மெய்யொளி பதிலகள் !
. மஜ்ஹர் அலி , குமாரபாளையம்.
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் இறைவன்?
சில கூட்டங்கள், மவ்லித்ஓதக் கூடாது. தர்காக்களுக்குப் போகக் கூடாது என்பனவற்றை மட்டும் பிரதானமாகக்கூக்குரலிடுவது ஏன் ?
அறிவின்மை; பொறாமை; வயிற்றெரிச்சல்.
நெருப்பு விறகை விழுங்குவது போல பொறாமை நன்மையை விழுங்கிவிடும் . (நபிமொழி)
வஹ்ஜத் அலி , எ . ம . புதூர்.
எங்கள் பள்ளி இமாம் அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள்தாம்உள்ளன எனக் கூறுகிறார் . இது சரியா ? தவறா ? தவறெனில் விளக்கம் தருவீர் ?
அஸ்மாவுல் ஹுஸ்னா ( அழகிய திருநாமங்கள் ) 99 என்பர் . இறைவனை கோடானகோடி நாமங்கள் பெற்ற நாமமற்றவன் என முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரலி) அவர்கள்கூறியுள்ளார்கள். திருக்குர்ஆனில் 25 நபிமார்கள் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக 1,24,000 நபிமார்கள் இல்லையென்று கூற முடியுமா ?
S. ஸாதிக் ராஜா , கருமண்டபம் .
மற்ற நபிமார்களை யா ஆதம், யா நூஹ், யா மூஸா, யா ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) என அழைக்கும் இறைவன், திருமறையில் யா முஹம்மத் என ஒருமுறை கூட அழைக்காததன் இரகசியம்என்ன ?
தானே தன்னில் தானான்.
V.M. ஹஸன் , பள்ளபட்டி .
கெளதுல் அஃலம் முஹிய்யுத்தீன் (ரலி) அவர்கள் ஒரு பறவையை ஏறிட்டுப் பார்த்ததால் அது எரிந்து சாம்பலாகி விழுந்தது என வரலாற்றில் கூறப்படுவதைசிலர் சுட்டிக் காட்டி. பறவையின் மீது இரக்கங்காட்டாதவர் எப்படி கெளது (இரட்சிப்பவர்) ஆவார் எனக்கேட்கின்றனர். தங்களின் பதில் ?
பூகம்பம், சுனாமி, வெள்ளம்முதலிய இயற்கை சீற்றங்களால் எண்ணற்ற உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனை இரட்சகன் என்று நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா ?
அழிப்பதை மட்டுமே காண்பவர்களுக்குஅருளைப் பற்றி அறிய முடியுமா ?
S. ஜக்கரிய்யா , இராமநாதபுரம் .
தரீகாக்கள் இதுவரை சாதித்ததென்ன ? இனி அவைகளின் முக்கியக் கடமைகள் என்ன ?
விருட்சத்திற்கு வேர்கள் . இஸ்லாத்திற்குதரீக்காக்கள்.
A. ஷேக் பரீது , மணப்பாறை .
சுப்ஹானல்லாஹ் என்பதற்கு அல்லாஹ்வைதூய்மையாக்குகிறேன் என ஆலிம்கள் பொருள் சொல்கிறார்கள் . இது பொருந்துமா ? இதன் உண்மைப்பொருள் என்ன ?
அல்லாஹ் - அத்வைதி - இரண்டற்றவன்.
S. காஜா ஷரீஃப் , திண்டுக்கல்.
பாபமீட்சி என்பதென்ன ? தன்னையுணர்தலா ? தன்னையடைதலா ?
உள்ளதை உள்ளபடித் தெள்ளெனத் தெளிதல்.
A.N.M. அன்ஸாரி , தீரன் நகர்.
அனுஷ்டானம் இல்லாத நம்பிக்கையும்நம்பிக்கையற்ற அனுஷ்டானமும் ஏற்றுக் கொள்ளப்படாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அமுத மொழி உணர்த்துவது என்ன ?
அனுஷ்டானம் இல்லாத நம்பிக்கை - கானல் நீர்
நம்பிக்கையற்ற அனுஷ்டானம் - உடல் வருத்தம்
நம்பிக்கையுடன் கூடிய அனுஷ்டானம் - வழிபாடு
S. ரிஸூவான் சபீர் , மன்னார்குடி.
என்னைத் தான் ஏற்பதே தியானம்என்பதாக மகானந்த பாபா ( ரஹ் ) அருளுகிறார்கள் . அப்படி என்றால்?
குருவே மெய் ! மற்றவை அனைத்தும்பொய் ! என்பதை ஏற்பதேதியானம்.
A.M.J. சாதிக் , திருச்சி.
நாத்திகர்கள் , எல்லாம்இயற்கை என்கிறார்கள் . ஆன்மீகவாதிகளும் எல்லாம் இயற்கை என்கிறார்கள் . எங்கு வேறுபாடுஏற்படுகின்றது?
“ இயற்கை ” யை அறிந்து கொள்வதில் தான்.
A. உமர் பாரூக் , தேவிபட்டினம்.
மகான்களுக்கு ஃபாத்திஹா ஓதவேண்டுமென்றால் வீட்டிலிருந்து ஓதக் கூடாதா? அது போய்ச்சேராதா? என ஒருவர் கேட்கிறார். தங்கள் பதில்?
போனில் கேட்டும் மருத்துவம் செய்து கொள்ளலாம். மருத்துவரை நேரில் பார்த்தும் மருத்துவம் செய்து கொள்ளலாம்.
A.M. மீரான் , செல்வ நகர்.
எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின்செயல்களே என்றால் , அல்லாஹ்தான் பாபமும் செய்கின்றான் என்று பொருள் வராதா? என ஓர் ஆலிம்கேட்கிறார். தங்களின் பதில்?
ஷைத்தான் இறைவனின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவனா?
S.M. அபூபக்கர் , வளநாடு.
இந்துக்களும் சில முஸ்லிம்ஞானிகளின் பக்தர்களாக உள்ளனர் . சிலைகளை வணங்குபவர்கள் எப்படி பரிபூரணத்தை அடைய முடியும் ? மகான்கள் எந்த ஒரு தனித்த வஸ்துவையும் இறையாகக் கருத மாட்டார்கள்.
பூரணத்திலிருந்து பூரணம் வெளியானபிறகு பூரணமே எஞ்சியுள்ளது. இதுவே இந்து மத வேதாந்தசாரம்.
S. முஹம்மது பாரூக் , உறையூர்.
எல்லாம் ஒன்று எனச் சொல்பவர்கள்பள்ளிக்குச் செல்பவர்கள் ; இவர்கள் கோயிலுக்குச் செல்வார்களா ? என ஒருவர்கேட்கிறார்?
கோயிலுக்குச் செல்பவர்களிலும்எல்லாம் ஒன்று என்று என அறிந்தவர்கள் உண்டு . பள்ளிக்குச்செல்பவர்களிலும் எல்லாம் ஒன்று என அறியாதவர்களும் உண்டு. எல்லாம் ஒன்று என அறிந்தவர்கள் எல்லா இடத்திற்கும் செல்ல வேண்டுமா?
S. அஹ்மது பாட்சா , வழுத்தூர்.
மீலாது தினத்தன்று விடுமுறையளிப்பதால்சமுதாயத்திற்கு என்ன நன்மை? என ஒரு பிரசுரத்தில் சிலர் கேட்கின்றனர் . தங்களின்பதில்?
மாற்று சமுதாயத்தினரும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் , இஸ்லாத்தைப்பற்றியும் சிந்திக்கத் தூண்டும்.
S. ஜானி பாஷா , தேக்கடி.
மவ்லிது ஓதுவதால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புதிதாக புகழ் சேர்வதில்லைஎனக் கூறிக் கொண்டு ஏன் மவ்லித் ஓதுகிறீர்கள்? என ஓர் ஆலிம்கேட்கிறார் . தாங்கள் தாம் பதில் அளிக்க வேண்டும்?
எந்தத் தேவையும் அற்றவனாகியஇறைவனைத் தொழுவது எவ்வளவு அவசியமோ அதுபோல்தான் புகழாகவே இருக்கும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் புகழுவதும் அவசியம் என்று கூறுங்கள்.