மதுரை தமிழ்ச்சங்கப்புலவர்
நாகூர் குலாம் காதிறு நாவலர்
நாகை ஜி . அஹ்மது .
குலாம் காதிறு அவர்கள் பாவலர் , பத்திரிக்கையாளர் , உரையாசிரியர் , நாவலர்என வரலாற்றுத் தடம் பதித்த பல்கலைச் செல்வராவார் . புலவர்கோட்டை எனப் பெயர் பெற்ற நாகூர் நன்னகரில் கி . பி . 1833 ஆம்ஆண்டு குலாம் காதிறு பிறந்தார் . இவரதுதந்தையார் பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தர் . இவரதுமுன்னோர் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து நாகூர் வந்து குடியமர்ந்தனர் .
குலாம் காதிர் நாவலர் ஒன்பது வயதில் இறைவேதம் குர்ஆனையும்அறபுத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் ஓதி முடித்தார் . பன்னிரண்டாவதுவயதில் நாகூரில் வாழ்ந்த தமிழ் ஆசிரியர் நாராயண சுவாமியிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப்பயின்றார் . இவரது இருபத்தி எட்டாம் வயதில் தமிழ் ஆசிரியர் இறந்துவிட்டதால் , மகாவித்வான்திரு . மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ்ப் படிப்பைத் தொடர்ந்தார் . அதன்பின் தந்தையின் நண்பரும் வழக்கறிஞருமான சரவணப் பெருமாள் ஐயரிடம் ஆங்கில மொழியைக் கற்றார் . ஆங்கிலநாவலாசிரியர் ஜி . டபிள் . யு . எம். ரெனால்ட்ஸ் எழுதிய உமறு பாட்சா யுத்த சரித்திர நாவலை தமிழில் மொழிபெயர்த்தார் .
முதல் முதலில் தனிக்கவிதைகள் கீர்த்தனைகள் இயற்றினார் . பிறகு பினாங்கு சென்று ‘ வித்யாவிசாரினி ’ என்ற பெயரில் தமிழ் வார இதழ் ஒன்றினை 1888 இல்நடத்தினார் . நன்னூல் விளக்கம் எழுதினார் .
பொருத்த விளக்கம் ’ நூலிற்கு சுதேசமித்திரன் நாளிதழில் வெளிவந்த மதிப்புரையை ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் பார்த்து பெருமகிழ்வுற்று கி . பி . 1901 ஆம்ஆண்டு பாஸ்கர சேதுபதியுடன் நாகூர் சென்று , குலாம் காதிர் நாவலரை சந்தித்துஉரையாடினார் . அப்பொழுது நாவலர் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்றினை நிறுவும்படிக்கேட்டுக் கொண்டார் . தமிழ்ச்சங்கத்தின் முதற்பெரும் உறுப்பினராக குலாம் காதிறுநாவலரின் பெயரைச் சேர்த்தார் .
அறபு மொழியின் கடுமையானஅச்சர வாக்கியங்களுக்கு நேரான தமிழ் மொழியினை அறிந்து அறபுத் தமிழ் அகராதி ஒன்றினைநாவலர் சிறந்த முறையில் வெளியிட்டார் .
கடந்த 2007 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தமிழக அரசு குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை நாட்டுடைமைஆக்கியது .