மறைந்தும்வாழும் பதுரு சஹாபாக்கள்
மேற்கூறிய குர்ஆன் வசனத்திற்கு அல்லாமா முல்லா அலிய்யுல் காரி ( ரஹ் ) அவர்கள் விளக்கம் கூறும்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்ட ஷுஹதாக்களின் உடலுக்கும், உயிருக்கும் தொடர்புகள் இருந்து கொண்டிருக்கும். அத்தொடர்பினால் தான் மண்ணறையில் இருந்து குர்ஆன் ஓதும் சப்தமும் , மேலும் தொழும் காட்சியும் காணப்பட்டுள்ளது என அவர்கள் விளக்கமளிக்கிறார்கள் . ( மிர்காத் )
நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் விண்ணுலகப் பயணத்தின் போது மூஸா ( அலை ) அவர்களை பைத்துல் மக்தஸில் உள்ள செம்மணல் குன்றருகில் உள்ள அவர்களின் மண்ணறையில் தொழும் காட்சியில் கண்டேன் என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதும் இந்த அடிப்படையில்தான் .
ஷுஹாதாக்களின் உடலோடு உயிரின் தொடர்பு இருப்பதின் காரணமாகத்தான் அவர்களுக்கு ஸலாம் சொன்னால் பதில்ஸலாம் கேட்கப்பட்டுள்ளது . மேலும் அவர்களது சிலரின் மண்ணறைகளைசில சந்தர்ப்ப சூழலால் பல்லாண்டுகள் கழித்து தோண்டப்பட்டபொழுது அவர்கள் உடல்கள் அழியாமல்வைக்கப்பட்டது போலவே புத்தம் புதிதாக இருந்தது . இதற்கு பத்ரு ஸஹாபாக்களின் வரலாற்றில்ஏராளமான சான்றுகள் இருக்கின்றன .
அபூபக்கர்சித்தீக் ( ரலி ) அவர்கள் மரணவேளையில் செய்த வஸிய்யத்தின்போது நான் மரணித்துவிட்டால் , என்னை நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்லா ஷரீப் இருக்கும் அறையின்வாசலில் கொண்டு வையுங்கள் , அறை தானாக திறந்தால்என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கத்தில் அடக்குங்கள் . இல்லையெனில் பொது மைய வாடியில் அடக்கிவிடுங்கள் என்றார்கள் . அதன்படி அவர்கள் மரணித்த பின் அவர்களின்ஜனாஸாவை சுமந்து வந்து நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரவ்ளா ஷரீப் வாசல் பக்கத்தில் வைத்த பொழுது அறையின்கதவு திறந்து உள்ளேயிருந்து “ நபியின் உயிர் நேசரைஅவர்தம் நேசரோடு நுழைத்துவிடுங்கள் ” என சப்தம் வந்தது . இந்த நிகழ்ச்சியில் மண்ணறையில் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் ஹயாத்துன் நபியாக இருப்பதைப் போல பத்ரு ஸஹாபியும் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் நேசருமான அபூபக்கர் சித்தீக் ( ரலி ) அவர்களும் உயிருள்ள ஜனாஸாக்கள் தான் என்பதைதெளிவாக உணர முடிகிறது . ( நூல் : தப்ஸீர் கபீர் )
தல்ஹா ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள் : மதீனாவிலிருந்து சிரியாவின் திசையில் உள்ளகாஃபா என்ற இடத்தில் உள்ள என் சொத்தை கவனிக்கச் சென்று கொண்டிருந்தேன் . அப்போது இரவு நெருங்கிவிட்டது . உடனே அந்த இடத்திலிருந்த அப்துல்லாஹ் இப்துஅம்ரிப்னு ஹராம் அவர்களின் மண்ணறையின் அருகில் ஒதுங்கி இரவு தங்கினேன் . அப்போது கப்ரில் இருந்து குர்ஆன் ஓதும்சப்தத்தைக் கேட்டேன் . இதுமாதிரி அழகிய ஒரு சப்தத்தைநான் அதுவரை கேட்டதில்லை .
நான் நபிஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது இதைத் தெரிவித்தேன் . உடனே அவர்கள் , அது அப்துல்லாஹ் என்று உமக்குத் தெரியாதா ? நிச்சயமாக அல்லாஹ் உஹதுப் போர் தியாகிகளின்உயிரைக் கைப்பற்றி வைரத்திலான ஒரு கூண்டில் வைத்துள்ளான் . அதை சொர்க்கத்தின் நடுவில் தொங்கவிட்டிருக்கிறான் . இரவு நேரம் வந்துவிட்டால் , அவர்களின் உயிர்கள் உடலில் திரும்ப அனுப்பப்படும் . அப்படியே சுபுஹ் உதயமாகும் வரை இருக்கும் . பிறகு இருந்த இடத்திற்கே திரும்ப அனுப்பப்படும் எனக் கூறினார்கள். (நூல் : இப்னு முன்தா ஜாமி உகராமத்துல் அவ்லியாபாகம் 1 -151)
பக்தாதிலிருந்து 40 மைல் தொலைதூரத்தில் ஹள்ரத் ஸல்மான் ஃபார்ஸி ( ரலி ) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது . இதன் காரணமாக அந்த ஊருக்கே “ ஸல்மான் பாக் ” என்றழைக்கப்படுகிறது . இதன் பழைய பெயர் மதாயின் . இது பல காலமாக இராக்கின் தலைநகரமாக இருந்துவந்துள்ளது . இங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலைதூரத்தில்நாயகத் தோழர்களான ஹள்ரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ), ஹள்ரத் ஹுதைபா ( ரலி ) ஆகிய இரு ஸஹாபிகளின் கப்ரு உள்ளது . அருகே தஜ்லா நதி ஓடுகிறது. ஹள்ரத்ஹூதைபா ( ரலி ) அவர்கள் கப்ரில் தண்ணீர் புகுந்தது . ஹள்ரத்ஜாபிர் ( ரலி ) அவர்களின் கப்ரிலும் அது வெளிப்பட்டது .
இந்த நிலையில் , முதலாம் பைசல் மன்னர் மற்றும் இராக் தலைமைமுஃப்தீ ( நீதிபதி ) ஆகியோர் தனித்தனியாகக் கண்ட கனவில் மேற்படிஇரு ஸஹாபாக்கள் தோன்றி எங்களின் கப்ருகளை இடம் மாற்றுங்கள் என்று கூறினார்கள் .
முஃப்திசாஹிப் அவர்கள் கப்ரைத் தோண்டி புனித உடல்களை அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான வேறுஇடத்திற்கு மாற்ற அனுமதியளித்தார் . மன்னர் அதற்கான தேதிமுடிவு செய்து பத்திரிக்கைகளுக்கு தகவல் கொடுத்தார் . இந்த அரியநிகழ்ச்சியினைக் காண துருக்கிமற்றும் எகிப்து நாட்டிலிருந்து அரசாங்க தூதுக் குழுவினர் குறிப்பிட்ட தேதியில் வந்துசேர்ந்தனர் . வெளிநாடுகளிலிருந்து எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் , பல்வேறு கொள்கை கோட்பாடு உடையோர்களுமாக சுமார்ஐந்து லட்சம் பேர் மதாயினில் ஒன்று கூடினர் . அந்த சிறிய நகரம் இரண்டாம் பக்தாதாக காட்சி அளித்தது .
ஹிஜ்ரி 1350 துல்ஹஜ் மாதம் கடைசிப்பத்தில் 1932 ஏப்ரல் மாதம் ஒரு திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு உலக நாடுகளின் தூதர்கள் இராக்பாராளுமன்ற உறுப்பினர்கள் , மன்னர் பைசல் மற்றும்இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஹள்ரத் ஹுதைபா ( ரலி ) அவர்களின் பூத உடலும் கிரேன்மூலம் வெளியேகொண்டு வரப்பட்டது . மன்னர் பைசல் இராக் தலைமை முஃப்தி துருக்கிகுடியரசின் அமைச்சர் முக்தார் பட்டத்து இளவரசர் பரூக் ஆகியோர் புனித உடல்களை மிகுந்தமரியாதையுடன் பெற்று அதற்காக விஷேசமாக உருவாக்கப்பட்ட கண்ணாடிப் பேழையில் வைத்தார்கள் . அந்த இரு ஸஹாபிகளின் புனித உடலைப் பொதிந்திருந்த கஃபன் துணிமட்டுமல்ல அவர்களின் தாடி முடிகூட நல்ல நிலையில் புத்தம் புதிதாக இருந்ததைப் பார்த்தால்பதிமூன்று நூற்றாண்டு காலத்திற்கு முன்புள்ள பழமை வாய்ந்த ஜனாஸாவாக அது இல்லாமல் சிலமணி நேரத்திற்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டதைப் போன்று புத்தம் புதிய ஜனாஸாக்களாகஇருந்தன .
இதில் மிகுந்த ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் , அந்த இரு ஸஹாபாக்களின் கண்கள் புத்துயிரோடு ஒளிவீசிக் கொண்டிருந்ததுதான் . பலபேர் அதில் பார்வையைசெலுத்தினர் . ஆனால் அவர்களால் கூர்ந்து பார்க்க முடியவில்லை . பெரிய பெரிய மருத்துவர்களெல்லாம் இதைக்கண்டு வியந்தனர் . ஏனெனில் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் கண் அதன் பார்க்கும் சக்தியை இழந்துவிடும் . ஆனால் இங்கு 13 நூற்றாண்டு காலமாகியும் , அவர்களின் கண்கள் கெடாமல் அப்படியே உள்ளது . ஜெர்மனைச் சார்ந்த ஒரு கண் மருத்துவ நிபுணர்இதைக் கண்ணுற்ற உடனே அந்த இடத்திலேயே தலைமை முஃப்தியின் கரம் பற்றி முஸ்லிமாகிவிட்டார் . இஸ்லாம் சத்தியமானது என்பதற்கு இதைவிடபெரிய ஆதாரம் வேறு என்ன தேவையிருக்கிறது ? என்று கூறினார் .
புனிதப்பேழையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவர்களின் முகத்திலிருந்து கஃபன்விலக்கப்பட்டது . அந்தப் புனித உடலுக்கு இராக் இராணுவ வீரர்கள்மரியாதை செலுத்தினர் . பின்னர் கூட்டங்கூட்டமாக வந்துஎல்லேரும் ஜனாஸாவைப் பார்த்து மெய்சிலிர்த்து செய்வதறியாது திகைத்து நின்றனர் . வாழ்க்கையில் கிடைப்பதற்கரிய பாக்கியம் கிடைக்கப் பெற்றதை எண்ணி எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினர் . பின்னர் தொழுகையை நிறைவேற்றினர் .
மன்னர்களும்உலமாக்களும் புனித உடல்கள் வைக்கப்பட்டிருந்த அந்தப் பேழையை தங்களின் தோளின் மீது சுமந்தனர் . பிறகு உலகநாட்டுத் தூதுவர்கள் , உயரதிகாரிகள் தோள் கொடுக்க , தொடர்ந்து மற்றவர்களுக்கும் அந்த பாக்கியம்கிடைக்கப்பெற்றது . விமானங்கள் பூக்களைத் தூவி மலர் அஞ்சலிசெலுத்தின . வழிநெடுக பெண்களும் பேழையை ஜியாரத் செய்யஅனுமதியளிக்கப்பட்டது . நான்கு மணி நேரத்திற்குள்புனிதப் பேழை இரண்டும் சல்மான்பாக் கப்ருஸ்தானை அடைந்தது . அல்லாஹு அக்பர் என்னும் முழக்கம் விண்ணைப்பிளக்க இஸ்லாத்தின் உயிருள்ள இரு தியாகிகளின் புனித உடல்கள் ஹள்ரத் சல்மான் பார்ஸி ( ரலி ) அவர்களின் கப்ருக்குப் பக்கத்தில் நல்லடக்கம்செய்யப்பட்டது . மறுநாள் பக்தாதின் திரையரங்குகளில் இந்தபடம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது . இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்றபக்தாத் வாழ் முஸ்லிமல்லாத பல முக்கியப் பிரமுகர்களின் குடும்பங்கள் இஸ்லாத்தில் இணைந்தன .
( தகவல் : மஆரிஃப் மாத இதழ் , ஜனவரி 1979 ஆஜம்கட் உ . பி . ஆதாரம் : ஏக் ஆலமி தாரீக் ஓர் உலக வரலாறு )
இறைவழியில்உயிர் நீத்த தியாகிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சரியான சான்றாகும் . பத்ரு ஸஹாபியான ஹள்ரத் குபைப் ( ரலி ) அவர்கள் கழுமரம் ஏற்றப்பட்டு அம்பெய்துகொல்லப்பட்டார்கள் . அப்போது எதிரிகள் அவர்களின் திருமுகத்தைகிப்லா அல்லாத திசையில் திருப்பி வைத்தார்கள் . பின்னர்வந்து பார்த்தால் அந்த முகம் கிப்லாவை நோக்கி இருக்கக் கண்டார்கள் . தொடர்ந்துபலமுறை அதை வேறு திசையில் திருப்பித் திருப்பி வைத்துப் பார்த்தார்கள் . பின்னர் அவர்கள் தங்களது இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டி வந்தது . இருந்தபடி அப்படியே விட்டுவிட்டார்கள் . ஹள்ரத் குபைப் ( ரலி ) அவர்களின் உடல் கழுமரத்தில் தொங்கிக் கொண்டுஇருந்தது . அதைப் பாதுகாப்பதற்கு நாற்பது வீரர்கள்அதைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் .
மதீனாவில்நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் அந்த உடலை கீழே இறக்குவாரோ அவருக்குசுவனம் உண்டு என சுபச்செய்தி சொன்னார்கள் . இதைக் கேட்ட ஜுபைர் ( ரலி ) அவர்களும் , மிக்தாத் இப்னு அஸ்வத் ( ரலி ) அவர்களும் இதற்குத் தயார் என அறிவித்துபகலில் ஒளிந்து இரவில் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்னும் இடத்திடற்கு வந்து சேர்ந்தார்கள் . அங்கு கழுவேற்றப்பட்ட பலகையைச் சுற்றிபாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டு இருந்தார்கள் . அவ்விரு ஸஹாபிகளும் ( அப்பலகையிலிருந்து ) அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினர் அப்போது அந்தப் புனிதமான உடலைப் பார்த்தால்உடல் சிதையாமல் இணைந்து இருந்தது . கொல்லப்பட்டு நாற்பது நாட்களாகியும் இதில்ஒரு மாறுதலும் ஏற்படவில்லை . அவர்களுடைய கை காயத்தின் மீதிருந்து இரத்தம்கொட்டிக் கொண்டு இருந்தது . நிறம் இரத்த நிறமாக வாடை கஸ்தூரி வாடையாக இருந்தது . இதை ஜுபைர் ( ரலி ) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள் . அப்போது எதிரிகள் விழித்துப் பார்த்த போதுகுபைபைக் காணவில்லை . உடன் குறைஷிகளுக்கு தகவல்கொடுக்கப்பட்டு 70 குதிரை வீரர்கள் விரைவாகச் சென்று ஜுபைர் ( ரலி ) அவர்களை மடக்கிய போது அவர் ஜனாஸாவை தரையில்போட்டார் . உடனே பூமி அவரை விழுங்கிக் கொண்டது . தனாலேயே அவர் பளீவுல் அர்ள் ( பூமி விழுங்கியவர் ) என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறார் . ( நூல் : உம்தத்துல் காரி 101 / 17)