• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      Jul 2014      »    இஸ்லாத்தின் ஆணிவேர்


தூய்மை

இரக்க சிந்தனையே
இஸ்லாத்தின் ஆணிவேர் !

கலீபா பு . முஹம்மது காசீம் B.Sc., M.Ed., ஹக்கிய்யுல் காதிரிய் , பெரம்பலூர் .



ஒரு நாள் காஜாபாக்கிபில்லாஹ் ( ரஹ் ) அவர்களின்இருப்பிடத்திற்கு விருந்தினர் பதின்மர் வந்துவிட்டனர். அவர்களின் இருப்பிடத்திலோ யாதொரு உணவுமில்லை. என் செய்வதென அறியாது அவர்கள் கவலையோடிருந்த பொழுது, இதனை எவ்வாறோ உணர்ந்த பக்கத்து ரொட்டிக் கடைக்காரர் ஒரு தட்டு நிறைய ரொட்டிகளையும், கோழிக்கறியையும்கொண்டு வந்து அவர்களின் முன் வைத்தார்.   அது கண்டு பெரிதும் மகிழ்ந்த அவர்கள், அவற்றைத்தம் விருந்தினர்களின் முன் எடுத்து வைத்து, உண்ணீர்உண்ணீர் என்று கூறி உபசரித்தார்கள் . அவர்களும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றார்கள்.


விருந்தினர்கள் அனைவரும் சென்றதும், அவர்கள்அந்த ரொட்டிக்கடைக்காரரை அழைத்து வரச்செய்து, தம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, உமக்கு என்ன வேண்டுமானாலும் கேளும். நான் அதைத் தருகிறேன் என்று கூறினர். அதற்கு அவர் என்னைத் தங்களைப் போன்று ஆக்கிவிடுங்கள் என்று கூறினார்.


அதுகேட்ட அவர்கள் திடுக்குற்றவர்களாய், அது உமக்குவேண்டாம். அதைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் கேளும், தருகிறேன். அரசனாக வேண்டுமா, கேளும். தருகிறேன் என்றார்கள் அவர்கள்.


அதற்கு அவர், தந்தால், நான் முன்னர் கேட்டதையே தாருங்கள். தங்களைப் போல் என்னையும் ஆக்கி வையுங்கள். இல்லையெனில்எனக்கு ஒன்றுமே வேண்டாம் என்று கூறி அடம் பிடித்தார்.


இப்பொழுது அவர்களுக்கு என்னசெய்வது என்றே விளங்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத குற்றத்தையும் அவர்கள் செய்ய விரும்பவில்லை. உடனே அவர்கள், அவரைத் தம்அறைக்கு அழைத்துச் சென்று, அவரை ஆரத்தழுவி தம் ஆன்மிக ஆற்றலை அவரின் உடலில் புகச் செய்தார்கள்.  அடுத்த கணம் அவர், அவர்களே போன்றாகி விட்டார். அவர்கள் இருவருக்கும் இடையே உருவம், பேச்சு ஆகியவற்றில் யாதொரு வேற்றுமையும் இல்லாமல் போய்விட்டது. அவரின் உரோமம் கூட அவர்களின் உரோமம் போன்றே ஆகிவிட்டதுஎனினும் உணர்வற்று ஒருவித மயக்க நிலையிலான அவர், இது நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப் பின் இறந்து விட்டார்!


அவர்களின் இதயத்தில் இரக்க இயல்பு பெரிதும் குடிகொண்டிருந்தது. கடுமையான குளிர்கால இரவு ஒன்றில், அவர்கள் துயிலெழுந்து சற்று வெளியே சென்று அவர்களின் இருப்பிடத்திற்குத்திரும்பிய பொழுது, தாம் படுத்திருந்த பாயில் ஒரு பூனை வந்து படுத்திருப்பதைக் கண்டஅவர்கள் அதனை விரட்டிவிடாது அது அமைதியாக உறங்கட்டுமென்று எண்ணி, ஒரு மூலையில் இரவு முழுவதும் குந்திக்கொண்டிருந்தார்கள்.


இத்தகு அன்புள்ளம் வாய்க்கப்பட்டிருந்ததன் காரணமாக அவர்கள், பிறரின் தவறுகளைப் பொருட்படுத்தாது மன்னித்து வந்தனர். ஒரு நாள்அவர்களுடன் வாழ்ந்து வந்த பக்கீர் ஒருவர், பொருளாதார நெருக்கடியின் காரணமாக இரவில் தம் அருகே படுத்திருந்தவரின் சட்டைப் பையிலிருந்து பணத்தைத்திருடிவிட்டார்அதனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபொழுது எதிரே அமர்ந்திருந்த அவர்கள், இது பக்கீர்களுக்கு அழகல்லவே என்று கூறியதைக் கேட்டுத் திரும்பிச் சென்று, அப்பணத்தைஎடுத்த இடத்திலேயே வைத்து விட்டார்.


இதன்பின் அவர் அவர்களிடம் வந்த பொழுது, நடந்தது நடந்து விட்டது. இனி உமக்கு ஏதேனும் தேவைப்படின் என்னிடம் கூறும். நான் தருகிறேன் என்று கூறினர்.   அவரும் தம் இறுதி நாள் வரை தம் தேவைக்கான பணத்தை அவர்களிடமேபெற்றுச் செலவழித்து வந்தார்.


அவர்களின் இறைஞ்சுதல், ஏழையாகவேவாழச் செய்; ஏழையாகவே இறக்கச் செய் ; மறுமையில் ஏழைகளுடனேயே வாழச் செய் என்பதாக இருந்தது. எவருடையஇறப்புச் செய்தியைச் செவியுறினும் , நல்லதாயிற்று; உலகின் பொல்லாங்கை விட்டும்   அவர் தப்பித்து விட்டார் என்று அவர்கள் கூறுவர்.


அவர்கள் எவ்வளவுதான் நல்லவராகஇருந்து, புளியம்பழமொடு தோடெனப் பொருந்தி இவ்வுலகில் வாழ்ந்துவந்த போதினும், அவர்களின் அண்மையில் வாழ்ந்து வந்த ஒருவன், அவர்களுக்கு இன்னல் தந்து வந்தான். ஆனால் அவர்களோ, அதனைப் பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். எனினும் அவர்களின் சீடர்களில் ஒருவரான ஹுஸாமுத்தீன், மனம் பொறாதவராய் அவனைப் பற்றி அதிகாரிகளிடம் முறையிட, அவர்கள் அவனைக் கைது செய்து சிறைக்குள்அடைத்தனர்.


இதனை அவர்கள் அறிய வந்ததும், தம் சீடரைக்கண்டித்தார்கள்அதற்கு அவர்அவன் கொடியவன்; எப்பொழுதுபார்த்தாலும் வி ­ ஷமங்களைச் செய்து கொண்டு திரிந்தான் என்று பதிலிறுத்தார். அப்பொழுதுஅவர்கள், ஆம்! நீங்களெல்லாம் நல்லவர்கள். எனவே தான் அவனுடைய தீய எண்ணம் உங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் நானோ, என்னை அவனைவிடமேலாகக் கருதவில்லைஎனவேதான் அவன் பற்றி நான் அரசாங்க அதிகாரிகளிடம் குறை கூறவில்லை என்று சொன்னார்கள்அத்துடன்நில்லாது, அவனுக்காக அரசாங்க அதிகாரிகளிடம் பரிந்துரைத்து அவனுக்கு விடுதலையும்பெற்றுத் தந்தார்கள். அதன்பின் அவன்தான் முன்னர் செய்து வந்த தீய செயலுக்காகப் பெரிதும் வருந்தி, பாவ மன்னிப்புக்கோரியதுடன், நல்லோர்களின் அடிச்சுவட்டில் அடியெடுத்து வைத்து நடந்தான்.


ஒருநாள் அவர்கள் தம் தவச்சாலையில் வீற்றிருக்கும் பொழுது , மெளலானா ஹஸனுடன் அவர்களைக் காண ஒருவர் வந்தார். அவரைக், கண்டதும்தாம் நெடுங்காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தவரைக் கண்டது போன்று, அவரை வரவேற்று உபசரித்து உரையாடினார்கள் அப்பொழுது அவர்களின் உள்ளத்தில், முன்னர் ஒருநாள் ஒரு கிளி தம் கையில் வந்து அமர்ந்த நிகழ்ச்சி நிழலாட, அவர்கள் தங்களின் வழக்கத்திற்கு விரோதமாக, அவரைத் தம் விருந்தினராகத் தம்முடன் ஒரு மாத காலம் தங்கியிருக்குமாறுவேண்டிக் கொண்டார்கள்.


அதற்கு அவரும்   இசைந்தார். அவர் யார்? அவரே பிற்காலத்தில் முஜத்தித் அல்ஃப ஸானி என்னும் புகழ்ப் பெற்றுவிளங்கிய ஷைகு அஹமது சர்ஹிந்தி (ரஹ்) அவர்கள் ஆவர். அவர்கள் ஒரு மாதமல்ல, ஒன்றரை மாதம் வரை அவர்களுடன் தங்கியிருந்தார்கள். இந்த ஒன்றரை மாத காலத்திற்குள், இருவரும்ஒருவர், மற்றவரை நன்கு விளங்கிக் கொண்டனர்.


அவர்கள், அவர்களிடம் பைஅத் வேண்ட, அவர்கள் அதனை அவர்களுக்கு மனமுவந்து அளித்து, சிறந்த ஆன்மிகப்பயிற்சியையும் வழங்கினர்மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்தையும் ஏன் மிருகங்களையும் இறையிலிருந்து வேறாகப் பார்க்காது பழகுவதோடு அவைகளிடமும் இரக்கம்காட்டுவது இறைவனை அடைந்து வெற்றிபெறும் வழியாகும்.