தலையங்கம்
வஹ்ஹாபிசம் வாழ விடாது !
முஸ்லிம்கள்வாழும் நாடுகளின் நிலையினை இன்றைய ஊடகங்கள் மூலமாக அறியும் போது எந்த ஒரு முஸ்லிமும்கவலைப்படாமல் இருக்க முடியாது ! பிரச்சினைக்குள்சிக்கித் தவிக்கும் அவர்களும் நிம்மதியாக இல்லை . அதனை அறிந்த பின்னே உலக முஸ்லிம்களுக்கும்நிம்மதியில்லை.
இறைவனையேஏற்காத - இறைவனை பல வடிவங்களில் வணங்குகின்ற - இறைவனின் இயற்கைச் சட்டத்துக்கு மாறுபுரிகின்றநாட்டு மக்களெல்லாம் அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க , இறைவனின் அன்புக்கும் அருளுக்கும் கவனத்துக்கும்உரிய சமுதாயமான முஸ்லிம்கள் மட்டும் இத்துணை பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வதேன்! சிந்திக்கவேண்டிய விஷயம்! இதற்கெல்லாம்காரணம் யூத உலகின் சதி என பொதுவாக ஒருவாதம் முன்வைக்கப்படுகிறது ! உண்மைதான் ! இருந்தாலும் ஒரு விஷ யத்தை நாம் யோசிக்க வேண்டும்.
மீன்பிடிப்பவன் தூண்டிலில் புழுவை மாட்டி நீருக்குள் எரிகின்றான் . மீனும் மாட்டிக் கொள்கிறது. மீன்மாட்டிக் கெண்டதற்கான காரணம் ; தூண்டில் போட்டவன் மட்டுமல்ல ! புழுவின் மீது மீனுக்கு ஏற்பட்ட அயராதஆசையும் தான்!
அதேபோல, யூதர்கள் சதி செய்தாலும் அவர்களில் விரிக்கும்வலைகளில் மாட்டிக் கொள்ள , முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் தாமாக முன் வருகின்றனரே !
“இறைவா! யூதர்களின் சதியிலிருந்து இந்த சமுதாயத்தைக்காப்பாற்று!” என கஃபத்துல்லாஹ்வில் இமாம் துஆ கேட்டுக்கொண்டிருக்க , அந்த மண்ணை ஆளும் அறபு அரசுகள் அமெரிக்கயூதர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கின்றனவே!
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் , சிரியா , எகிப்து , இங்கெல்லாம் இஸ்லாத்தைக் காக்க முஸ்லிம்களேயேகொல்லும் மடமை அரங்கேறுகிறதே ! பிரச்சினையின் கடைசி நேரத்தில் வெளிவர வேண்டிய ஆயுதம் பிரச்சினையின்தொடக்கத்திலேயே துள்ளிக் குதிக்கின்றதே!
இஸ்லாம்என்றால் அமைதி , முஸ்லிம் என்றால் அமைதியாளன் என்று சொன்னால்இந்த உலகம் ஏற்குமா ?
“எங்கெல்லாம் வஹ்ஹாபிஸம் வேர் விடுகின்றதோஅங்கெல்லாம் முஸ்லிம்கள் நிம்மதியை இழப்பார்கள் ” என சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்கூற்று எத்துணை சத்தியம் !
மறைஞானப் பேழை நிறுவனர்
அஷ்ஷைகுல் காமில் குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத்
ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
இந்தஉலகத்தில் திரையுடன் இருப்பவர்கள் அந்த உலகத்திலும் திரையுடன்தான் இருப்பார்கள் . இந்தஉலகத்திலுள்ள எம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரக்கணக்கான திரைகளயும் நாம் அறுத்தெறிந்துபரிபூரண இறையில் ஒன்று சேர வேண்டும். சங்கமமாகவேண்டும்.
பரிபூரணத்தின்அங்கங்களை மட்டும் அறிவதில் காலத்தையும் நேரத்தையும் செலவு செய்து சிறு இன்பங்களை அடைவதைவிடபரிபூரணத்தை பரிபூரணமாய் அறிந்து பேரின்பமடைவதே சிறப்பாகும்.
(சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் )
ஏழைக்குமர்களுக்காய் இறங்கிய கோமான் !
பதுறுப்போர் நிகழ்ந்தபின் போரில்கைதான எதிரிகள் தலா நான்காயிரம் வெள்ளிக்காசுகள் ஈட்டுத்தொகை கொடுத்து விடுதலையாகலாம் என அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொது அறிவிப்புச் செய்தார்கள். அப்போது அப்துல் உஸ்ஸா என்ற புலவன் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு அச்சமின்றி நடந்துவந்தான்.
கைதியொருவன் பீடுநடைபோட்டுவருவதைக்கண்ட ஹள்ரத் உமர் ( ரலி ) அவர்கள் வியந்துபோய் அவனை மறித்து நெஞ்சுச்சட்டையைப்பற்றிய வண்ணம்உனக்கு விடுதலை கிடைத்துவிட்டதா ? எனக்கேட்டார்கள் . ஆம் ! என அவன் துடுக்காக பதிலளித்ததும் அவனது பேச்சை நம்பாமல் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திற்கு இழுத்துச் சென்றார்கள் .
காலமெல்லாம் இஸ்லாத்தையும்பெருமானாரையும் இழித்துப் பழித்துக் கவிபாடிய இவனை மன்னித்தல் தகாது எனக் கருதிய உமர் ( ரலி ) அவர்கள் ; யா ரஸூலல்லாஹ் ! அப்துல் உஸ்ஸாவுக்கு விடுதலைவழங்கிவிட்டீர்களா ? எனக் கேட்டார்கள் . ஆம் ! என அண்ணலார் பதிலளித்ததும் அவன் ஈட்டுத்தொகை செலுத்திவிட்டானா ? என மீண்டும் கேட்டார்கள் உமர் ( ரலி ). அதற்கு அண்ணலார் அவன் என் காதினுள்ஒரு செய்தியைக் கூறினான்.
அதைச் செவியேற்றதும் அவனுக்கு மன்னிப்பளித்துவிட்டேன் எனக் கூறினார்கள் . மன்னிப்பு பெறும் அளவுக்குஅப்படியென்ன அவன் கூறினான் யா ரஸூலல்லாஹ் ! என மீண்டும் உமர் ( ரலி ) வினவ , அவனிடமே அதுபற்றி கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் என அண்ணலார் கூறிவிட , அப்துல் உஸ்ஸாவிடம் அண்ணலாரின்காதில் என்ன கூறினாய் ? என்று கேட்டார்கள்.
எனக்கு நான்கு குமர்கள் உள்ளனர் ; என்னிடம் பணம் ஏதுமில்லை ; என்னைக் கொன்றாலும் அல்லதுஅடிமையாக்கினாலும் அவர்கள்தாம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினேன் . இதனைக்கேட்ட ஹள்ரத் உமர் ( ரலி ) அண்ணலாரின் கருணை உள்ளம் கண்டுகரைந்து போனார்கள் !
( தகவல் : வாசகன் )