• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      Jun 2014      »      முத்துக்கள் மூன்று


முத்துக்கள் மூன்று


சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களிடம் ஒரு சிறப்பு நேர்காணல் !



சங்கைமிகு ஷைகு நாயகம்குத்புஸ்ஸமான் ­ ஷம்ஷுல் வுஜூது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானாஅல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்கள் தங்களின் புனித இந்திய விஜயமாக திருச்சி மாநகருக்குவருகை தந்திருந்த போது, அருமை நாயகமவர்களுக்குப்பிடித்த மூன்று விஷயங்கள் என்னும் தலைப்பில் சில வினாக்களைச் சமர்ப்பித்தோம் !


சங்கைமிகு நாயகமவர்கள் அவற்றிற்கு அன்பாகவும் அழகாகவும், உற்சாகமாகவும் அருளியவிடைகளை ஈங்கண் வழங்குவதில் ஆனந்தங் கொள்கிறோம் .


வினா :   கண்மணிநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்குப் பிடித்த மூன்று வி ­ ஷயங்கள்என (1) தொழுகை (2) பெண்கள் (3) நறுமணம்ஆகியனவற்றை அருளுகிறார்கள் . அவ்வகையில் சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களுக்குப்பிடித்த மூன்று விஷயங்கள் ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

(1) எமது முரீதுப் பிள்ளைகள்    (2) அறிவு சார்ந்த நூற்கள்  (3) பிறருக்கு மரியாதை செய்வது


வினா : எல்லாம்வல்ல அல்லாஹு தஆலாவும் ஹள்ரத் ஜிப்ரீல் ( அலை ) அவர்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்

(1) தாய்தந்தையில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து அவர்களைச் சங்கைப்படுத்தாதவர்கள் நாசமடையட்டும் .

(2) சங்கைமிகு ரமலான் மாதம் தோன்றி அதனைச் சங்கை செய்யாதவர்கள் நாசமடையட்டும் .

(3)
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின்   திருப்பெயரைக்கேட்டு ஒருவர் ஸலாவத்து கூறவில்லையெனில் அவன் நாசமாகட்டும் என்பதாகச் சபிக்கப்பட்டு இருக்கிறார்கள் என ஹதீஸில் காணப்படுகிறது. அவ்வகையில் சங்கைமிகு ஷைகு நாயகமவர்களால் சபிக்கப்படும் மூவர் யார் ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

(1) குர்ஆன் ­ ரீஃப்ஓதாதவர்கள்

(2) இஸ்லாமியஒழுங்குமுறைக்கு முற்றிலும் முரணாக நடப்பவர்கள் .

(3) தாய்தந்தையரைக் கொடுமைப்படுத்துபவர்கள் .



வினா
: சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் விரும்பக் கூடிய மூன்று தமிழ்நூற்கள் யாவை ?


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. கம்பராமாயணம்   2. நளவெண்பா   3 . கலிங்கத்துப்பரணி .



வினா
: சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் அதிகம் விரும்பக்கூடிய தமிழ்ப்புலவர்கள் ( தமிழறிஞர்கள் ) மூவர்யாவர் ?


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. கம்பர்   2. திருவள்ளுவர்   3. பாரதியார்


வினா
: சங்கைமிகு ஷைகு நாயகமவர்களுக்கு மிகவும் பிடித்த நபிமார்கள்மூவர் யாவர் ?


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. எங்கள்பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் .

2. ஹள்ரத்இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் .

3. ஹள்ரத்ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்


வினா
: சங்கைமிகு ஷைகு நாயகமவர்களுக்கு மிகவும் பிடித்த குத்புமார்கள்மூவர் யாவர் ?


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. குத்புநாயகம் முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி )

2. குத்புகள்திலகம் அபுல் ஹஸன் ஷாதுலிய்யி நாயகம் ( ரலி )

3. எங்கள்அருமைத் தந்தை நாயகம் குத்புல் ஃபரீது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது       யாஸீன் மெளலானா ( ரலி ).


வினா : அஸ்ஸையித் ஜமாலிய்யா மெளலானா ( ரலி ) அவர்களின்மூன்று சிறப்புகள் யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. அறபுஅதிகம் கற்றவர்கள்

2. புலமைவாய்ந்தவர்கள்

3. கராமத்துகள்நிறைந்தவர்கள் .



வினா : சங்கைமிகு குத்புல் ஃபரீது ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மெளலானாநாயகமவர்களின் உயர்ந்த மூன்று சிறப்புகள் யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் :

1. அறபியில்கரை கண்டவர்கள்

2. அன்னவர்களின்கவிதைகள் கடல் போன்றவை

3. தர்க்கத்தில்என்றும் தோற்றிடாதவர்கள் .


வினா கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருங்குணங்களில் சங்கைமிகு நாயகமவர்களுக்கு மிகவும் பிடித்த மூன்றுயாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. அனைத்துவி ­ ஷயங்களிலும் ஒழுங்குப் பிரகாரம் நடத்தல்

2. சொன்னதைச்செய்தல்

3. உண்மையாகநடந்து கொள்ளல் .



வினா : தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கலீஃபாக்களுக்குஇருக்க வேண்டிய முக்கிய மூன்று குணாதிசியங்கள் எவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. பொய்யாமை ( எப்பொழுதும் உண்மை பேச வேண்டும் )

2. நேர்மையாகஇருக்க வேண்டும் .

3. ஷைகில்அயராத பக்தி இருக்க வேண்டும் .



வினா : நமது முரீதுகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய மூன்று குணாதிசியங்கள்யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. இஸ்லாமியஷ ­ ரீஅத்தில் ஊன்றுதலான முறையில் நடந்து கெள்ள வேண்டும் .

2. ஷைகிடம்தன்னை அர்ப்பணித்தல்

3. நேர்மையைக்கடைபிடித்தல்



வினா : பொதுவான முஃமீன்களுக்கு இருக்க வேண்டிய மூன்று குணாதிசியங்கள்யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. தொழுகைஇருத்தல் வேண்டும் .

2. நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது குறையாத அன்பு இருக்க வேண்டும் .

3. விடாதுதொடர்ந்து ஸலவாத்துச் சொல்ல வேண்டும் .



வினா : பொதுவான மனிதரிடம் இருக்க வேண்டிய மூன்று குணாதிசியங்கள்யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. பெரியோருக்குமரியாதை செய்தல் .

2. ஏழை , எளியவருக்குஉதவி புரிதல் .

3. தேவையற்றவிஷ ­ யங்களில் தலையிடாது இருத்தல்


வினா : சங்கைமிகுஷைகு நாயகமவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இயங்கி வரும் மூன்று சபைகள்யாவை ?


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. துபைஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

2. மதுக்கூர்ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

3. திருச்சிஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 


வினா : சங்கைமிகுஷைகு நாயகமவர்களால் மறக்க முடியாத மூன்று நபர்கள் யாவர் ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. கலீஃபா . காதிர்முஹம்மது ஆலிம் தாவூதி பாகவி , வேல்வார்கோட்டை .

2. கலீஃபா . மெளலவி . பி . கே . ஹுஸைன்முஹம்மது ஆலிம் பாகவி , திருச்சி .

3. கலீஃபா . மெளலவி . அப்துர்ரஷுது ஆலிம் பாகவி , ஆடுதுறை


வினா : இயற்கைப்பொருட்களில்சங்கைமிகு நாயகமவர்கள் இரசித்துப் பிரமிக்கும்   மூன்று வி ­ ஷயங்கள் யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. சூரியஉதயம் ( சூரியோதயம் )

2. கானகத்தில்வீசும் நிலா

3. இயற்கைஎழில் இன்பம் 


வினா : ஹக்கைப்பரிபூரணமாக அறிய எளிய வழிகள் மூன்று யாவை ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. தனித்தனியாய்க்காண்பதை விட முழுமையாக ஆராய்தல் .

2. ஹக்கிலேயேஇலயித்து இருத்தல் .

3. அனைத்தும்உள்ளமை என அறிதல்


வினா : உலகில் வாழும் மூடர்கள் மூவர் எனயாரைக் குறிப்பிடலாம் ?

சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் :

1. ஒன்றைஇரண்டாகப் பிரிப்பவர் .

2. ஒவ்வொருவிதமாக இறைவனை நினைத்து வணங்குபவர் .

3. இறைவனைஅறியாத பாவிகளாக வாழ்பவர் .


                        வினாக்கள் - கிப்லா ஹள்ரத் , திருச்சி .