• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai    »    2014    »    Jun2014    »    ஞானதுளிகள்


ஞான துளிகள்

திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை


ஞான மார்க்கத்தில் செல்கிறவன்தான் நாடுவது இது அல்ல , இது அல்ல என்று உலக வி ­ ஷயங்களை ஒதுக்கித் தள்ளுகிறான் . அப்படிச் செய்தால்தான் அவனுக்குப்பிரம்மத்தின் அருட்கொடை கிட்டும் . படிக்கட்டில் ஒவ்வொரு படியையும் புறக்கணித்து விட்டு மாடிக்குமேலே ஏறுவதற்கு நிகரானது அத்தகைய விசாரம் . ஆனால் பிரம்மத்தைக் காட்சி கண்ட பிறகு அவன் மற்று மொன்றைத் தெரிந்துகொள்கிறான். மாடியும் அதற்குரிய படிக்கட்டும் எல்லாம் ஒரே பொருளில் ஆக்கப்பட்டவைகளெனஉணருகிறான் . அதே பாங்கில் பிரம்மமும் பிரபஞ்சமும் ஒன்று என்பதை பிரம்மஞானி அறிகின்றான் .

பர ஞானத்தை அடையப் பெற்றவர்கள் பாலர்கள் போன்று ஆகின்றனர் . முக்குணங்களில் அவர்கள் கட்டுப்படாதவர்களாயிருக்கிறார்கள் .

ஞானியின் இயல்பு ஒரு பாலகனது இயல்புபோன்றது . பாலகன் ஒருவனுக்கு முக்குணங்களில் பற்றுதல் இல்லை . ஓரணாப் பெறும்படியான பொம்மையைக்கொடுத்து ஐந்து ரூபாய் பெறும்படியான வேஷ்டியை அவனிடமிருந்து சுலபத்தில் வாங்கி விடலாம் . “ இது என் தந்தை தந்தது . நான் கொடுக்கமாட்டேன் என்று முதலில் ஆட்சேபிப்பான் . ஆனால் பொம்மையின் பெருமையை எடுத்தோதினால்உடனே தன் எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்வான் . அங்ஙனம் ஞானி ஒருவனுக்கு உலகப்பொருள் எதிலும் பற்றுதல் இல்லை


மனதினின்று பற்றுதல் அனைத்தும்அகன்று போகும்போது மிகக் காட்சி காணுகிறான் . தூய உள்ளத்தில் எழுவதெல்லாம் இறைவனுடைய ஆணையாம் .   தூய மனதே தூய புத்தி ஆகின்றது . தூய புத்தியே ஆத்ம சொரூபம் . தூயபொருள் என்று பரம் பொருள் ஒருவனைத்தான்பகரலாம் .

குழந்தை ஒன்றினிடத்துப் பேச புத்தியில்லை . ஜாதி வேற்றுமை இன்னதென்று அதற்குத்தெரியாது . கீழ்க் குலத்தவன் ஒருவனைத் தாய் சுட்டிக் காட்டி , இவன் உன் தமையன் என்று சொன்னால்அவள் கூற்றை அக்குழந்தை நம்புகிறது . அவனுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்பதற்கும் குழந்தை தடைசெய்யாது . ஒரு ஞானியின் இயல்பும் அத்தகையது . கீழோர் மேலோர் , நல்லவர் கெட்டவர் என்று ஞானி பாகுபடுத்துவதில்லை .

மகாசீடர் தன் மெய்ஞ்ஞான குருவிடம்நீ பரப்பிரம்மமே , வேறு ஒன்றும் அல்ல , என்று இயம்பினான் . மெய்ஞ்ஞானி அவனை ஓரிடத்திற்குஅழைத்துச் சென்று அங்கிருப்பதைப் பார்க்கும்படிச் சொன்னார் . ஒரு பெரிய மரம் இருப்பதாகவும்அதில் கொத்துக் கொத்தாக நாவல் பழங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதாகவும் அவன்பகர்ந்தான் . இன்னும் அருகில் சென்று நன்றாகப் பார் என்றார் மெய்ஞ்ஞானி .  அப்படிச் செய்த சீடர் அப்பழங்கள் ஒவ்வொன்றும் சற்குரு சொரூபம்என்றான்பரப்பிரம்மத்தில் எண்ணிறைந்த அவதாரமூர்த்திகள் தோன்றி மறைகின்றனர் .

வேதாந்தத்தின் கோட்பாடு யாது ?

பிரம்மம் சத்தியம் ; ஜகத் மித்தை என்பது வேதாந்தத்தின்கோட்பாடு . ஜீவ வியக்தியோ வெறும் தோற்றமாம் . அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரம்மம் என்று வேதாந்திஒருவன் சாதிக்கிறான் . பிரம்மத்துக்குப் புறம்பாக ஒன்று மில்லை . நிறை ஞானிகள் பாலன் போன்று ஆனார்கள் . பாலன் போன்று ஆகிவிடுவதே ஞானிகளின்போக்கு . அவர்களுக்கு பிரம்மம் வேறு தாம் வேறு என்பதில்லை . பிரம்மஞானத்தில் நான் என்னும்ஜீவபோதம் அறவே அழிந்து போகிறது .

பரம்பொருளைப் பற்றிய ஞானம் அடையப்பெற்றவர் பித்தர் போன்றும் , பேயர் போன்றும் , பாலர் போன்றும் , ஜடப் பொருள் போன்றும் இருப்பதைக்காணலாம் .   பேத புத்தி அவர்களை விட்டு அறவே அகன்று போகிறது .

ஞானி ஒருவன் தியானம் பண்ணுகிற பொழுது கரைகாணாது எங்கும் நீர் நிறைந்திருப்பதாகவும் , அதில்தான் மீனாயிருந்து ஆனந்தமாகநீந்துவதாகவும் பாவிக்கிறான் .

நிறைஞானி ஒருவனுக்கு சாஸ்திரங்களைவைத்திருக்க வேண்டிய அவசியமில்லை . இறைவி ­ ஷயம் அனைத்தும் அவனுடைய அனுபவத்தில் இருக்கிறது .

ஆத்ம ஞானம் அடையப் பெற்றவனுக்கும்வெறும் ஏட்டுக் கல்வி கற்றிருப்பவனுக்கும் இடையில் பெரிய வேற்றுமை உண்டு . ஏட்டுக் கல்வியுடையவன் பேச்சில்வருவது வெறும் எச்சில் . ஆனால் ஞானியின்   வாயினின்று வருவது அமிர்தமொழி . அது உலகை உய்விக்கும் .