இங்கே துயுலுகிறார்கள்
ஒருவர் இறந்த பின்னர் தானே கல்லறை கட்டுவார்கள் ? என்று விசாரித்தபோது தான் மத்திய காலத்தில்ஆட்சி புரிந்த அரச பரம்பரையில் ஒரு பழக்கம் இருந்தது என்று தெரிய வந்தது . இந்தச் செய்தி விபரம் எனக்கு அதே காலக் கட்டத்தில் எகிப்தின் ஆட்சி புரிந்த மம்லூக்கிய மன்னர்களின்இது போன்ற வழக்கத்தை ஞாபகப் படுத்தியது . அப்போது இதுபற்றி விசாரித்தபோது , பாரோனிய மன்னர்கள் தான் ஆட்சிக்குவந்ததுமே தங்களுடைய நிரந்தரமான வாழ்க்கைக்குரிய வீட்டை ( கல்லறை ) அதாவது உலக அதிசயங்களில் ஒன்று என்றுசொல்லப்படும் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கி விடுவார்களாம் . அதற்குக் காரணம் ‘ கா ’ என்று அவர்கள் அழைத்த உயிர் அல்லதுஆன்மா இறப்பதில்லையாம். அதனால் இறந்த உடலைப் பதனப்படுத்தி ( மம்மிகளாக ) எல்லா விதமான பாதுகாப்புகளுடனும் , உயிருடன் இருப்பதற்குத் தேவைப்படும்அத்தனையையும் சேர்த்து இறந்தவரை அடக்கம் செய்தார்கள் . குலி வமிச சுல்தான்களும் தாங்கள் உயிருடன்இருக்கும் போதே மசோலியத்தை கட்டி வைத்தார்கள் என்றாலும் ஒரு பெரிய வித்தியாசம் , இவர்கள் இறைமறை வழி வந்தவர்கள் . அரியணையில் ஏறும்போதே தங்கள் மண்ணறையைநினைவு படுத்திக் கொள்ளும் விதமாக , இம்மை மறுமையை உணர்ந்தவர்களாக ஆட்சி செய்யும் மனப் பக்குவத்தைப்பெற்றிருந்தார்கள் . அதே சமயம்தங்களது வளத்தையும் , பலத்தையும் பிரதிபலிக்கும் விதமாக தங்கள் மண்ணறையைக் கட்டி வைப்பதில் ஆர்வம் காட்டினார்களாம் .
எகிப்திய மம்லூக்கிய மன்னர்கள் இவர்களைப் போலல்லாமல் தங்கள் மண்ணறையையொட்டி மசூதியையும் , மதுரஸா ( பள்ளிக்கூடம் ) வையும் சிலர் மரீள் ஸ்தானை ( ஆஸ்பத்திரி ) யையும் கூட சேர்த்துக் கட்டி வைத்துபுண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டு போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாதது . ஒரே வளாகத்துக்குள் ஒரே வமிசப் பரம்பரைமன்னர்கள் ஒன்றாகக் கூடி நிரந்தரமாகத் துயிலுவது ! இஃதோர் அரிய காட்சி என வரலாற்றாசிரியர்கள்வியக்கிறார்கள் .
ஒரு குதுப்ஷாஹி சுல்தானின் இறப்புக்குப் பிறகு நடக்கும் சவ அடக்கம் என்பது ஒருமுக்கியமான பொது நிகழ்ச்சியாகும் . சகல மரியாதைகளுடனும் , தக்க விதத்தில் இறுதிச் சடங்குகளை செய்வித்து கண்ணீரும் கம்பலையுமாககுடிமக்கள் தங்களுடைய சுல்தானுக்கு இறுதி விடையளிப்பது பற்றி வரலாற்றாசிரியர்கள் நிறையவேகுறிப்பெழுதி வைத்துள்ளார்கள் . நீங்களும் கூட தெரிந்து வைத்திருப்பீர்கள் ... என்று நீண்ட கல்லறைக் கதைக்குமுன்னுரை சொன்னவர் எங்களை ஏறிட்டுப் பார்த்தார் .
“ கொஞ்சம் தெரியும் ... விஷயம் தெரிந்த நீங்களே விளக்கமாகச் சொல்லி விடுங்களேன் ” என்று சொன்னதும் அவர் தொடர்ந்து கோல்கொண்டாகோட்டைக்குள் அரண்மனையில் இறந்து போகும் சுல்தானை கோட்டையின் வட திசையிலுள்ள “ பன்ஜாரா தர்வாஜா ” வழியாக வெளியே கொண்டு வந்து அடக்கஸ்தலத்துக்காகஅமைக்கப்பட்ட பூங்கா வளாகத்தின் தென் பகுதியிலுள்ள நீண்ட அறைக்குக் கொண்டு வருவார்கள் . இதோ இதுதான் அந்த அறை ... இங்கே போர்டு கூட வைத்திருக்கிறார்கள் , பாருங்களேன் (MorturyBath) அதாவது , ஜனாஸா குளிப்பாட்டும் இடம் என்று விரல்சுட்டிக் கட்டினார் . அங்கும்இங்குமாக மேலும் கீழுமாக கண்களை ஓட்டினோம் . மனிதர்கள் நடமாட்டம் குறைந்த , அந்த வெளிச்சக் குறைவான அறைக்குள்இருந்ததெல்லாம் வெளவால் கூட்டம் ... வெளவால் நெடி மூக்கை தாக்க , அப்புறம் ? என்று கதை கேட்கும் ஆவலைத் தெரிவித்தோம் .
இதோ , இந்த மேடையில் தான் ஜனாஸா ( பிரேதம் ) வைக் கிடத்துவார்கள் . இதற்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாக பக்கத்திலுள்ளகிணற்று நீரை அனுப்புவார்கள் ... இதில் அதிசயம் என்னவென்றால் , அந்த மத்தியக் காலத்திலே குளிர்ந்தநீருக்கு ஒரு குழாயும் வெந்நீருக்கு ஒரு குழாயும் வைத்திருந்தார்கள் . தேவைக்குத் தக்கபடி வெயில் காலத்தில் சாதா தண்ணீரையும் குளிர்காலத்தில் வெந்நீரையும் உபயோகித்து ஜனாஸாவைக் குளிப்பாட்டுவார்கள் .
எப்படி வெந்நீர் வரும் ..? எங்களில் ஒருவர் கேட்க , இதோ இங்குள்ள பெரிய அடுப்பு குழாய்நீரை சூடாக்கி அனுப்பும் .. என்று கையை நீட்டிக் காட்ட , நாங்கள் எல்லோருமே பெரியவர் சிறியவர்என்றில்லாமல் குழந்தைத்தனத்துடன் அவர் சுட்டிக் காட்டிய இடத்தைக் குனிந்து பார்த்தோம் . பார்த்த நாங்கள் வியப்பில் மூழ்கியவர்களாகநின்றோம் . அன்றைய பொறியியல் வளர்ச்சியைஎண்ணியெண்ணி !
அதோடு கூடவே சமய சந்தர்ப்பம் பாராத சந்தேகம் ஒன்று முண்டியடித்துக் கொண்டு என்னுள்எட்டிப் பார்க்க , பாய்சாப் ... வெயில் காலத்தில் சாதா தண்ணீரையும் , குளிர் காலத்தில் வெந்நீரையும் கொண்டு , ஜனாஸாவைக் குளிப்பாட்டுவார்கள் என்றுசொன்னீர்களே ... இறந்துபோன சடலந்தானே .. என்னசீதோஷ்ண காலமாயிருந்தால் என்ன , சாதா தண்ணீர் போதாதா . வெந்நீர் எதற்கு ?? என்றேன் .
அங்கு நின்ற எல்லோருமே , அதுதானே ...! நான் கூட அப்படித்தான் கேட்க நினைச்சேன் ... என்று ஆளுக்காள் ஒத்துப் பாட ...
நல்லாவே ஒரு கேள்வியைக் கேட்டு வச்சீங்க ... உசிரும் உணர்வும் இல்லாத ஜனாஸாவை எந்தநீர் ஊற்றிக் கழுவினால் என்ன ? இந்த வெந்நீர் வசதி இறந்த சடலத்துக்கு இல்லேங்க ... இதைக் குளுப்பாட்டுகிறவங்கவசதியை நினைச்சுதாங்க ... நடுங்குறகுளிர் நேரத்துல நீங்களும் நானும் பச்சைத் தண்ணீர்லே கையை வைப்போமா என்ன ? என்று சொன்னாலும் சொன்னார் ... அந்த இறுக்கமான சூழ்நிலையிலும்கூட அடக்க முடியாதவர்களாக அத்தனை பேருமே சப்தமாக வாய்விட்டுசிரித்து விட்டோம் . அவரும்கூடவே சிரித்து விட்டு , விட்டஇடத்திலிருந்து கதையை முடித்து , கூலி வாங்கும் முனைப்பில் மீதியையும் சொல்லி வைத்தார் .
கழுவிக் குளிப்பாட்டிய ஜனாஸாவை வாசனை பூசப்பட்ட துணியால் சுற்றி அங்கிருக்கும் ஒரு கருப்பு நிற சலவைக்கல் மேடையில் கிடத்துவார்களாம் . நெருங்கிய உறவினர்கள் , குடும்ப அங்கத் தினர்கள் , பிரபுக்கள் , உயர்மட்ட உத்தியோகஸ்தர்கள் தங்களுடையஇறுதி மரியாதையை அங்கு வந்து செலுத்தியதும் , கபனிட்டு சந்தூக்கில் வைத்து , அந்த சுல்தான்தனக்காக கட்டி வைத்திருந்த மசோலியத்திற்குப் பக்கத்திலுள்ள மசூதிக்கு வருவார்களாம் . அங்கு அவருடைய ஜனாஸாத் தொழுகை நடந்ததும்மசோலியத்தின் மத்தியில் தோண்டப்பட்டிருக்கும் குழியில் புதைத்து மூடி விடுவார்கள் . சாதாரண முஸ்லிம் குடிமகனைப் போலவே .
இறைவன் சந்நிதியில் மக்களை ஆண்டவனும் , ஆளப்பட்டவனும் ஒன்றுதான் என்பது போல் ஒரு சுல்தானின் சகாப்தம் அதோடு முடிந்து விடுகிறது ! ஆனால் , காலப் பாதையில் கருங்கல் காவியமாய் , நம் முன்னோர்களின் அற்புதக் கலாச்சாரத்தைபிரதிபலிக்கும் வகையாக , அவர்களின்மாண்பையும் மாட்சியையும் எடுத்தோதும் விதமாக உறைந்து நிற்கின்றன . இந்தப் புராதனக் கலைச் சின்னங்கள் , இதன் அருமை பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் உள்ளன நம்முடைய இன்றைய நடவடிக்கைகள் .
நாட்டையாண்ட மாமன்னர்கள் மீளாத்துயிலில் ஆழ்ந்துள்ள இந்த வரலாற்றுச் சின்னங்களுக்குஎந்தவொரு பங்கமும் நேராமல் பாதுகாத்து , கண்ணியப்படுத்துவதில்தான் இருக்கின்றது நம்முடைய நாகரீகமும்நன்றியுணர்வும் .
தக்காணத்திற்கு பலமுறை படையெடுத்துவந்த முகலாய சக்ரவர்த்திகளின் படைகள் கூட இந்தக் கல்லறைப் பொக்கிஷ ங்களுக்கு எந்தவித ஊறும் சேதமும் நேர்ந்துவிடாதவகையில் கவனமுடன் நடந்து கொண்ட வரலாற்று உண்மைகள் ஏராளம் . அப்படியொரு கண்ணியமிகு செயலால்தான் இன்றைக்கும் அவற்றை நாம் கண்டு பெருமைப்படும் அளவில் சிதிலடையாமல் உள்ளன . ஆனால் , இன்றைய சுற்றுச்சூழல் மாசு , நகர விரிவாக்கம் சுற்றுலாப் பயணிகளைக்கவருவதற்காக வியாபார ரீதியாகப் போடப்படும் திட்டங்கள் .... என்று எல்லாமே காலத்தால் அழியாது நிற்கும்இந்தப் புராதனச் சின்னங்களுக்கு ஊறு விளைவிப்பதாகவே உள்ளன .
உதாரணத்துக்கு குதுப் ஷாஹி கல்லறை வளாகத்தை மையமாக வைத்து பல கோடி ரூபாய் செலவில்அதையொட்டி பதினேழு ஏக்கர் நிலப்பரப்பில் இராட்சத இராட்டினங்களும் , ஹைடெக் பொழுதுபோக்கு சாதனங்களும் ஏற்படுத்தி “ மனமகிழ் பூங்கா ஒன்றை அமைக்கவும் , ஹைதராபாதிய அறுசுவை செளக்கிலிருந்துபடைத்தளிப்பதற்குமாக பல திட்டங்கள் உள்ளனவாம் . போதாததற்கு வழியிலேயே தண்ணீர்ப் பூங்காஒன்றை வேறு அமைத்துள்ளனர் . பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இவையெல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது ... நூற்றுக் கணக்கில் வரும் பயணிகள்ஆயிரக் கணக்கில் வருவார்கள் .
நகருக்கும் அழகும் , சிறப்பும்சேர்க்கும் என்ற அடிப்படையில் , இலாபம் சம்பாதிக்கும் ரீதியில் செயல்படுத்தப்பட இருக்கும் அத்தனையும்மக்கள் ரசிக்கத்தக்க வகையில் இரவு பகல் என்று பாராமல் விழாக்கோலம் பூண்டு நிற்கும் . ஆனால் , அது எவ்வளவு தூரம் இந்தப் புராதனச்சின்னங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை . இந்த ஒரு நல்ல காரணத்துக்காகவே கலையார்வமும் , புராதனச் சின்னங்களை பாதுகாக்கும்பணியில் உள்ளவர்களும் இத்தகைய திட்டங்களை வன்மையாக எதிர்க்கிறார்கள் . இந்த வரலாற்றுப் பொக்கிஷங்களை நிரந்தரமாகக்கப்பாற்ற வேண்டுமானால் கோல்கொண்டா கோட்டையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உலகக்கலாச்சார முக்கியத்துவம் உள்ள மிகுதியாக ஏற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் . இதை நான் சொல்லவில்லை .. இவற்றின் முக்கியத் துவத்தை உணர்ந்தபேரறிஞர்கள் சொல்லுகிறார்கள் .
ரஷ்யா போன்ற கம்யூனிச சித்தாந்தமுள்ள நாடுகளில் கூட புராதனக் கலையழகு மிக்க கிறிஸ்துவ ஆலயங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும்ஆர்வமும் முயற்சியும் நம் கண்களைத் திறப்பதாக இருக்க வேண்டும் . இதில் குறுகிய ஜாதி , மத , இன காழ்ப்புணர்ச்சிகளும் , மனப் போக்கும் நம் கண்களைக் குருடாக்கிவிடக் கூடாது . இந்த மண்ணின் மாமன்னர்கள் ஆழ்ந்துறங்கும் அமைதிப் பூங்காவை கண்ணியத்துடனும் கவனத்துடனும்பாதுகாப்பது நம் கடமையும் அரசின் பொறுப்பும் ஆகும் .