உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
( கலிவிருத்தம் )
விட்டவா யுதந்தனை வேண்டினர் கொணர்ந்திட
இட்டவா ணையெலா மியற்றிலர் ஸாபிதே
துட்டனின் படையினைத் தூர்ந்தெடுத்தன்னையார்
வெட்டினர் தலையினை வேறுகூ றாக்கினர்.
கொண்டுகூட்டு:
விட்ட ஆயுதந்தனை ஸபிய்யா நாயகிகொணர்ந்திட ஸாபிதை வேண்டினர் . ஸாபிதோ இட்ட ஆணையெல்லாம் இயற்றிலர் . துட்டனின் படையினை தூர்த்துஎடுத்து அன்னையர் வெட்டினாற்போல் அவனின் தலையை வெட்டி வேறு கூறாக்கினர்.
பொருள்:
ஸபிய்யா நாயகி ஸாபிதை அழைத்துஎதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கொணருமாறு ஆணையிட்டனர். ஸாபிதோ இட்ட கட்டளைகளைச் செய்யவில்லை. துட்டனின் படைகளெல்லாவற்றையும்ஒன்று கூட்டி வெட்டினாற் போல் அந்த யூதனின் தலையை வெட்டி இரு கூறாக்கினர்
குறிப்பு:
எதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள்எனக் கூட்டுக. கொணர்தல் : கொண்டுவரல். ஆணை : கட்டளை. இயற்றல் : செய்தல். தூர்த்தல் : கூட்டல் வேறுகூறாக்கல் : இரு வேறு பகுதிகளாக வெட்டல்.