• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai      »      2014      »      Jun 2014     »    மருத்துவம்


( மருத்துவம் )

மூட்டுவலி நீங்கமுன்யோசனைகள் !

தலைவலியும் பல் வலியும்தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்வாங்க .   அத்துடன் மூட்டுவலியையும் சேர்க்கலாம் . அதுகொடுக்கும் இம்சை அத்தனை பெரியது . வயதானவர்களுக்கு வரக்கூடியது ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னுஎன்னும் மூட்டுவலி , மூட்டில் உள்ள திரவம் குறைந்து , ஒருவிதஇறுக்கம் உண்டாகி , உயிர் போகிற மாதிரி வலிக்கும் . நம்உடம்புல உள்ளே செல் , உடல் உறுப்புக்கு எதிரியாக வேலை செய்யறதோட விளைவு இது . 30 - 40 வயசுல உண்டாகிறது . ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்றவலி கை , கால் விரல்களில் உள்ள சின்னச்சின்ன மூட்டுகளில்கூட இந்த வலியைஉணரலாம் . முக்கியமாக காலை நேரத்தில் வலி அதிகமாயிருக்கும் . இதுசீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும் . பரம்பரையாவும் தாக்கக்கூடியது .

எந்த விதமான மூட்டுவலியா இருந்தாலும் , அது நம்ம சாப்பிடுற உணவோட ஓரளவு சம்பந்தப்பட்ட துன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள்.  அதே சமயம் மூட்டுவலியால் அவதிப்படற எல்லோருக்கும் அவங்களோடசாப்பாடு தான் காரணம்னு சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க . பரம்பரைத்தன்மையோ , வேற காரணமோ இல்லாமல் திடீர்னு மூட்டுவலியால் பாதிக்கப் படுறவங்க , முதல்லகவனிக்க வேண்டிய விஷயம் அவங்களோட டயட் ! மூட்டுவலியால பாதிக்கப் பட்டவங்களை இப்படி ஓர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப , அவங்கள்லபலரும் அசைவ உணவுப்பழக்கம் இருந்தது தெரிய வந்ததாம் . முதல்கட்டமாக அசைவத்துலேர்ந்து சைவத்துக்கு மாறச் சொன்னபோது அப்டின்னா சைவம் மட்டுமே சாப்பிடுறவங்களுக்குமூட்டுவலி வர்ரதில்லையான்னு கேட்கலாம் . அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப வலி குறையறதை  உணர்வதா சொல்றாங்க .

சோளம் , கோதுமை , ஆரஞ்சு , எலுமிச்சை , ஓட்ஸ் , கேழ்வரகு , தக்காளி , பால்பொருட்கள் , மிளகு , சோயா , கத்தரிக்காய் , உருளைக்கிழங்கு , அதிகக் காரம் , ஆல்கஹால் , முட்டை , வேர்க்கடலை , அதிகசர்க்கரை , வெண்ணெய் , மாட்டிறைச்சி , ஆட்டிறைச்சி ... இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்துற உணவுகளாம் .


மூட்டுவலியோட  அறிகுறிகளை உணர்ந்ததுமே முதல் கட்டமாக மேலே சொன்ன உணவுகளை ஒவ்வொண்ணாக நிறுத்திப்பார்க்கலாம்உணவு அலர்ஜியால் உண்டான வலியாக இருந்தால்  அதைநிறுத்தினதுமே குணம் தெரியும்  

இதய நோய் இருக்கிற சிலருக்கு  மூட்டுவலி இருக்கலாம்   .   அவங்க தினமும்   2   அல்லது  3 பூண்டைபச்சையா சாப்பிடுறது இதயம்  மூட்டு இரண்டுக்குமே  நல்லது .  ஒமேகா   -3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுவலிக்குநல்லது   .   ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல   ,   அக்ரோட்   ,   பாதாம்லஇது நிறைய இருக்கு   . வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தால் தினம் இஞ்சியை ஏதாவதுஒரு வகையில எடுத்துக்கிறது குணம் தரும்   .   மூட்டுவலி வந்ததும் என்னவோ ஏதோனுஅலறத் தேவையில்லை   .   முதலில் உங்க உணவை சரிபாருங்க   .   நீங்கஅடிக்கடி விரும்பிச் சாப்பிடுற ஏதோ ஒரு உணவு கூட அலர்ஜியாகி   ,   வலியைக்கொடுத்திருக்கலாம்.   அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய்   அதையும்அளவோடு எடுத்துக்க வேண்டியது முக்கியம்   எதுலேயும் குணம் தெரியாதவர்கள் மருத்துவரைப்பார்க்கலாம்   .