படி அனுப்பினார்கள் . குறைஷிகள் அவர் ஏறிச் சென்ற ஒட்டகத்தை வெட்டினதுமல்லாமல், அந்த முஸ்லிமையும் கொன்று விடுவதற்கு எத்தனித்தார்கள்.   ஆனால் ,அவர்களிற் சிலர் அதைத் தடுத்து விட்டார்கள் .   அதன்பிறகு முஸ்லிம்களைத் தாக்குவதற்குப்   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் இடத்திற்குக் குறைஷிகள் ஒரு கூட்டத்தை அனுப்பினார்கள் . முஸ்லிம்கள் அவர்களைச் சிறைப்படுத்திக் கொண்டனர்.  இச்சமாச்சாரம்   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்கள் அனைவரையும் விட்டுவிடும்படி உத்திரவு இட்டார்கள்அதன்பின் குறைஷிகளிடம் போய்ச் சமாதானம் பேசும்படி   பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் ( ரலி ) அவர்களிடம் சொன்னார்கள் . குறைஷிகள் தங்களுக்குக் கடுமையான விரோதிகள் என்றும் , தங்களுடைய குடும்பத்தாரில் தங்களுக்கு ஆதரவாயுள்ளவர்கள் ஒருவரும் அங்கு இல்லையயன்றும் உமர் ( ரலி ) அவர்கள் பதில் சொல்லவே ,   பெருமானார் அவர்கள் , உதுமான் ( ரலி ) அவர்களையும் , அவர்களுடைய உறவினர் ஒருவரையும் குறைஷிகளிடம் அனுப்பினார்கள்.   அவ்விருவரும் குறைஷிகளிடம் சென்று   பெருமானார் அவர்களின் செய்தியை அறிவித்ததும் குறைஷிகள் அவர்களைச் சிறைப்படுத்திவிட்டனர்அவ்விருவரும் குறைஷிகளால் கொல்லப்பட்டார் களென்ற ஒரு பொய் வதந்தி வெளிக் கிளம்பிற்று


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவ்விஷயம் தெரிந்ததும் உதுமான் ( ரலி ) அவர்களின் இரத்தத்திற்குப் பழி வாங்க வேண்டுமென்று சொல்லித் தங்களுடனிருந்த ஸஹாபாக்களையயல்லாம் ஒரு வேல மரத்தினடியில் கூட்டி வந்து அவர்கள் எல்லோரிடமும் உயிர்த் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று வாக்குறுதி வாங்கினார்கள்அக்கூட்டத்தார் அனைவரும் மிகுந்த ஊக்கத்தோடு தங்களுடைய உயிரைக் கொடுப்பதற்கு ஆயத்தமாயிருப்பதாகப் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்தைப் பிடித்து வாக்குறுதி செய்தார்கள்இஸ்லாமியச் சரித்திரத்தில் இது ஒரு முக்கியச் சம்பவம்இதுபைஅத்துர்ரிள்வான் என அழைக்கப்படும்அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட வாக்குறுதி ; உடன்படிக்கை .   இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் திருப்திப்பட்டுப் பொருந்திக் கொண்டதாக அடியிற் கண்ட வசனம் மூலம் அருளியுள்ளான்


“( நபியே ,) அம்மரத்தினடியில் உம்மிடத்தில் அவர்கள் பைஅத் பிரமாணம் செய்யும் பொழுது அதை அல்லாஹ் திட்டமாகப் பொருந்திக்கொண்டான் “( குர்ஆன் :48-18) ( இன்ஷா அல்லாஹ் வளரும் )