Islam and the West
இஸ்லாமும் மேற்கு நாடுகளும்
தமிழில் : கவிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது
முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள்ஆகிய இனத்தவர்கள் எல்லாம் இறைவேதம் அருளப் பெற்ற மக்கள் குழாத்தினர் - அஹ்லுல்கிதாப் ஆவர். இஸ்லாம்மார்க்கமும் கிறிஸ்தவ சமயமும் ஒரு பொதுவான ஏக இறைக் கொள்கைக்கு உரிமையுடையவை ஆகும். ஓர் இறைக்கொள்கை, உலக வாழ்வின் நிலையாமை, நம் செயல்களுக்குநாம் இறைவனிடம் கணக்குக் கொடுத்தல். அதை வைத்து அமைய இருக்கும் மறுமை வாழ்வு ஆகியவற்றை நம்புகின்றமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.
நாம் பல மூல ஆதார மதிப்புமிக்கக் கோட்பாடுகளைப் பொதுவாக வைத்துள்ளோம் ; பொதுவானவரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். நாம் நீதியையும் மதிக்கிறோம் ; ஏழைகளிடத்திலும்உரிமைக் குறைவானவர் களிடத்திலும் இரக்கம் காட்டுகிறோம் ; குடும்பவாழ்வைப் பேணுகிறோம். பெற்றோரை மதிக்கிறோம் ; உங்களுடையபெற்றோர்களைக் கண்ணியப்படுத்துங்கள் என்பது திருக்குர்ஆனின் கட்டளைகளில் ஒன்றாகும்.
நம்முடையவரலாறுகள் ஒன்றோடொன்று நெருக்கமாய்ப் பின்னிப்பிணைந்து உள்ளன . ஆயினும்அங்குதான் பிரச்சனையின் ஆணிவேர் இருக்கிறது . பதிநான்குநூற்றாண்டுகளாகப் பலமுறை ஒருவரை ஒருவர் பகைத்துப் போரிட்டு இருக்கிறோம்.
ஐரோப்பாவிற்கும்இஸ்லாத்திற்கும் இடையிலான வரலாறு, சிலுவைப் போர்களும் பிற போர்களும் மலிந்த, மோதல்கள்நிறைந்த வரலாறாகவே இருக்கிறது. அதனால் அச்சமும் அவநம்பிக்கையும் உள்ள ஒரு பாரம்பரியம் ஏற்பட்டுஇருக்கிறது. நம் இரு தரப்பினரும் கடந்த காலத்தை நேர்மாறான கோணங்களிலேயே அணுகிவந்திருக்கிறோம். மேற்கு நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை இருநூறு ஆண்டுகள்நீடித்த சிலுவைப் போர்கள் கொடிய புறச் சமயத்தவரான முஸ்லிம்களிடம் ஜெரூஸலத்தை மீட்பதற்காகமேற்கெள்ளப்பட்ட வீரம் மிக்க அருஞ்செயல் ஆகும்.
முஸ்லிம்களைப் பொருத்தவரையிலோ அவர்களுடைய மூன்றாவது புனித நகரமான ஜெரூஸலத்தை கி . பி 1099- இல் சிலுவைப்போர் வீரர்கள் வெற்றிகொண்ட போது நடத்திய நிகழ்ச்சிகள் சிறிதேனும் இரக்கமற்ற, வரம்பு கடந்தகொள்ளையர்களான மேற்கத்திய புறச் சமயத்துப் போர்வீரர்களின் பயங்கர அட்டூழியங்கள், படுகொலைகள் - மாறாத வடுவைஏற்படுத்தியவை ஆகும்.
ஐரோப்பியர்களைப் பொறுத்த வரை 1492- ஆம் ஆண்டுமனித முயற்சி வெற்றி கண்டு புதிய வான விளிம்பைக் கண்ட கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டஆண்டு ஆகும். முஸ்லிம்களுக்கோ அஃது ஒரு துயரமான ஆண்டு. அந்த ஆண்டுதான்ஃபெர்டினன்டும் இஸபெல்லாவும் கிரானடா நகரத்தைக் கைப்பற்றிய ஆண்டு. எட்டு நூற்றாண்டுகளாகஐரோப்பாவில் வளர்ந்த முஸ்லிம் கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதை எடுத்துக்காட்டும் ஆண்டு.
இத்தகைய நோக்குகளால் தாம் மக்களிடைய மனத்தாங்கல்களும் தவறானகருத்துக்களும் பரவுகின்றன. கிறிஸ்தவ மதத்தைச் சாராதவர்கள் உலக வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தோடுநோக்குகிறார்கள், அந்த வரலாற்றில் நம்முடைய பங்கினை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள்என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் வரலாற்றைக் கண்டறியும்கண்ணோட்டத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால்தாம் முஸ்லிம்களைப் பலமுறை ஓர் அச்சுறுத்தலாகக்கருதி வந்திருக்கிறோம். வரலாற்றின் இருண்ட காலத்தில் அவர்களை இராணுவ வெற்றியாளர்களாகச்சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தோம். இன்றோ அவர்களைச் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும்பார்க்கிறோம் . இப்பொழுதும் கூட நம்முடைய சாதாரண மக்களுடைய இஸ்லாம் பற்றிய பொதுநோக்கானது தவறாகப் புரிந்து கொள்வதாலும், மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதாலும் குறைபாடுஉடையதாக இருக்கிறது ; முழுமையற்றதாக இருக்கிறது.
மேற்கு நாடுகளிலுள்ள நம்மில்பலர், லெபனானின் உள்நாட்டுப் போர் , மத்தியக்கிழக்கிலுள்ள தீவிரவாதக் குழுக்களால் செய்யப்படுகின்ற கொலைகள் - குண்டு வீச்சுகள்போன்றவற்றால் இழைக்கப்படும் குற்றங்கள் அல்லது பொதுவாகக் கூறப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதம் முதலியவைதாம் இஸ்லாம் என்ற சீர்குலைந்த மதீப்பீட்டைச் செய்கிறோம். இதற்குக்காரணம் தீவிரவாதிகளை மாதிரிகளாகஎடுத்துக் கொள்வதுதான்.
நண்பர்களே! இஃது ஒருமாபெரும் தவறாகும். பிரிட்டனில் கொலை இல்லையா? கற்பழிப்புஇல்லையா? சிறார்களைத் தவறாக பயன்படுத்துவது இல்லையா? போதை மருந்துகளுக்கு அடிமைப்பட்டவர்கள் இல்லையா? இவற்றை வைத்துக் கொண்டு நாம் பிரிட்டனில் வாழ்க்கைத் தரத்தைமதிப்பீடு செய்யலாமா? தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன.
அவற்றை நாம்சமாளித்தாக வேண்டும் . அவற்றை வைத்துக்கொண்டு ஒரு சமுதாயத்தை மதிப்பீடு செய்வது சீர்குலைவிலும் நேர்மையின்மையிலும் நம்மைச்செலுத்திவிடும். எடுத்துக்காட்டாக நம் நாட்டிலுள்ளமக்கள் இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் ஷரீஅத் சட்டம்கடுமையானது, காட்டுமிராண்டித் தனமானது, நியாயமற்றதுஎன்று அவ்வப்போது பேசுகிறார்கள். இவற்றிற் கெல்லாம் மேலாக நம்முடைய நாளேடுகள் சிந்தனையில்லாமல்தவறான எண்ணங்களைப் பரப்புவதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. ஆனால் உண்மைஇவற்றிலிருந்து மாறுபட்டதாகும். நான் அறிந்த வரையில் கைகளை வெட்டுவது போன்ற தண்டனைகளை அரிதாகவேவழங்கப்படுகின்றன.
திருக்குர்ஆனிலிருந்து நேரிடையாகப்பெறப்பட்ட வழிகாட்டு நெறியும் இஸ்லாமியச் சட்ட உணர்வும், நீதியும்இரக்கமுமாகத்தான் இருக்க முடியும். ஒரு தீர்ப்பளிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றனஎன்பதை நாம் ஆராய வேண்டும். முழு நம்பிக்கையுடனும் வாய்மையுடனும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு நீதிமுறையை, அரசியல் நோக்குடன் உருச் சிதைக்கப்பட்ட - சொல்லப்போனால் - இஸ்லாமியச் சட்டமே அல்ல என்று சொல்லக்கூடிய அளவுக்கு உருச்சிதைக்கப்பட்டஒரு சட்ட அமைப்புடன் ஒப்பிட்டு நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது.
இஸ்லாம்மார்க்கத்தை சில இஸ்லாமிய நாடுகளில் நிலவி வரும் பழக்கங்களில் இருந்து மாறுபடுத்திப்பார்க்கும் ஒரு கண்ணோட்டமும் தேவைப்படுகிறது. இஸ்லாம் பற்றி மேற்கு நாடுகளில்வெளிப்படையாக இருக்கக்கூடிய மற்றொரு தவறான எண்ணம் , இஸ்லாமியசமூகத்தில் உள்ள பெண்களின் நிலை பற்றியதாகும்; மிகப் பழமையானநாடுகளில் வாழ்ந்து வரும் பெண்களைக் கொண்டு இஸ்லாமிய சமூகத்திலுள்ள பெண்களின் நிலையைக்கணிப்பது தவறு. ஏனெனில் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் நிலை அவ்வாறில்லை.
சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பியநாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கு முன்னரே துருக்கி, எகிப்து, சிரியா போன்றமுஸ்லிம் நாடுகள் பெண்களாகிய அவர்களுக்கு வாக்குரிமையை வழங்கியுள்ளன. சமமான வேலைகளுக்குச்சமஊதியம், சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் ஈடுபடும் உரிமை முதலியவற்றைஇந்த நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பல்லாண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.
எனவே இஸ்லாமியநாடுகளில் வாழ்வதனாலேயே ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே மரபுரிமைப் படியான பெண்களின்சொத்துரிமை, மணவிலக்குக்கு உள்ளானால் அவர்களுக்கான பாதுகாப்பு, பெண்கள்தொழில் நடத்தும் உரிமை முதலிய உரிமைகள் திருக்குர்ஆனில் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளன. பிரிட்டனைப்பொறுத்தவரை இவையெல்லாம் என் பாட்டியின் தலைமுறையினருக்குக் கூடப் புதுமையானதாகவே தோன்றியிருக்கும். பேநஸீர்புட்டோவும் பேகம் காலிதா ஜியாவும் இஸ்லாமியப் பாரம்பரியம் மிக்க சமுதாயங்கள் வாழும் (பாகிஸ்தான், பங்களாதேஷ்போன்ற) நாடுகளில் பிரதமர்களாக விளங்கினர்.
இங்கிலாந்தின்வரலாற்றில் அப்பொழுதுதான் ஒரு பெண் (மார்க்கரெட் தாட்சர்) முதல் முறையாகபிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இஃதெல்லாம்இருண்ட காலம் அல்ல. இஸ்லாமிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பதற்காகவே பெண்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் ஆவதில்லை. பழமைமிக்க சில இஸ்லாமிய நாடுகளை மனதில் வைத்துக் கொண்டு நாம்இஸ்லாம் மார்க்கத்தின் கலாச்சாரத்தை மொத்தமாக மதிப்பீடு செய்ய முடியாது.
திருக்குர்ஆனில்ஆண்களுக்கும் பெண்களுக்குமாகக் கூறப்படுகின்ற ஆடை அணியும் ஒழுங்குமுறையினை நம்முடையபழக்கவழக்கங்களின் காரணமாக அமைந்துள்ள ஆடை அணியும் முறையுடன் ஒப்பிட்டுக் குழம்பிக்கொள்ளக் கூடாது. அங்குள்ள பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக இருக்கின்றனர் என்றுசொல்ல முடியாது. மேற்கு நாடுகளில் வாழும் நாமும் இஸ்லாமிய உலகம் நம்மைப் பற்றிவைத்துள்ள கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்குள்ளபெரும்பான்மையான மக்கள் நமது மேல்நாட்டுக் கலாச்சாரத்தையும் பொருள் முதல் வாதத்தையும்எந்த அளவுக்கு இஸ்லாமியக் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் ( எதிரான ) சவாலாக நினைக்கிறார்கள்என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; புரிந்து கொள்ள மறுப்பதன் மூலம் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
நாம் இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கக்கூடிய தொலைக்காட்சி , திடீர் உணவுப்பொருட்கள் , பிற பல மின்சாதனப் பொருட்கள் போன்றவை வாழ்க்கைக்கு மெருகூட்டுபவைஎன்று நம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால் முற்போக்குச் சிந்தனை என்றால் பிற நாடுகளில் உள்ளவர்கள்நம்மைப் போல ஆவது என்று எண்ணிக் குழம்பிக் கொள்வது அல்ல.
உண்மை என்னவென்றால்பொருள் முதல் வாதத்தையும் புலன்நுகர் இன்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட நம்முடைய வாழ்க்கைமுறை உண்மை . முஸ்லிம்களுக்கு அருவறுப்பூட்டக் கூடியதாகத் தோன்றக் கூடும். நான் கூறுவதுஅவர்களிலே உள்ள தீவிரவாதிகளைப் பற்றியல்ல. நாம் இஸ்லாமியர்களுடையஇந்த மனநோக்கைப் புரிந்தாக வேண்டும் இதை நாம் புரிந்து கொண்டோம் என்றால் தீவிர வாதத்தையும்சரியாகப் புரிந்து கொள்ளலாம்.
அடிப்படைவாதம் என்று கிளர்ச்சியூட்டும் வண்ணம் முத்திரை குத்தப்படுவது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்முடைய மார்க்கத்தை உண்மையாகப்பின்பற்றி வாழும் இறைநம்பிக்கையுள்ள முஸ்லிம்களையும், இந்த ஈடுபாட்டைஅரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளையும் முஸ்லிம்கள் வேறுபடுத்திக்காண்கிறார்கள். நாமும் அவர்களைப் போலவே இந்த வேறுபாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும்.