வணிகம்செய்வீர் ! வளமாய்வாழ்வீர் !
மெளலவி A. முஹம்மது ஹாலித் ஆலிம் யாஸீனிய் ,
இன்றையஉலகத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தொழில் - வியாபாரமாகும் . ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் தொழில் - வியாபாரத்தைப் பொறுத்துத்தான் அமைகின்றது . எனவே மனித இனத்திற்கு அடிப்படையாக அமைவதுஉழைப்பு ஆகும் .
இவற்றைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது ,
ஈமான் கொண்டவிசுவாசிகளே ! நீங்கள்சம்பாதித்த நேர்மையானவற்றி லிருந்தும் , நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் நீங்கள் செலவு செய்யுங்கள் . (2:267)
எனவே அல்லாஹ் இஸ்லாத்தில் நான்கு கட்டளைகளைப் பிறப்பித் துள்ளான்
(1) ஈமான் கொண்டவர் உழைத்து சம்பாதித்திட வேண்டும் . (2) அது நேர்மையான பொருளீட்டுதலாக இருக்க வேண்டும் . (3) நில உரிமையாளர்கள் அதில் உழைத்து உணவுஉற்பத்தியைப் பெருக்கிட வேண்டும் . (4) இவற்றின்மூலம் பெறப்படுகின்ற பொருளிலிருந்து தனக்கும் செலவு செய்து மற்றவருக்கும் உரிய முறையில்தானம் தருமம் வழங்கிட வேண்டும் .
இந் நான் குகருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு வசனம் பொருளாதார வளமைக்குரிய பல்வேறு சட்டங்களைக் குறிப்பிட்டுஉள்ளது . அதே போல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் உழைப்பைப் பற்றி வலியுறுத்தும் பல அருள் மொழிகளையும் வழிகளையும் கூறியுள்ளார்கள் .
தன் கரங்களினால்உழைத்து சம்பாதித்து சாப்பிடுவதை விட சிறந்த உணவை எவரும் சாப்பிட முடியாது . ( நூல் : புகாரி )
அல்லாஹ் தொழிற் செய்யும் - மனிதனை விரும்புகிறான் ( நூல் : தர்கீப் )
ஒரு தடவைஒரு ஸஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கைகளை முஸாபஹாச் செய்தார் . அவர்களின் கைகள் முரடாக இருப்பதைத் தெரிந்துநபியவர்கள் அதைப் பற்றி விசாரித்தார்கள் . அப்பொழுது அந்த ஸஹாபி நான் கயிறு , மண்வெட்டி ஆகியவற்றைக்கொண்டு ( தோட்டத்தில் ) வேலை செய்கிறேன் . அதன் வருமானத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும்செலவு செய்கிறேன் என்று கூறினார்கள். எனவே அந்த ஸஹாபிக்குநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆச் செய்தார்கள் . ( நூல் : உஸ்துல் காபா )
இது போன்ற நபிமொழிகளின் வாயிலாக உழைப்பின் சிறப்பையும் , உழைத்துப் பொருளீட்டுவதின் மூலமே பொருளாதாரச்சிக்கல்கள் தீர்க்கப்படும் என்பதையும் தெளிவாக உணர வேண்டும் . மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழைக்காமல் பிறரிடம் கையேந்தி வாழ்பவர் களையும் , பிறருக்கு சுமையாக வீண் பொழுதைக் கழித்துவாழ்பவர்களையும் கண்டனம் செய்துள்ளார்கள் .
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் . மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்பேரித்தம்பழம் வியாபாரம் , துணி வியாபாரம் செய்துள்ளார்கள் . இது மட்டுமல்ல ; அவர்கள் திருமணம் வணிகத்தால் ஏற்பட்ட திருமணமாகும் . ( அன்னை கதீஜா ( ரலி ) அவர்களுடன் ) மேலும்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றொரு சமயத்தில் கூறும்பொழுது :
யாசிப்பதைத்தவிர்ப்பதற்காக , தன் குடும்பத்தைக் காப்பதற்காக , தன் அண்டை அயலாருக்குஉதவுவதற்காக எவர் ஹலாலான முறையில் செல்வத்தைத் தேடுகிறாரோ அவர் பரிபூரண மதியின் ஒளியுடையமுகத்துடன் அல்லாஹ்வைச் சந்திப்பார் .
மனிதன்உண்ணும் உணவில் மிகவும் பரிசுத்தமானது அவர் சம்பாதித்ததிலிருந்து உண்ணும் உணவும் மற்றும்நியாயமான வியாபாரத்திலிருந்து சாப்பிடுவதும் தாம் என்று கூறினார்கள் .
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வணிகத்தைச் சொன்னார்கள் , செய்தார்கள் , பிறருக்கு அதை ஏவினார்கள் . ஒரு முறைநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஓர் ஏழை மனிதர்சாப்பிட ஏதாவது தாருங்கள் என்றார் . உடனே உம்மிடம் ஏதேனும் பொருட்கள் உண்டா ? எனக் கேட்க ? அதற்கு அம்மனிதர் தன்னிடம் ஒரு கம்பளிப்போர்வையும் நீர்க் குவளையும் மட்டும்தாம் உள்ளன என்றார் . அவற்றை எடுத்து வருமாறு நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் . அவ்வாறே அம்மனிதரும்செய்தார் . அந்தப் பொருட்களை விற்று , ஒரு கோடரி வாங்கி அதற்கு தங்கள் திருக்கரங்களால்ஒரு பிடி செய்து , பொருத்தி அம் மனிதரிடம் கொடுத்தார்கள் . பின்பு அம்மனிதரிடம் கூறினார்கள் . தோழரே ! நீங்கள் இந்தக் கோடரியால் காட்டில் விறகுவெட்டி அதனை விற்று அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தன்மானத்தோடு வாழ்வீராகஎனக் கூறி அனுப்பி வைத்தார்கள் . மேற்கண்டசம்பவம் , வாங்கும் தாழ்ந்த கரத்தை விட கொடுக்கும்உயர்ந்த கரமே சிறந்தது . என்ற நபிமொழிக்கு மேற்கோளாக , படிப்பினையாக உதாரணமாக அமைந்துள்ளது .
வியாபாரத்தில் நேர்மை :
உண்மையான , நேர்மையான வியாபாரி நபிமார்களுடன் , உண்மையாளர்களுடன் இருப்பார் என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்கள் .
நமது சங்கைக்குரியஷைகு நாயகம் வியாபாரத்தைப் பற்றிக் கூறும் போது ,
வியாபாரத்தின் விரோதிகள் : பொய் , களவு , வட்டி , கடன் என நான்கையும் கூறியுள்ளார்கள் . எனவே வியாபாரம் / தொழில் செய்ய வேண்டும் . அதிலும் நேர்மை / உண்மை மிக முக்கியமாகும் . இமாம் அபூஹனீபா ( ரஹ் ) அவர்கள் துணி ( ஜவுளி ) வியாபாரம் செய்து வந்தார்கள் . ஒரு சமயம் ஒரு துணியில் மட்டும் (Damage) ஓரத்தில் சிறிது கிழிந்து இருந்தது . இமாம் அவர்கள் ஒரு வேலையாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது . எனவே தனது பணியாளர் , கடையில் வேலை செய்தவரிடம் , இந்த துணி (Damage) இருக்கிறது . எனவே இந்தத் துணியை மட்டும் குறைந்த விலைக்குவிற்று விடுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றார்கள் .
வேலையெல்லாம்முடிந்த பிறகு ஊர் திரும்பியதும், பணியாளர் வியாபாரத்திற்கான இலாபத்தை இமாமிடம் ஒப்படைத்தார் . இதைப் பார்த்த இமாம்அவர்கள் இலாபம் , அதிகமாக இருக்கும் காரணத்தை வினவினார்கள் . அவரோ இமாம் அவர்களே , அந்த (Damage) துணியை மற்ற துணிகளைப் போலவே விற்று விட்டேன்எனக் கூறினார் . இதைக் கேட்ட இமாம் கோபமடைந்தார்கள் . நுகர்வோரை ( வாடிக்கையாளர் ) ஏமாற்றுவது கூடவே கூடாது . எனவே இந்த இலாபப் பணம் அனைத்தையும் தருமம் செய்து விடுங்கள் என்று கூறினார்கள் . இவர்களைப் போல உலகத்தில்எவரும் உண்டா ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்எதைச் சொன்னார்களோ , எதைச்செய்தார்களோ அதையே இமாமவர்கள் செய்தார்கள் . இவற்றைப் பார்த்துப் பின்பற்றுவதை விட்டு விட்டு இமாம்களை குறை கூறிக் கொண்டு சிலர் ( வஹ்ஹாபிகள் ) திரிகின்றனர் . சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்கள் ஒவ்வொன்றிலும் ( ஹக் ) இறையைக் காணவேண்டுமெனக் கூறியுள்ளார்கள் . நாம் ஒரு தொழில் செய்கிறோம் என்றால் , அவற்றிலும் ( ஹக் ) இறையைக் காண வேண்டும் . சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள் . மேலும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமடைகிறேன்என்ற நம்பிக்கை மனதில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்கள் .