• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      Jun 2014      »      அறிவுரைகள் !


ஆட்சியில் அமர்பவர்களுக்குஹல்ரத் அலிய் ( ரலி ) அவர்களின்

அறிவுரைகள்



  • உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்களால் நிரந்தரமாக நேர்மையைக் கடைபிடிக்க முடியாது
  • சிலவேளைகளில் எல்லாம் வல்ல இறைவனின் கருத்து மக்களின் நாவிலிருந்து வெளிவருகிறது
  • அன்புக்கு உலகத்தையே அடக்கியாளும் பேராற்றல் உண்டு
  • நான் இந்நாட்டுக்கு அதிகாரி பொறுப்புள்ள இந்த வேலைக்கு நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் . குற்றவாளிகளை நான் தண்டித்துதான் ஆக வேண்டும் .   என்வேலையில் நான் குறை வைக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டு சிறிய குற்றங்களுக்கெல்லாம்கொடிய தண்டனை கொடுத்து விடாதீர் . நெஞ்சில் நிழலாடும் பெருமையுணர்வே உம்மைஇப்படிப் பேச வைக்கிறது . தண்டனை கொடுக்கும் விஷயத்தில் நீர் ஆர்வம் காட்டக் கூடாது .
  • அநீதிசெய்கிறவர்கள் இதை நன்கு கவனிக்க வேண்டும் . இறைவனின் கருணையை அழிக்கும் செயல்ஒன்று உண்டென்றால் அது அநீதிதான் . பாதிக்கப்பட்ட மக்களின் ஈனப் புலம்பலைஇறைவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் . அநியாயக் காரர்களை தண்டிக்கத் தயாராக இருக்கிறான் .
  • இறைவன்மீது அவநம்பிக்கை ஏற்படும்போதுதான் உலோபத்தனம் , கோழைத்தனம் , பேராசைக்குணம்ஆகிய மூன்றும் உருவாகின்றன .
  • கசப்பானஉண்மையைத் துணிந்து கூறுகிறவர்கள் யாரேனும் இருக்கிறார்களா ? இறைவனின்கட்டளைக்கு எதிராக நீர் நடக்க முற்படும் போது உமக்கோ உமது அதிகாரத்துக்கோ அஞ்சாமல்நேர்மைக்கு வாதாடும் அமைச்சர்கள் யாரேனும் இருக்கிறார்களா ? அவர்களைத்தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளும் . அவர்கள் சிறந்தவர்கள் . கலந்துஆலோசிப்பதற்குத் தரமானவர்கள் .
  • செய்யாதசெயலுக்குப் பாராட்டையும் கண்ணியத்தையும் எதிர்பார்ப்பது அறியாமை .   இருக்கும் கண்ணியத்துக்கே அது ஆபத்தை உண்டாக்கிவிடும் .
  • நற்காரியங்களுக்குவித்திட்டவர்கள் என்றைக்கும் பெருமையடையலாம் .   நற்காரியங்களை நசித்தொழித்தவர்கள் என்றைக்கும் அந்தக் கெட்டபெயருக்கு இலக்காகியே தீர வேண்டும் .
  • மார்க்கஅறிஞர்களையும் தத்துவ ஞானிகளையும் திரட்டி வைத்து , கருத்தரங்குநடத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் . இத்தகைய கருத்தரங்குகள் உமது ஆட்சியில்அடிக்கடி நடக்க வேண்டும் . நாட்டில் அமைதியை நிலைப்படுத்துவதற்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்கும்இது சிறந்த வழி . அரசியல் நடவடிக்கைகளில் மக்களின் திருப்பத்திற்குரியது எது , வெறுப்பிற்குரியதுஎது என்று கண்டுபிடிப்பதற்கும் இந்தக் கருத்தரங்குகள் துணை செய்யக்கூடும் .
  • நாட்டைஆளும் அதிபதியின் செயல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது என்ன தெரியுமா ? நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது ; நேர்மையைஅடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிவது  ஆட்சிக்குட்பட்டிருக்கும் மக்களுக்குச்சலுகையும் அன்பும் காட்டுவது இவைதாம் அரசர்களின் சிறப்புக்குத் துணை செய்கின்றன .
  • அவர்கள்செயலாற்றும்போது கலங்காதவர்களையும் வாதப் பிரதிவாதத்தின்பேது கோபப்படாதவர்களாகவும்இருக்க வேண்டும் . உண்மையை எடுத்துக் கூறி தீர்ப்பு வழங்கும் போது துணிவுள்ளவர்களாகவும்சொந்த விருப்பு வெறுப்புக்கு இடந்தராதவராகவும் இருக்க வேண்டும் . எதிர்ப்பட்டிருக்கும்பிரச்சினையை அடிமுதல் நுனிவரை அலசி ஆராயும் மனப்பான்மையும் நேர்மை என்று கூறும் மனப்பண்பும்அவர்கள் பெற்றிருக்க வேண்டும் . அவர்கள் மற்றவர்களின் முகஸ்துதிக்கு மயங்கக்கூடாது . மதிமயக்கம் அவர்களை அணுகக் கூடாது .
  • அவர்கள்நாட்டின் அமைதியையும் நீதியின் மானத்தையும் காப்பாற்றுகிறவர்கள் , அவர்கள்உம்மிடம் உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் . மற்றவர்களால் எதிர்பார்க்க முடியாதபடி மேலான அந்தஸ்தை நீர் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் . அப்போதுதான் நீதியை நசுக்க நினைக்கும் அதிகாரிகள் பயப்படுவார்கள் . பதவிக்கும்அந்தஸ்துக்கும் தகுந்தவாறு அவர்களின் வருமானத்தையும் உயர்த்தி வையும் . மற்றவர்களின்கையை எதிர்பார்க்கும் நிலையில் அவர்களை வைத்து விடாதீர்  அப்போதுதான்அவர்களால் லஞ்சப் பிணியிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முடியும்