• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai     »      2014      »      Jul2014      »    நல்வாழ்வு



வேண்டும் வேண்டும் நல்வாழ்வு!

உடல் பருமன் குறைய



வெள்ளைப் பூசணிக்காயை எடுத்துஜூஸ் பிழிந்து காலையில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும் . நெஞ்சு எரிச்சலும்வராமல் இருக்கும்.



சிறுநீரகத்தில் உப்பு தங்காமல் இருக்க


வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத் தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு, வெங்காயத்தாள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.



ரத்த அழுத்தம் குறைய


செம்பருத்திப் பூக்கள் மூன்றைஎடுத்து அவற்றின் இதழ்களைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு எடுத்துப்பிழிந்து வடிகட்டி , கொஞ்சம் பால் சேர்த்துச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.



பித்தம் தலைசுற்றல்


1 பிடி கொத்தமல்லித் தழையை அரைத்துச் சாறு எடுக்கவும்அதில் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட, தலைச்சுற்றல் போகும்.



புழு வெட்டு , வழுக்கை


1 கோப்பை நல்லெண்ணெயில் 7,8 பூண்டை நசுக்கிப்போடவும். அதை நன்றாகக் காய்ச்சவும் . இறக்கி வைத்து 1 மூடி எலுமிச்சம்பழத்தில் சாறு பிழிந்து எடுத்துச் சேர்த்து வைக்கவும் . பூச்சிவெட்டுஇருக்கும் இடத்தில் 2 சொட்டு தேய்த்து வர, முடிவளர ஆரம்பிக்கும்.



சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க


நாவல்பழக் கொட்டைப் பொடி, வெந்தயப்பொடி, கடுக்காய்த் தோல் ஆகியவற்றில் சமபாகம் எடுத்துக் கலந்து வைக்கவும். கொதிக்கும்தண்ணீரில் இதை 1 ஸ்பூன் போட்டு நன்றாகக் கலந்து காலையில் கால் டம்ளர் குடிக்கவும்.



வறட்டு இருமல் , சூடு


அதிமதுரம் பொடியை வாங்கி, 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடிபோட்டுக் கொதிக்க வைத்து , கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடவும்.



வாயு , வயிற்றுவலி


1 ஸ்பூன் சீரகத்தை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து 1 டம்ளர் தண்ணீரைவிடவும்நன்றாகக் கொதித்ததும் பனைவெல்லம் சேர்த்துக் குடிக்கவும்.



கர்ப்பப் பையில் நோய் வராமல் தடுக்க


துளசிவில்வம்அருகம்புல், மிளகு உள்ளிட்டவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இவற்றை வாங்கிக் கலந்து வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு நாள் 1 ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.



நோய் எதிர்ப்பு சக்தி


தினம் குடிக்கும் தண்ணீரில்எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டிப் போடவும் , மறுநாள்காலை வரை இந்தத் தண்ணீரைக் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைஎதிர்க்கும் சக்தி இதில் உண்டு.

(தகவல் : முஃபக்கிர்)