• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      Jun 2014      »      வாழ்க்கை வரலாறு


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வாழ்க்கை வரலாறு

மூலம் : திருநபி சரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி



தூதரின் தூது

ஹிர்கல் அரசருக்கு எழுதிய கடிதம் .

கிருபையும் ,இரக்கமும் உள்ள ஆண்டவன் திருநாமத்தைக் கொண்டு நாயனுடைய அடியாரும்தூதருமாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ரோம சக்கரவர்த்தியாகிய “ஹிர்க்கல் ” அரசருக்கு (எழுதும் கடிதமாவது)


நேர்வழியைப் பின்பற்றுகிறவர்களுக்குநல்வாழ்வு உண்டாவதாக ! பின்னர் , நான் உம்மை இஸ்லாம்மார்க்கத்தைத் தழுவும்படி அழைக்கின்றேன் . நீர் இஸ்லாத்தில்சேரும் . நலமாக இருப்பீர் . இறைவன் உமக்கு இரட்டைக்கூலியைக்கொடுப்பான் . நீர் ஒப்புக் கொள்ளவில்லையானால் உம்முடையகுடிகளின் பாவங்களெல்லாம் உம்மையே சாரும் . ஆண்டவனால் அருளப்பட்டவேதங்களையுடையவர்களே ! உங்களுக்கும் நமக்கும் ஒற்றுமையாயிருக்கிறஒரு விஷயத்தில் நீங்கள் வந்து சேருங்கள் ”. அவ்வி ­ ஷயமாவது :


நாம் ஆண்டவனைத் தவிரவேறு யாரையும் வணங்கக் கூடாதென்பதும் , அவனுக்கு யாதொரு வஸ்துவையும்இணையாக்கக் கூடாதென்பதும் நம்மில் எவரும் அவனையன்றி வேறு எவரையும் ஆண்டவனாகக் கருதக்கூடாது என்பதுமேயாம் ”. நீங்கள் இவ்வி ­ ஷயங்களை ஒப்புக் கொள்ளாமல்புறக்கணித்தால் , நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள்சாட்சியாயிருப்பதாகச் சொல்லுங்கள் என்பதே .

இக்கடிதம் வாசிக்கப்படவேஅரச சபையில் பெரிய கலக்கமுண்டாயிற்று .   அதனால் அபூஸுப்யான் முதலியோரை வெளியே அனுப்பி விடுவது உசிதமென்றுநினைத்து அரசர் அனுப்பி விட்டார் .


ஹிர்கலுடைய மனதில் இஸ்லாம் உண்மையான மதம் என்பது பதிந்து விட்டது . ஆனால் மக்கள் குறைகூறுவார்களென்று பயந்து இஸ்லாத்தில் சேரவில்லை . அபூஸுப்யான் வெளியேவந்ததும் தம்மைச் சேர்ந்தவர்களிடத்தில் , ஆண்டவனே ! ரோம தேசத்துச் சக்கரவர்த்தியும்பயப்படும் படியான அந்தஸ்தை முஹம்மது பெற்றிருக்கிறாரே என்று சொன்னார் .


பாரசீக தேசத்து அரசரான ‘ குஸ்ரூ ’ உக்கு அப்துல்லாஹ்இப்னு ஹுதாபதஸ் ஸஹ்மி ( ரலி ) என்பவர் வசம் ஒருகடிதம் எழுதி அனுப்பினார்கள் . அது வருமாறு :-

கிருபையும் இரக்கமுமுள்ள ஆண்டவன் நாமத்தை முன்னிட்டு , நாயனுடைய தூதராகியமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாரசீக தேசத்துச் சக்கரவர்த்தி குஸ்ரூ விற்கு எழுதும் கடிதமாவது :-

நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்விடமும் அவனுடைய ரஸூலிடமும் விசுவாசங்கொண்டுஅல்லாஹ்வைத் தவிரவேறு நாயனில்லை என்றும், உயிருடனிருக்கும் ஒவ்வொருவனுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக எல்லா மனிதரிடத்தும் நான் தூதனாக அனுப்பப்பட்டேன் என்று சாட்சி சொல்லுகிறவர்மீதும் ஷேம முண்டாவதாக ! நீர் இதை அங்கீகரித்தால் ஷேமமடைவீர் . நீர் இதை ஒப்புக்கொள்ளவில்லையானால் நெருப்பை வணங்குகிற பாரசீகத்தார் பாவம் உம்மீது ஏற்படும் ” என்பதே .


பாரசீக அரசர்கள் , மிகுந்த ஆடம்பரப்பிரியர்கள் . அத்தேச வழக்கப்படி அரசர்களுக்குக் கடிதம்எழுதுவதாய் இருந்தால் அரசர் பெயரையே தலைப்பில் எழுதுவது வழக்கம் . ஆனால் இக்கடிதத்தில்முதலாவதாக அல்லாஹ்வினுடைய திருநாமமும் , அதன்பின் நபிகள் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களின் திருநாமமும் வரையப்பட்டிருந்தன .

இதைக் கண்டதும் அரசன்தன்னைக் கேவலப்படுத்தி எழுதியிருப்பதாக எண்ணி என்னுடைய அடிமையா எனக்கு இவ்விதம் எழுதவேண்டும் என்று சொல்லிக் கொண்டே கடிதத்தைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்து விட்டான் .


பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததும் , “ அவ்வரசனுடைய அரசாங்கமும்இவ்விதமே சின்னாபின்னமாக்கப்படும் என்று சொன்னார்கள் . அதன்படியே சொற்ப காலத்திற்குள்அவனுடைய ராஜ்ஜியமும் சின்னாபின்னமாக்கப்பட்டது . அரசன் கடிதத்தைக்கிழித்ததோடு நில்லாமல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களைப் பிடித்துச் சிறையாக்கித் தன்சமூகத்திற்கு அனுப்பும்படி எமன் தேசத்துக் கவர்னருக்கு உத்தரவு அனுப்பினான் .


அதை நிறைவேற்றுவதற்காக எமன் தேச கவர்னர் இருவரை மதீனாவிற்கு அனுப்பினார் . அவ்விருவரும் முதலில் மக்காவிற்குச் சென்றார்கள் .

பார்ஸி தேசத்து அரசனும்இஸ்லாத்திற்கு விரோதமாயிருக்கிறான் என்ற விஷயம் குறைஷிகளுக்குத் தெரிந்ததும் அவர்கள்மிகுந்த குதூகலமடைந்தார்கள் .   அபூஸுபியான் மகிழ்ச்சியுடன் , முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்   அவர்களை நசுக்கிவிடபார்ஸி தேசத்து அரசன் தீர்மானித்து விட்டதால் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இனிமேல்உயிரோடு இருக்க முடியாது என்று சொன்னாராம் . அங்கிருந்து அத்தூதர்கள்இருவரும் மதீனாவிற்குச் சென்றுபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்தில்வந்து , உலகச் சக்கரவர்த்தி உங்களை அழைத்திருக்கிறார் . அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை யானால் உங்களுக்கும் , உங்கள் தேசத்தாருக்கும் நாசத்தை உண்டு பண்ணுவார் என்று சொன்னார்கள் . அவர்கள் வந்த நோக்கம்தெரிந்ததும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரையும் ஒருநாள் அங்குத்தாமதிக்கும்படியும் , மறுநாள் முடிவு சொல்வதாயும் கூறினார்கள் . அன்றிரவு பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வபாயத்திலிருந்து காப்பாற்றும்படி அல்லாஹ்விடம்பிரார்த்தனை செய்தார்கள் . பார்ஸி தேசத்து அரசன் கொல்லப்பட்டான் என்றசெய்தி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வினால் அறிவிக்கப்பட்டது . அவர்கள் காலையில்அத்தூதர் இருவரையும் அழைத்து , “ உங்களுடைய சக்கரவர்த்திநேற்றிரவு கொல்லப்பட்டுப் போனார் என்று கூறினார்கள் .


அப்போது அவ்விருவரும்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களிடம் தாங்கள் சொல்வதை நன்குகவனித்துச் சொல்லுங்கள் . இவ்விஷயத்தை தங்களுடைய பொறுப்பின் மீதுநாங்கள் அரசனுக்கு எழுதுகிறோம் , அதனால் வரும் பலனைத்தாங்கள் அனுபவிக்க வேண்டியதிருக்கும் . ஏனெனில் எந்தக் குற்றத்திற்காகநாங்கள் தங்களைக் கொண்டு போக வந்திருக்கிறோமோ அந்தக் குற்றத்தை விட இப்போது தாங்கள்சொல்வது பெரிதாயிருக்கின்றதே !” என்று சொன்னார்கள் . அப்போது பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்    அவர்கள் , என்னுடைய பொறுப்பிலேயேஇவ்வி ­ ஷயத்தை எழுதி அனுப்புங்கள் . அத்துடன் இஸ்லாத்தின் அரசாங்கம் குஸ்ரு வின் சிம்மாசனத்தின் அடிப்பாகம் வரை வந்து சேரும் என்றும் எழுதி அனுப்புங்கள்என்று சொன்னார்கள் .


அவ்விரு தூதர்களும்எமனிற்கு வந்து பாதான் என்னும் கவர்னரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்கூறிய விஷ ­ யத்தைத் தெரிவித்தார்கள் . அக்கவர்னர் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு இச்செய்தி உண்மையாக இருக்குமானால் அவர்கள் நபி என்பதற்கு யாதொருசந்தேகமுமில்லை .   ஏனெனில் இச்சமாச்சாரத்தைவெகு தூரத்திலிருந்து அறிந்து அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று சொன்னார் . சில நாட்களில் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது உண்மையாகவே முடிந்தது . குஸ்ரு பர்வேஸ் கொல்லப்பட்டுப்போனானென்றும் , அவனுடைய குமாரனான ´ வேரியா அரச பாரத்தைஏற்றிருக்கிறானென்றும் வரையப்பட்ட அறிக்கை எமன் தேசத்து கவர்னருக்குக் கிடைத்தது . அதிலிருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதரென்பது அக்கவர்னரின் மனதில்நன்கு பதியவே , அவர் உடனே இஸ்லாத்தைத் தழுவினார் . அவருடன் எமனிலிருந்தபார்ஸி தேசத்தார் அனைவருமே இஸ்லாத்தைத் தழுவினார்கள் . எகிப்து தேசத்துக்கிருத்தவ அரசனான முகெளகிஸ் என்பவருக்கு ஹாதிப்இப்னு அபீபல்தஆ ( ரலி ) என்பவர் வசம் ஒருகடிதம் அனுப்பினார்கள் .                        
                       


     இன்ஷா அல்லாஹ் அக்கடிதம்அடுத்த இதழில் ....!